முதல் பக்க செய்திகள் 

400 இதய அறுவை சிகிச்சை செய்தவர்; இறந்தும் மூன்று பேருக்கு உயிர் தந்தார்
ஜனவரி 02,2010,00:00  IST

Front page news and headlines today

மதுரை : விபத்தில் மூளைச்சாவு அடைந்த, நானூறுக்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளை செய்த, தேனி டாக்டர் கிருஷ்ணகோபாலின் இருதயம், சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டன.தேனியை சேர்ந்த டாக்டர் கிருஷ்ணகோபால் (40), சென்னை டாக்டர் செரியனின் பிரன்டியர் லைப்லைன் மருத்துவமனையில் இதய பிரிவில் பணியாற்றினார். இருஆண்டுகளுக்கு முன், மதுரை வடமலையான் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு சிறப்பு இதய அறுவை சிகிச்சை பிரிவு, அரங்கத்தை நிர்மாணம் செய்வதில் முக்கிய பங்காற்றினார். இரண்டாண்டுகளில், நானூறுக்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார்.கடந்த டிச.,26ம் தேதி மதுரையில் தங்கியிருந்த போது, வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்தார். தலையில் அடிபட்டதால், வடமலையான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் மூளைச் சாவு ஏற்பட்ட நிலையில், அவர் உயிர் வாழ்வது இயலாத காரியம் என, அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள், உடனடியாக கிருஷ்ணகோபாலின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். சென்னை பிரன்டியர் லைப்லைன் மருத்துவமனையில், ஒரு நோயாளிக்கு இதயம் தேவைப்பட்டதால், உடனடியாக சென்னை டாக்டர்கள் மதுரை விரைந்தனர்.கிருஷ்ணகோபாலின் இதயத்தை பிரித்து எடுத்து, ஐஸ் பாக்சில் வைத்து, விமானம் மூலம் ஒரு மணி நேரத்தில் சென்னைக்கு கொண்டு சென்று, நோயாளிக்கு பொருத்தினர். கிருஷ்ணகோபாலின் ஒரு சிறுநீரகம், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நோயாளிக்கும், மற்றொன்று, நெல்லை கேலக்சி மருத்துவமனை நோயாளிக்கும் பயன்படுத்த கொண்டு செல்லப்பட்டது. இறந்த டாக்டர் கிருஷ்ண கோபாலின் மனைவி ஜெயபிரியா, பிரன்டியர் மருத்துவமனையில் செய்தி தொடர்பாளராக உள்ளார். அவர்களுக்கு தேஜஸ்வின் (12) என்ற மகனும், சரண்யா (9) என்ற மகளும் உள்ளனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 dear geetha akka
my hearty condolences to you & ur family. it is really a shock to see the cruel game the fate has played in thambi''s life. i am yet to recover from the shock. i really miss him a lot.
deeply mourning hi loving sister
aruna 
by Dr.S Aruna,Chennai,India    04-01-2010 14:36:20 IST
 எல்லா டாக்டர்களும் இப்படி இருந்தால் உலக அளவில் நம் நாடு உயர்ந்து இருக்கும் எல்லா டாக்டர்களுக்கும் இது ஒரு முன்மாதிரி மீண்டும் வாழ்கிறார் நம் டாக்டர் நன்றி நன்றி நன்றி  
by R Sidambaram,Aulnay sous bois,France    02-01-2010 23:33:32 IST
 Our heart felt condolences to Doctor''s family. I pray to God for his soul to rest in peace and for his family to bear this great loss. His demise is a great loss to Indian community. Please convey our condolences to Dr Krishna Gopal''s family
Muthusamy and family 
by K Muthusamy,Sydney,Australia    02-01-2010 23:25:27 IST
 Our deep condolence to his family. Let his soul rest in peace. we pray God to give all strength and support to his family. 
by A nagarajan,M.Subbulapuram, Theni,India    02-01-2010 23:23:46 IST
 தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்துள்ளார் இருந்தபோதும் இறந்தபோதும்! 
by P பாலகிருஷ்ணன்,Chennai,India    02-01-2010 23:02:27 IST
 He is almighty. His family is magnificient. They inspires millions of readers.. Great. 
by செந்தில்,New York,Uganda    02-01-2010 22:59:18 IST
 இதுவே இறந்தும் வாழ்வது .அனைவர்க்கும் ஒரு முன்னோடி .அன்னாரின் குடும்பம் என்றும் போற்றபடட்டும் .அன்னாரின் ஆத்மா சொர்க்கத்தில் சாந்தி அடைய என்ன உளமார்ந்த பிரார்த்தனைகள் .. 
by mr ANVAR,bahrain,Bahrain    02-01-2010 22:58:01 IST
 My deepest condolenences to his families and Relations  
by RS KOTTAICHAME,KARAIKUDI,India    02-01-2010 22:45:08 IST
 Great soul. God bless his family. 
by வெங்கட்,Los Angeles,United States    02-01-2010 21:47:56 IST
 May god give peace to his soul. my deepest condolence to their family members.

