முதல் பக்க செய்திகள் 

அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு
நவம்பர் 18,2009,00:00  IST

Front page news and headlines today

புதுடில்லி : வரதட்சணை கொடுமை செய்வதாக, பொய்ப்புகார் கூறி பழிவாங்கும் மனைவிகளுக்காக சட்டத்தை பயன்படுத்தக்கூடாது; புகார் தந்தவுடனே, தீர விசாரிக்காமல் கணவன், அவன் குடும்பத்தினரை கைது செய்யக்கூடாது! - தங்களுக்கு சாதகமாக சட்டப் பிரிவு இருக்கிறது என்று, திட்டமிட்டு "பிளான்' போட்டு அப் பாவி கணவர்களை பழிவாங்கும் மனைவிகளுக்கு எதிராக முதல் முதலாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.இந்திய தண்டனை சட்டப் பிரிவு 498 ஏ. வரதட்சணை கொடுமை செய்யும் கணவன், அவர் குடும்பத்தில் உள்ள தந்தை, தாய் உட்பட யாரையும் கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் அளிக்கிறது இந்த சட்டப் பிரிவு. வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்பதால், அவர்கள் புகார் தந்தாலே, இந்த சட்டத்தை பயன் படுத்தி, கணவன், அவன் குடும்பத்தாரை கைது செய்வது போலீஸ் வழக்கம். கைது செய்தபின் தான் எல்லா விசாரணையும் நடக்கும். கடந்த சில ஆண்டாக இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், மத்திய அரசுக்கு ஆயிரக்கணக்கான மனுக் கள் குவிந்தன. பழிவாங்க துடித்த மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்கள், அவர்களின் குடும் பத்தார், சமூக நல அமைப்புகள், ஆண்கள் நல அமைப்புகள் போன்றவற்றில் இருந்தும் அரசுக்கு மனுக்கள் குவிந்தன. "வரதட்சணை கொடுமை செய்யும் ஆண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே சமயம், திட்டமிட்டு கணவனை, அவன் குடும்பத்தினரை பழிவாங்க சில பெண்கள், வரதட்சணை கொடுமை புகார் செய்வது அதிகரித்து வருகிறது.கடந்த காலங்களில், வரதட்சணை கொடுமைக்காக தண்டிக்கப்பட்ட கணவர்கள் எண்ணிக்கை சதவீதத்தை வைத்தே இதை புரிந்து கொள்ளலாம்; இதனால், அப்பாவி கணவர்களுக்காக மத்திய அரசு , இந்த சட்டத்தில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்' என்று மனுக்களில் கோரப்பட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகமும், சட்ட அமைச்சகமும் இது தொடர்பாக பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், டில்லி ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புகள், அரசின் பரிசீலனைக்கு மேலும் வலுவூட்டின."கணவன் குடும்பத்தாரை பழிவாங்க வேண்டும் என்ற எண் ணம் உள்ள பெண்களுக்கு வரதட்சணை கொடுமை புகார் பெரிதும் கைகொடுக்கிறது. அதற் கேற்ப, போலீசும், உடனே 498 ஏ சட்டப்பிரிவு, 406ம் பிரிவை பபயன்படுத்தி உடனே கணவன் குடும்பத்தினரை கைது செய்து விடுகின்றனர். சிறியவர்களை கூட கைது செய்வது சட்டப்படி சரியல்ல. இதுபோன்ற போக் குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண் டும்' என்று ஒரு வழக்கில் டில்லி ஐகோர்ட் நீதிபதி கபூர் தன் கருத்தை வலியுறுத்தியிருந்தார். இதுபோல, சுப்ரீம் கோர்ட்டில் வந்த வழக்கில்,"வரதட்சணை கொடுமை வழக்குகளில் நிரபராதியாக வெளியே வருவோர் அதிகரித்து வருகின்றனர். அதனால், இப்படிப்பட்ட வழக் குகள் ஜோடிக்கப்பட்டு, சிலரால் பயன்படுத்தப்படுவதாக அறிய முடிகிறது. இதை தடுக்க சட்டப் படி பரிசீலிக்க வேண்டும்' என்று நீதிபதி அர்ஜித் பசாயத் கூறினார்.