முதல் பக்க செய்திகள் 

சுப்ரீம் கோர்ட்டின் 11 கட்டளைகள் மீறல்: கைது செய்யும்போது பின்பற்றாத போலீஸ்
டிசம்பர் 21,2009,00:00  IST

Front page news and headlines today

மதுரை : ஒருவரை போலீசார் கைது செய்யும்போது, 11 நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காததால், போலீசார் தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்குகின்றனர்.மதுரை மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் உரிமையாளர் வெற்றிவேல் பாண்டியன் டிச.,17ல் துப்பாக்கி முனையில் கடத்தப் பட்டார். விசாரணையில், செக் மோசடி வழக்கில் ஆந்திரா போலீசார் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அழைத்துச் சென்றது தெரியவந்தது. பின் "பேக்ஸ்' மூலம் அவர்கள், மதுரை போலீசாருக்குதகவல் தெரிவித்தனர். அதேபோல், திருட்டு நகை தொடர்பாக நகைக்கடை உரிமையாளர்களை விசாரணைக்காக, தகவல் தெரிவிக்காமல் போலீசார் அழைத்துச் செல்வது வழக்கம். இதைக் கண்டித்து உரிமையாளர்கள் கடையடைப்பு போராட் டங்களில் ஈடுபடுவதும், பின் போலீசார் சமரசம் செய்வதும் தொடர்கதையாக நடக்கிறது. இந்த குழப்பங்களுக்கு எல்லாம் காரணம், கைது செய்யும்போது சில நடைமுறைகளை போலீசார் பின்பற்றுவதில்லை. இதுகுறித்து, 1996ல் சுப்ரீம் கோர்ட் 11 கட்டளைகளை பிறப்பித்தது.1. கைது செய்யும் போலீஸ் அதிகாரி, அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.
- ஆனால் மதுரையில் எந்தஅதிகாரியும் அடையாள அட்டையை பொருத்தி, கைது செய்ததாக தெரியவில்லை.2. கைது செய்தவுடன், அங்கேயே "கைது குறிப்பு' தயாரிக்க வேண்டும்.
- சட்டம் ஒழுங்கு, குற்றவழக்குகளில் இந்த நடைமுறையை போலீசார் கண்டுகொள்வது இல்லை. லஞ்ச வழக்கில் மட்டும் சம்பவ இடத்தில் கைது குறிப்பு தயாரிக்கப்படுகிறது.3. கைது செய்யும் தகவலை, உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.
- சாதாரண வழக்குகளில் கைது செய்தால் மட்டுமே, உறவினர், நண்பர்களுக்கு தகவல் தெரிவிக் கின்றனர்.4. கைது செய்த விபரத்தை 12 மணி நேரத்திற்குள் உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
-"விசாரணை' என்ற பெயரில், போலீசார் தகவல் தெரிவிப்பதில்லை. இதனால் ஐகோர்ட்டில், போலீசிற்கு எதிராக "ஆட்கொணர்வு மனுக்கள்' தாக்கல் செய்வது அதிகரிக்கிறது.5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு, என்பதை கைதானவருக்கு தெரிவிக்க வேண்டும்.
- இந்த நடைமுறை போலீசிற்கு தெரிந்தாலும், "கைது செய்த விபரம் வெளியே தெரிந்துவிடும்' என்பதற்காக, கைதானவர்களுக்கு இந்த உரிமை வழங்கப்படுவதில்லை.6. காவலில் உள்ள இடத்தில், கைது விபரம், கைது குறித்த தகவல், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட விபரம் மற்றும் எந்த அதிகாரி பொறுப்பில் உள்ளார் என்பதை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.
- பல ஸ்டேஷன்களில் இதை பின்பற்றுவதில்லை. உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தெரிவிக்கின்றனர்.7. கைதானவரின் உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும்.
- போலீசாரின் "கவனிப்பில்' காயம் ஏற்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். மற்றபடி, கைதானவருக்கு ஸ்டேஷனே கதி.8. கைதானவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
- இந்த நடைமுறையை பின்பற்றாததால்தான் "லாக்கப் மரணம்' நிகழ்கிறது.9. கைது குறித்த ஆவணங்களை குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.
- கோர்ட் கண்டிப்பிற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக இந்நடைமுறையை மட்டும் போலீசார் பின்பற்றுகின்றனர்.10. கைதானவரை விசாரிக்கும்போது வக்கீல் உடன் இருக்க வேண்டும்.
-பிரச்னைக்குரிய வழக்குகளில் மட்டும் வக்கீல்களைஉடன்இருக்க அனுமதிக்கின்றனர்.11. கைது பற்றிய தகவலை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
- இதை போலீசார் எப்போதும் பின்பற்றுவதே கிடையாது. இந்த உத்தரவுகளை அனைத்து ஸ்டேஷன்களிலும் வைக்க வேண்டும், என்றும் உத்தரவிடப்பட்டது. கோர்ட் உத்தரவை பின்பற்றாமல் இருந்தால், "கோர்ட்டை அவமதிப்பதற்கு சமம்' என்று தெரிந்தும் உத்தரவுகளை மீறுகின்றனர்.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது :கோர்ட்டின் கட்டளைகளை பின்பற்றும் போது, நடைமுறை சிக்கல் உருவாகும். தகவல் தெரிவித்துவிட்டு கைது செய்ய வந்தால், குற்றவாளி தலைமறைவார். கைது செய்யப்பட்டது தெரிந்தால், உறவினர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவர். விசாரணை பாதிக்கும். உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும் என்றால், "நெஞ்சுவலி, வயிற்றுவலி' என்று ஏதாவது கூறி, மருத்துவமனையில் சேர்ந்துகொண்டு விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டர். கைது விபரத்தை மக்கள் பார்வைக்கு வைத்தால், தேவையில்லாத சர்ச்சை ஏற்படும், என்றார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 வெற்றிவேல் கண்ணனுக்கு இந்த அணுகுமுறைகள் பின்பற்ற தேவையில்லை. காரணம் இவன் ஒரு பலநாள் சீட்டிங் பார்ட்டி. இவன் குடும்பத்தில் இவனை மட்டும் மாட்டி விட்டார்கள். ஆந்த்ராவில் இருந்து வந்தவர்கள் சிறந்தமுறையில் கச்சிதமாக இவனை தூக்கிவிட்டார்கள். சபாஷ். இதுதாண்டா போலீஸ். உப்பை தின்றவன் இப்போது தண்ணீர் குடிக்கிறான்.
இப்போது இவன் நொங்கை எடுத்திருப்பார்கள். நினைத்துபார்கமுடியாத அசிங்க சூழ்நிலையில் புத்தாண்டை தொடங்குவான். இவனைப்போல் சீட்டிங் பார்ட்டிகளை இதே போல் இந்திய முழுக்க தூக்கவேண்டும்.
'''' சாட்டையடி'''' சாத்தன், கரிமேடு, மதுரை  
by P சாட்டையடி Saththan,Karimedu,India    22-12-2009 00:10:31 IST
 சட்டப்படி கைது செய்வதுதான் அனைவருக்கும் நல்லது. 
by இந்தியன்,india,India    21-12-2009 22:34:57 IST
 Great thanks to dinamalar to publish these rules in the news paper, so that everyone can know how safe our Indian government made these rules and regulations for public.