 
by A ABDUL KADER ,DUBAI ,United Arab Emirates    02-01-2010 21:42:09 IST
 மருத்துவரின் குடும்பத்தினருக்கு எனது பிரார்த்தனைகள்.ஓய்வில்லாமல் வேலை செய்யும் அனைவரும் சற்று கவனமாக இருக்க வேண்டும்..சாலை விபத்தாக இருந்தாலும் சிறு சந்தில் விபத்து நடந்தாலும் இதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும்..அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.சோர்வு,ஆபத்தான வடிவமைப்புகள் போன்ற சரிசெய்ய முடிக்கறவற்றை சரிசெய்வோம்.

 
by பாவேந்தன்,Brisbane,India    02-01-2010 21:23:06 IST
 may god less his family, my deep condolence to his fanily and friends, he proved that god is living by this kind of respectale human beings 
by ranjithkumar,china,India    02-01-2010 21:09:32 IST
 ஓர் இடதில்லிருந்து மூவிடம் சென்று என்றும் இவ் உலகில் வாழும் மருத்துவர் தெய்வமே உனக்கு என் கண்ணிரே காணிக்கை.. அய்யா ராமானுஜம் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். டாக்டர் ராஜகோபால் ஆத்மா சாந்தி அடையவும் அவரது குடும்பத்திற்காக இறைவனை பிராத்திக்கிரேன். 
by A பாஸ்கரன்,Singapore,Singapore    02-01-2010 20:55:03 IST
 அன்புள்ள டாக்டர் கோபால் அவர்களே!உங்கள் உயிர் இந்த உலகத்தில்தான் வாழ்கிறது.ஆகவே உடல் பிரிவில் வாடும் உங்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபஙகள். 
by va.me salahudeen,dubai,United Arab Emirates    02-01-2010 20:35:21 IST
 ''''''''''''''''ஆத்மாவிற்கு அழிவில்லை'''''''''''''''' டாக்டர் கிருஷ்ணகோபால் இறந்தும் வாழ்கிறார். அவர் குடும்பத்தினரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.  
by m Arthu,Tirupur,India    02-01-2010 20:05:19 IST
 may that good soul attain MOKSHA 
by S BALASUBRAMANIAM,colombo,Sri Lanka    02-01-2010 19:33:43 IST
 படிக்கும்போதே கண்கள் கலங்கின டாக்டரின் குடும்பத்துக்கு எங்களது அனுதாபங்கள்.  
by A ஜாபர் அலி ,saudia,India    02-01-2010 19:27:00 IST
 Very SAD News of the demise of Dr. Krishna Gopal. God has given STRENGTH to his family and friends to pass through these difficult moment.

My heartiest codolences to Dr''''s family.

MAGDOUM ALI
JEDDAH, SAUDI ARABIA.
 