இந்த இரு தீர்ப்புகளும் மத்திய அரசின் கவனத்தை திசை திருப்பியது. சட்ட, உள்துறை அமைச்சகம் தீவிர பரிசீலனைக்கு பின், மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. "வரதட்சணை கொடுமை புகார் விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். புகார் தந்ததை ஆதாரமாக வைத்து உடனே, கணவன், அவர் குடும்பத்தினரை கைது செய்யவே கூடாது. தீர விசாரித்து, உயர் அதிகாரி திருப்தி பட்டாலொழிய கைது நடவடிக்கையில் இறங்கக்கூடாது. இது தொடர்பாக எல்லா போலீஸ் மண்டலங்களுக்கும் உத்தரவு அனுப்ப வேண்டும்' என்று கடிதத்தில் கூறப் பட்டுள்ளது. மத்திய உள்துறை செயலர், இந்த கடிதத்தை மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ளார்.வரதட்சணை கொடுமை புகார் அளித்தால், இந்த சட்டத்தின் கீழ் கணவனுக்கு அதிகபட்சம் மூன்றாண்டு சிறை தண்டனை தர முடியும். கடந்த 2007ல், ஒரு லட்சத்து 60 ஆயிரம் வழக்குகள் பதிவாயின. அதில், 76 ஆயிரம் வழக்குகளில் தான் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டது. 79 சதவீதம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவண காப்பக சர்வேயில் தெரியவந்துள்ளது. "இந்த சட்டப்பிரிவுகளில் சில திருத்தங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டது. ஆனால், பெண்கள் அமைப்புகள் பெரும் போர்க்கொடி தூக்கியதால், இந்த முடிவில் பின்வாங்கி விட்டது. எனினும், கோர்ட்களின் கருத்துக்களுக்கு பின் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 இந்த குடும்ப பாதுகாப்பு சட்டமே முதலில் அர்த்தற்றது.. அதில் சொல்லப்பட்டு இருக்கும் ''குற்றங்கள்'' கேலிக்குரியவை.
மேலும், கணவர் குடும்பத்தினரை அச்சுறுத்தும் மனைவி குடும்பத்தினர் மீது இப்போதைய சூழலில் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது... மனைவி நினைத்தால் கணவரின் மொத்த குடும்பத்தையும் என்ன வேண்டுமானாலும் மிரட்டலாம்.. அச்சுறுத்தலாம் என்கிற நிலைமை இப்போது இருக்கிறது... ஒருவேளை கணவர் மனைவி மீதோ மனைவி குடும்பத்தினர் மீதோ வழக்கு தொடர்ந்தாலும் அதனால் எந்த பயனும் இல்லை. ஏனெனில் யார் குற்றச்சாட்டு யார் சொன்னாலும் தன்னை நிரூபிப்பது கணவரின் கடமையாக சொல்லப்பட்டு இருக்கிறது... அதாவது, மனைவி கணவர் மீது பொய் குற்றச்சாட்டு சொன்னாலும், அதை பொய் என்று நிரூபிக்க வேண்டியது கணவரின் கடமை ஆகிறது..
தொல்லை அச்சுறுத்தல் தரும் மனைவிஇடம் இருந்து விவாகரத்து பெறுவது என்பது இயலாத காரியம்... மனைவி நினைத்தால் கணவரை வேண்டாம் என்று சொல்லலாம்.. ஆனால் கணவரால் அது முடியாது... சட்டம் ஒப்புக்கொள்ளாது...