And at the same time why govenrment is not allowing a LAW subject for school studied starting from 6th standard or 8th standard. Instead of studying unwanted histories and stories, let people know about the freedom they have and rules and regualtions to follow in INDIA.

 
by R charles,Dubai,India    21-12-2009 19:55:43 IST
 இன்று ஒரு நல்ல தகவலை தெரிந்து கொண்டேன். நன்றி தினமலர். 
by R Hari,Hyderabad,India    21-12-2009 18:12:33 IST
 கைது செய்ய வரும் போலீஸ் அத்தாச்சிகள் எதையும் காண்பிப்பதில்லை. ஆகையால் கைது செய்ய வந்துள்ளவர் போலீஸ் தானா அல்லது கடத்தல்செய்பவரா என்பது தெரியாமல் இருக்கிறது.  
by M R Ganesan,Madurai,India    21-12-2009 12:50:33 IST
 நல்லதோர் விழிப்புணர்வு ., தினமலர். மக்கள் மலர்., 
by r ராஜா,Erode., Tamilnadu, India,India    21-12-2009 09:08:50 IST
 You mean to say these laws are not possible practicaly and no need to follow all these 11 points? They could have checked with you guys before making law. I dont understand one thing that police not following only these 11 points and rest of the laws followed by them well ? Poor Tamilnadu and people. Jai Hind. 
by s வீரபாண்டி,USA,United States    21-12-2009 07:49:13 IST
 wt did police officer said s correct.......... 
by K Radhakrishnan,coimbatore,India    21-12-2009 07:36:10 IST
 அய்யா போலீஸ் அவர்களே ,நீங்கள் சாதாரண மக்களுக்காவது இதை பின்பற்றி ஆக வேண்டும். 
by S Karthik,Bangkok,India    21-12-2009 07:25:09 IST
 முக்கிய குற்றவாளிகளை உள்ளே தள்ள, நியாயமான காவல் துறையினர் கைது செய்யும் போது கூட நீதிமன்ற விதிகளை பின் பற்ற முடிவதில்லை. காரணம் அவன் தண்டிக்கப்படவேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான். இது அவசியமில்லை என்று அணைத்து காவல் துறைனர்களும் நினைத்து விதிகளை பின் பற்றினால் அந்த முக்கிய குற்றவாளி நிச்சயம் சட்டத்தில் இருந்து தபபுவான். எனவே காவல் துறையினர் சட்டத்தில் இருந்து அவன் தப்பித்தாலும் பின்னர் கடவுள் நிச்சயம் அவனுக்கு தண்டனை கொடுப்பான் என நினைத்து நீதிமன்ற விதிகளை சாதாரண மக்களுக்காகவும் காவல் துறையினர் இந்த அவசியமற்ற சிக்கலில் மாட்டி கொள்ளாமல் இருப்பதற்காகவும் பின் எதிர் விளைவுகளை நினைத்து நீதி மன்ற விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 
by s munisamy,chennai,India    21-12-2009 06:26:43 IST
 so the police officer telling
the court statment is not corret ?  
by fazlur,kuwait,India    21-12-2009 01:06:59 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்