by M.S. MAGDOUM ALI,Jeddah,Saudi Arabia    02-01-2010 19:14:51 IST
 my heartfeet contolense for his family 
by m அப்துல் மஜீத்,ALKHOBAR, SAUDI ARABIA,Saudi Arabia    02-01-2010 18:46:23 IST
 May be his Body parts are fitted into people of 3 different religions or of different Caste or even economic class. Shows how Religion, Caste or Economic Class are so immaterial in our life and that everyone is the same and should live in harmony. Long live the doctor who has conveyed a deep message through his death. 
by V Thirumalai,Chennai,India    02-01-2010 18:42:11 IST
 கோடி நன்றி அய்யா. இந்த புத்தாண்டில் அனைவருக்கும் ஒரு நல்ல சிந்தனை விட்டு சென்றீர் . வாழ்க உம் சேவை.  
by a balamurugan,villupuram,India    02-01-2010 18:38:51 IST
 மனிதநேயமிக்க டாக்டர், இறந்த பின்னும் மூன்று உயிராக வாழ்வது மட்டுமின்றி, மூன்று மனிதநேயமிக்க உயிர்களை உருவாக்கியிருக்கிறார். அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.  
by Raja A,Chennai,India    02-01-2010 18:31:03 IST
 மனிதநேயம் மிக்கவர் வாழ்க  
by r கார்த்தி,pethappampatti,India    02-01-2010 18:22:00 IST
 '' ஆத்மாவிற்கு அழிவில்லை'''''''' டாக்டர் கிருஷ்ணகோபால் இறந்தும் வாழ்கிறார். அவர் குடும்பத்தினரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். மனித நேயத்திற்கு நல்ல ஒரு முன் உதாரணம்...  
by T R கண்ணன் பாபு ,Hyderabad,India    02-01-2010 18:20:13 IST
 டாக்டர் கோபால் தன்னுடைய வாழ்நாளில் சிறந்த மருத்துவராக இருந்துள்ளார் ஆனால் இது போல் இருந்த சிறந்த மனிதர்களுக்கு கோபாலின் மனைவி பிறருக்கு உதவியதை போல் உதவுவர்கள என்பது சந்தேகமே.இவர் இறந்த பின்னும் இவருடைய மனைவி உடல் உறுப்பை தானமாக தருகின்றார் என்றால் போற்றப்படவேண்டியது கோபால் மட்டும் அல்ல அவர்களின் குடும்பத்தாரும் அவர்களின் பரந்த மனப்பான்மையையும்தான்.
அவர்களின் சந்ததி நீடுடி வாழா எல்லோரும் இறைவனை வேண்டுவோம்.  
by B.V Venkatramani,bangalore,India    02-01-2010 18:10:54 IST
 நீங்கள் மனிதர் அல்ல தெய்வம்
 
by PARAVAKKOTTAIANNA,SINGAPORE,Singapore    02-01-2010 17:58:44 IST
 வாழும்போது பலரது வாழ்க்கையை மீட்டு வாழவைத்த மகான். இறந்த பின்பும் முவரின் வாழ்க்கையை திருப்பி கொடுத்தவர் வாழ்க்கை பாதியில் முடிந்தது மிக பெரிய சோகத்தில் ஆழ்த்தியது என்றால் அது முற்றிலும் உண்மையானது
 
by S முருகன்,Muscat. Sultanate of OMan,India    02-01-2010 17:52:58 IST
 மறையாது மனித நேயம் என்பதை மறைந்த பின்னும் நிருபித்து இருக்கிறார் மருத்துவர். இறவா புகழ் பெற்று உள்ளார்.
பிரசன்னா
 
by R பிரசன்னா,Madurai,India    02-01-2010 17:42:55 IST
 Dr கிருஷ்ணா குடும்பத்திற்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்
அவர்கள் செய்த நற்காரியம் என்றென்றும் போற்றப்படும் அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை துதிப்போம்
 
by S R Ravishankar,Muscat,India    02-01-2010 17:31:30 IST
 My deepest condolensces to his family 
by SV ராமகிருஷ்ணன்,Dubai,India    02-01-2010 17:06:41 IST
 புது வருஷத்தில் ஒரு நல்ல செய்தி தந்த தினமலர் பத்திரிகை பாராட்டுக்குரியது. அவர் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுவோம். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள் 
by k visvanathan,kangayam,India    02-01-2010 16:54:04 IST
 First of all my deep condolence to their family.
GOD WILL COME LIKE HUMAN (THEYVAM MANUSHE ROOPANE) SOMETIMES. THIS HAS HAPPENED NOW.
We pray god to give peace and happy to their family.
 