இதனால் தான் இந்த சட்டத்தை ''சட்ட வன்முறை'' என்று உச்சநீதிமன்றமே குறிப்பிட்டு சாடி இருக்கிறது...

எனவே, ஆண் பெண் இருபாலரும் சமமாக சட்டத்தின் முன் நடத்த ஏதுவாக ஆண்களுக்கும் தக்க சட்ட பாதுகாப்பு வழங்கவேண்டியது இந்திய அரசியல் சாசன அடிப்படையில் மத்திய அரசின் கடமை ஆகிறது..

குழு அமைத்து பரிசீலிப்பதோடு நில்லாமல் அதனை சட்டமாக இயற்ற வேண்டும்...
 
by M சதீஷ் குமார்,Chennai,India    20-11-2009 12:56:18 IST
 very good decision.I pead the govt to take action against the girl''s families who want to avenge their husbands''families who are innocent .Many precious lives will be saved.the court should punish severely the girlsand their parents for misusing the law 
by mr ramaswamy,madurai,India    18-11-2009 23:41:28 IST
  Good dicision . this order must make by law.
thanks god.
 
by T Manoharan, Thanjavurtamilo nadu,India    18-11-2009 20:16:38 IST
 WHY CENTRAL GOVT. CHANGE THIS LAW. WE MUST NEED THIS LAW. THIS LAW ONLY SAVE SMALL AMOUNT OF INDIAN LADY. BECAUSE INDIAN LAW PUSH TO ONLY FOR POOR PEOPLE NOT A HIGH CLASS PEOPLE. IF CHANGE THIS LAW ALL MEN WILL DO ILLEGAL ACTIVITIES TO INDIAN LADIES 
by T TAMILAN,chennai,India    18-11-2009 17:23:15 IST
 இது தெளிவான சரத்துகளுடன் சட்டமாக்கப்பட வேண்டும். 
by S ராமமூர்த்தி,Rajalikudikadu, Mannargudi, Tiruvarur, T.Nadu,India    18-11-2009 17:18:41 IST
 அடேங்கப்பா... இங்கே கமெண்ட் அடித்தவர்கள் எல்லாம்..தன் மனைவிகளால் பாதிக்கப்பட்டவர்கள் போல. கமெண்ட் அடிக்கும் அப்பாவி கணவன்மார்களே எனக்கு கல்யாண ஆசை போய்விட்டது ...  
by GB RIZWAN,jeddah,Saudi Arabia    18-11-2009 16:40:50 IST
 தனி குடித்தனம் போகவேண்டும் இல்லை என்றால் வரதச்சனை கேஸ் குடுப்பாங்க..முதல்ல பொண்ணு அம்மா வ உள்ள தள்ளன்னும்..பொண்ணுங்க எல்லாம் இப்படித்தான்..இதில் நானும் பாதிக்கபட்டவன்...
 
by ss sona,malaysia,India    18-11-2009 16:00:20 IST
 very good dicision. 
by by கபில் கண்ணன்.,thambikkottai,India    18-11-2009 16:00:14 IST
 நல்ல செய்தி. சட்டத்தை தப்பாக பயன்படுத்தும் பெண்களுக்கு இது சரியான அடி. சட்டத்தை தப்பாக பயன்படுத்த தூண்டிவிடுவது பெண்களின் பெற்றோர்களாகவும் இருக்கலாம் அவர்களுக்கும் நல்ல அடி இந்த செய்தி. வரதட்சைனை கேட்ட உடனே அவனை விவாகரத்து பண்ண வேண்டியதுதானே அதை விட்டுட்டு கொடுமபடுதுரான்னு அவன் மீதும் அவன் பெற்றோரே மற்றும் உடன் பிறந்தவங்க மீதும் வழக்கு போடுவது சுத்த ரௌடிதனம். வாழ்க ஆண் வர்க்கம்.