by V Sethuraman,Bhopal,India    02-01-2010 16:25:55 IST
 கடவுளுக்கு கண் இல்லையா?
நல்லவர்களை இந்த மண்ணில் நீண்ட நாள் வாழ மடையா
அவருடைய குடும்பத்ருக்கு என் ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்து கொண்டு அன்னாருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிகொள்கிறேன் . 
by s prekkumar,dubai,United Arab Emirates    02-01-2010 16:23:34 IST
 Our condolences to their family. However, we have to wait for miracle by God we should not take decession on the basis of Science. 
by v christopher,sana'a,Yemen    02-01-2010 16:06:39 IST
 May his soul rest in peace. 
by MR Mathankumar,Eindhoven,India    02-01-2010 16:02:28 IST
 Our deep condolence to his family. Let his soul rest in peace. For his service God will take care of his family. All of us pray for you. 
by NIRMALA NATARAJAN,Tiruchirappalli,India    02-01-2010 16:02:22 IST
 உண்மையில் உன் புகழ் வாழ்க திரு வெங்கட் சொன்னதை போல கடவுள் இல்லை டாக்டர் கிருஷ்ணா கோபால் அவர்கள் தான் கடவுள் மற்றும் அவரது மனைவியும் எனக்கு கடவுளாக தோன்று கிறார் - க.ரமேஷ்  
by G RAMESH,Dubai,UAE.,India    02-01-2010 15:48:51 IST
 I couldn''t resist crying for an hour after reading this news. Dr.Gopal is God. No words. I sincerely submit my tears to the family. 
by K Dr.Bharathi,Chennai,India    02-01-2010 15:47:19 IST
 என்ன எழுதுவது?.இறந்தவருக்கு அஞ்சலி செய்வதா?.அவர் குடும்பத்தாரை பாராட்டுவதா ?.நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது .அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் .  
by M Kadharbava,singapore,Singapore    02-01-2010 15:10:18 IST
 I pray for his family.
Dr.Krishnagopal continues to live in this world by helping 3 famiies. 
by Sakti Panneer,Kuwait,Kuwait    02-01-2010 15:03:02 IST
 டாக்டர் குடும்பத்தாரின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது , குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் and மிக்க நன்றி. Dr. krishna gopal அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாம் அனைவரும் இறைவனை வேண்டுவோம். 
by V.R பாலாஜி,Tamilnadu,Pune,India    02-01-2010 14:55:27 IST
  அவர் இறக்கவில்லை அடுத்த தலைமுறைக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் .  
by g sundarapandian,madurai,India    02-01-2010 14:50:41 IST
 still mengod is there like Mr.Krishnagopal
he is still living with us in our heart .  
by RSN Raju,Tumkur , Karnataka,India    02-01-2010 14:49:51 IST
 god will take the good mens quickly ................
this like good pepoles in INDIA. so INDIA alive ... 
by s mohamed shaheed,Al-khobar,Saudi Arabia    02-01-2010 14:49:51 IST
 நன்றி எங்கள் வாழ்த்துகள் விஜய் & navaneethan 
by v vijaysarathy,coimbatore,India    02-01-2010 14:38:15 IST
 நன் enna எழுதுவதுன்னு தெரியல.ni ஒரு தெய்வம்.  
by T PALPANDI,doha,Qatar    02-01-2010 14:33:18 IST
 என்றும் டாக்டரை மக்கள் நினைவு கொள்ளும்படி தியாகம் செய்திருக்கிரார்கள் டாக்டர் குடும்பத்தினர். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிகொள்வோம்  
by ABDUL KASSIM,dubai,United Arab Emirates    02-01-2010 14:19:56 IST
 திரு கிருஷ்ணா கோபால் அவர்களின் குடும்பத்தாருக்கு எம் அழ்ந்த அனுதாபங்களும், அதேநேரத்தில் அவர் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுவோம். இப்படி ஒருவருக்கு நான் சகோதிரியாக பிறக்க வில்லைய என்ற வேதனை அடுத்த ஜன்மம் நான் அவர் மகளாக பிறக்க ஆசை 
by r sumathi,chennsi,India    02-01-2010 14:11:32 IST
 First of all my deep condolence to their family.
Great service they have done to live other 3 peoples survival in this world. I appreciate and hats off..... We pray god to give peace and happy to their family. 
by S R Ravishankar,Muscat,India    02-01-2010 13:54:05 IST
 Deep Condolence And Great Respect - For Him and His Family... 
by V SHAN MUGAM,DOHA,Qatar    02-01-2010 13:50:28 IST
 இந்த காக்கும் கருணை கொண்ட மருத்துவரின் ஆத்மா ஸ்ரீ பரமாத்மாவின் திருவடி பதத்தை அடைந்திருக்கும்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய.
 