இப்படிக்கு,
ராஜாமணி ருவாண்டாவிளிரிந்து.  
by N ராஜாமணி,Kigali,Rwanda    18-11-2009 15:20:32 IST
 we welcome the decision taken by the central govt in this regard. Severe action should be against the false complaint THANKS AGAIN. 
by A SHANMUGAVELU,CHENNAI,India    18-11-2009 15:09:50 IST
 Excellent news. 90% acquittal in these allegations has clearly shown this is a draconian law and most women are misusing them. I personally knew a woman who left her husband and lives with someone else threatens her estranged husband''s family with this particular section of law. Actor Prasandh''s story is another example. Please look at 498A.org for pathetic stories of harrassed husbands and their family.  
by M Rajan,Manchester,United Kingdom    18-11-2009 15:08:41 IST
 Good decesion, but too late. Also, try to bann Mathar Sangams. 
by R Yovan,Dubai,United Arab Emirates    18-11-2009 14:52:14 IST
 this law amended before 2 yrs , my grandma leave out of death(with help of God), I congratulate and authrise this law..  
by g ஷேய்க்,Tirunelveli, tenkasi,India    18-11-2009 14:47:46 IST
 GOOD DECISION 
by R SRINIVASAN,madurai,India    18-11-2009 14:00:48 IST
 my suggestion is, if husband is proved as innocent, then Police should arrest the wife who gave wrong information and appealed. Then only, this kind of revenging act will be reduced. Also, house wives should stop watching TV serials..now-a-days, this kind of revenging tendency is directly get into their mind from seeing non-sense TV serials only. 
by T Soorya,Hyderabad,India    18-11-2009 13:11:13 IST
 good decision. it should help to stop harassing bride groom and his parents 
by n senthil,trichy,India    18-11-2009 13:06:54 IST
 முன்னரே நம் நாட்டின் ஜனாதிபதி பிரதீபா படேல் கூறியிருந்தார் யாரும் அதனை வரவேற்கவில்லை. அதிகமாக அரசியல் நாய்கள் எதிர்ப்பு தெரிவித்தது. இப்போதெல்லாம் மனைவிமார்கள் வேறொருவருடன் தொடர்பு வைத்துக்கொள்கிறார்கள். புருஷன் கேட்டால் வரதட்சனை கொடுமை என்று புகார் கொடுப்பது. இதற்கு அரசாங்கம் உடந்தை. அப்போ கள்ளகாதளுக்கு அரசாங்கமே உடந்தை  
by M பிச்சை முத்து ,Bangalore,India    18-11-2009 12:59:45 IST
 தவறாக பயன் படுத்தும் பெண்களை அவரது கணவன்மார்கள், அந்த மனைவிக்கு தண்டனையாக 100 சவுக்கு அடி கொடுக்கவேண்டும், தண்டனை கடுமை ஆனா தவறுகள் குறையும்  
by r nalavan,chennai,India    18-11-2009 12:58:02 IST
 KAALAM KADANTHALUM MIGA MIGA NALLA ORU THIRUTHTHAM  
by T.K. SYED SUBAIR,FUJAIRAH,United Arab Emirates    18-11-2009 12:16:36 IST
 மாமனார், மாமியார்களை தவிக்கவிட்டு தனிக் குடித்தனம் செல்ல நினைக்கும் பெண்களின் ஆசைகள் நிறைவேறாததால் தான் இப்படி பொய் புகார். தனிக் குடித்தனம் செல்லும் மருமகள்கள், அல்லது ஒரே வீட்டில் மாமியாரை கவனிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் பெண்கள் ஆகியோரையும் தண்டிக்கும் சட்டம் வருமா?
 
by வெங்கி,திருவாரூர்,India    18-11-2009 12:00:27 IST
 ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி அநியாயமாக தண்டிக்கப் படக் கூடாது என்பதுதான் நம் நாட்டு சட்டத்தின் கொள்கை. ஆனால் வரதட்சணை கொடுமை சட்டத்தைப் பொறுத்தவரை உண்மையில் தவறு செய்பவர்கள் சரியான ஆளைப் பார்த்து லஞ்சம் கொடுத்து தப்பித்து விடுகிறார்கள். எந்த தப்புமே செய்யாத ஆணின் குடும்பத்தினர்தான் பேராசைக்கார பெண்ணின் சூழ்ச்சிக்குபலியாகிறார்கள்.

சில பெண்கள் குற்றவாளிகளை சிக்க வைக்க இப்படி கடுமையான சட்டம் தேவைதான். சில அப்பாவிகள் சிக்குவதும் தவிர்க்க முடியாது என்று கூறுகிறார்கள். இது ஆனவத்தைதான் காட்டுகிறது. சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்குத்தான் சட்டம் சாதகமாக்குகிறது. பெண்ணியவாதிகளாக காட்டிக் கொள்பவர்கள் உண்மையில் தப்பு செய்த ஆண்களை கூண்டில் நிறுத்தாமல் பேராசைக்கார பெண்களின்பொய்ப் புகார்களுக்கு ஆதரவு கொடுத்தால் அது சமூகத்தில் மோசமான சூழலை ஏற்படுத்தும்.
 
by வெங்கி,திருவாரூர்,India    18-11-2009 11:57:07 IST
 Quite satisfied. It needs to be placed under laws. It is true most of the girl’s family misuse these rules very badly since the girl has no power at her home once she go back to their house from her husband home with misunderstanding. Atleast she could speak/argue for her understanding if she is with her husband. Most of the issues comes from the preplanned from girl’s house prior to marriage on separating the husband from boys house. Before marriage thousand times most girls will confirm you that she will stay at husband home. But after marriage you cannot predict or even imagine plan from girl or girl family that will torch you in such way you have already lived your life.
Someone proved the same at the bottom comment that usually girls are never being understandable for any men and even women except priest/Samiiyaar (who are only not bachelor and husbands). It is not a funny thing to smile but life of many men.

Government please does the right justification and do not fear for any private organization. If you fear then what will be status of innocent people in our country. Thanks Dinamalar for providing some good information to men who are handicapped. 
by Mr Arun,Duba,Saudi Arabia    18-11-2009 11:54:37 IST
 நாம் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை உடனே நடைமுறைபடுத்த ஆவண செய்ய வலியுறுத்த வேண்டும். மேலும் சில மகளிர் அமைப்புகள் செய்யும் அர்த்தமில்லாத போராட்டங்கள் தடை செய்ய வேண்டும்  
by L Sridhar,Chennai,India    18-11-2009 11:46:29 IST
 Need to implement this new act immediately
to stop peoples misusing the dowry act 
by N செந்தில்,trichy,India    18-11-2009 11:44:05 IST
 கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்தால் எந்த சட்டமும் தேவை இல்லை .  
by sakth priya,ramnad,India    18-11-2009 11:36:01 IST
 We welcome the decision taken by central government because of this many lost their lifes and their family lifes too. 
by prabakar,chennai,India    18-11-2009 11:10:47 IST
 வரதட்சணை வழக்கு பெரும்பாலும் தவறாக பயன்படுத்தபடுகிறது. பழி வாங்க வகை செய்கிறது. 
by M.S. gopinathan,Thanjavur, Tamilnadu.,India    18-11-2009 10:42:34 IST
 சுய நலத்துக்காக எதையும் செய்யும் குலம் தான் பெண் குலம். இவங்கள கட்டுப்படுத்தாட்டி நாளைக்கு ஆண்களை ஜெயிலில் தான் பார்க்க முடியும். இந்த உலகம் அழியபோறது பெண்ணால தான். 
by N.K Ramesh,Ahmadi, KOC Kuwait,Kuwait    18-11-2009 10:40:39 IST
 சட்டத்தை தவறாக பயன்படுத்த எத்தனிக்கும் பெண்களுக்கு இது ஒரு சரியான பாடம்.  
by K முருகேசன்,Thiruvarur, T.Nadu,India    18-11-2009 10:32:07 IST
 very good dicision. Keep it up. 
by E Asokan,chennai,India    18-11-2009 10:00:11 IST
 இப்பவாது புரிஞ்சுகிட்டாங்களே 
by m sriram,madurai,India    18-11-2009 09:52:54 IST
 மத்திய அரசுக்கு நன்றி, இந்த சட்டத்தை துஷ்ப்ரோயகம் செய்வதினால் உண்மையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பலன் இல்லாமல் போகிறது. எனவே இந்த சட்டத்தை துஷ்ப்ரோயோகம் செய்யும் பெண்களின் பெற்றோர்களை தண்டிக்கவும் சட்டம் கொண்டு வரவேண்டும். மற்றும் பாதிக்க பட்ட அப்பாவி மக்களின் நலன் கருதி, இது போன்ற நிலுவையில் உள்ள வழக்குகளை ஆறு மாதத்திற்குள் முடிவடைய மத்திய அரசு உதவி புரிய வேண்டும். 
by RSP சிவப்ரகாஷ்,USA,India    18-11-2009 09:38:40 IST
 தப்பை குறைக்க சட்டம் போட்டு அதனால் ஒரு தப்பு நடந்தா சட்டத்துல ஏதோ குறைன்னு தானே அர்த்தம். அப்போ ஒன்னு சட்டத்தை மறுபரிசீலனை செய்யணும். இல்ல அந்த சட்டத்தை நீக்கிடனும். அதை செய்வதற்கு அரசாங்கத்துக்கும், சட்டத்துரைக்கும் உரிமை உண்டு. அப்படி இருக்க சில அமைப்புகளின் போராட்டங்களுக்கும் மிரட்டல்களுக்கும் சட்டத்துறை பின்வாங்கினால் நாட்டில் எல்லோருக்கும் சமநீதி கிடைப்பது கேள்விக்குரியதாகி விடும்.  
by D ரமேஷ்,Trichy,India    18-11-2009 09:17:47 IST
 ஒரு இளம் பெண் (மருமகள்) ஒரு வயதான பெண்ணை (மாமியாரை௦) கொடுமை படுத்தும் சட்டம் நம் நாட்டில் தான் உள்ளது . வாழ்க இந்திய ஜனநாயகம்!  
by R Gopal,Aranthangi,India    18-11-2009 09:10:36 IST
 நாம் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டிப்பாக வரவேற்க வேண்டும். இதற்கு ஒரு சட்டம் கொண்டு வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.  
by Moorthy,Chennai,India    18-11-2009 09:05:45 IST
 Good dicision taken by Central Govt, But I dont why they have taken so long to realize this fact... We dont know till now how many innocent husbands life has been screwed up... what Central Govt can tell for the innocent once.... Lot of womens blackmail their husbands with this kind of advantages.......

This is a very very serious issue...... 
by CA விஜெயகுமார்,Bangkok,Thailand    18-11-2009 09:00:53 IST
 Men who don''t understand women at all, by and large, fall into two groups:
Bachelors and Husbands. 
by k vijilkumar,villupuram,India    18-11-2009 08:58:24 IST
 கணவனை - அவன் குடும்பத்தை பழி [ பலி ] வாங்க மிகவும் சுலபமான வழி.
இது ஒரு மோசமான சட்டம்.
பெரும்பாலும் மனைவி உறவினர்களால் பயன்படுத்த படுகிறது. இவர்கள் நாளை ஆண்டவனுக்கு பதில் சொல்ல வேண்டும். 
by s oli,chennai,India    18-11-2009 08:10:29 IST
 இவைகளுக்கு ''முப்பத்தி முன்று'' பெர்சன்ட் தேவையா,ஏனென்றால் இந்த மாதிரி கொடுமையை அனுபவித்த கலக்டெர் (பஞ்சப்போ,கல்கத்தாஓ) தன் மனைவிடம் மாட்டிய கதையை இதே ''தினமலரில்''படித்து உள்ளேன். ஆனால் இந்த சட்டம் எவ்வளவு நாட்கள் நாட்டில் இருக்கும். விமோசனம் வந்தால் சரி.  
by YR முஹம்மத் அமின் ,paris,France    18-11-2009 05:33:58 IST
 we welcome the decision taken by the central govt
in this regard.Severe action should be against the false complaint 
by PG venkatesan,chennai,India    18-11-2009 05:10:36 IST
 good move by central govt. We all men should join to fight these feminists who support harassing men. Men should unite. 
by s sankar,canada,Canada    18-11-2009 02:35:34 IST
 Mathia Arasin Indha Nadavadikkai .... miga miga potrappadavendiyathu, parattukkuriyathu ... Silla pengal Women rights entra porvayil appavi aangalai, avargal kudumbathinari naasam seikirarkal. Mathia Arasae .... Neethimantramae .... Dritagathramai seyal padungal, appavi aangalai kaappatrungal, Nantrigal pala noorayiram, also thanks to Dinamalar !!!! 
by T S BALASUBRAMANIAN,UDUMALAIPETTAI, TIRUPPUR DISTRICT (TN),India    18-11-2009 01:34:59 IST
 I thing good news, totally complaint people 79% good persons means Government should thing about rules. 
by R Saravanan,Sudan,India    18-11-2009 01:04:32 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்