by A.C. Sankaranarayanan,Kuwait,India    02-01-2010 13:46:38 IST
 God bless krishnagopal family 
by p Duraippandi,Rajasthan,India    02-01-2010 13:14:58 IST
 To all people please realise these individuals are the real gods! Dont follow cheating saints!  
by V Rajeshkumar,Singapore,Singapore    02-01-2010 13:09:02 IST
 உங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்
 
by Ram,chennai,India    02-01-2010 13:03:36 IST
 டாக்டர் குடும்பத்தினருக்கு ஆயிரம் நன்றிகள்.  
by SP Murugan,Chennai,India    02-01-2010 13:02:52 IST
 உண்மையில் டாக்டர் என்பவர் கடவுளுக்கு சமம் என்பதினை அறிய செய்துள்ளார்கள். குடும்பத்தாருக்கு கடவுள் துணை என்றும் இருக்கும். 
by K முத்து,Mumbai,India    02-01-2010 13:01:04 IST
 மறைவானவற்றின் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதை தானமாக கொடுப்பார்கள் . அல் குரான் . நவாஸ் . செங்கோட்டை  
by M Nawaz,sakaka, Aljouf,Saudi Arabia    02-01-2010 12:58:36 IST
 டாக்டர் கிருஷ்ணகோபால் இறந்தும் வாழ்ந்துகொண்டு இருகின்றார்.  
by C கவியரசு,Rameswaram,India    02-01-2010 12:52:42 IST
 This is big loss for us. if he would have been there he will save others life.after his death also he saved 3 people life.he is equalent to GOD.My Deepest condolences to Dr.Krishna gopal''s family and friend. may god bless them.we will pray god for them.  
by P Chandrasekaran,Dubai,United Arab Emirates    02-01-2010 12:29:52 IST
 மனித நேயம் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது.  
by m selvaraj,coimbatore,India    02-01-2010 12:17:54 IST
 டாக்டர் கே கோபால் செய்த பணி என்றைக்குமே நம் அனைவர் மனதிலும் இருக்கும்படி ஆகிவிட்டது. உயர்ந்த உள்ளம் என்பது இதுதான். இதை ஒரு நல்ல எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு மற்ற டாக்டர்களும் உடல் உறுப்புகளை தானமாக செய்ய முன் வராவிட்டாலும் அவர்கள் தம் பணியை செவ்வனே செய்தால் பாமர மக்கள் பயன் அடைவார்கள். டாக்டர் கோபால் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். 
by jk ஜெ கிருஷ்ணமூர்த்தி,Doha, State of Qatar,India    02-01-2010 12:11:41 IST
  டாக்டர் கிருஷ்ணகோபால் இறந்தும் வாழ்கிறார். அவர் குடும்பத்தினரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். டாக்டரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்  
by R velmurugan,Ajman,United Arab Emirates    02-01-2010 11:51:31 IST
 ''There is no words to the Loss of Dr.Krishangopal and his family.I really pray god to support for the family.Jai Ho to Dr.Krishnagopal''
 
by K PANNEERSELVAM,Mumbai,India    02-01-2010 11:42:10 IST
 செத்தும் கொடுத்த சீதகாதி. எரிப்பதை புதைப்பதை கொடுத்த அன்னார் குடும்பத்தக்கு நன்றி  
by vm mahadevan,pondicherry,India    02-01-2010 11:37:45 IST
 Dr Krishnagopal has given life to three unknown persons even in his untimely death. I am sure his name will be remembered for ever and people will get inspiration from his deeds.More than that the supreme sacrifice carried out by his family at this testing moment will go in the annals of history. Kudos to them.  
by R Manivannan,Coimbatore,India    02-01-2010 11:26:01 IST
 ''There is no words to the Loss of Dr.Krishangopal and his family. I really pray god to support for the family.Jai Ho to Dr.Krishnagopal''
 
by K PANNEERSELVAM,Mumbai,India    02-01-2010 11:24:37 IST
 கடவுள் இல்லை, இறந்தும் வாழ்கின்ற டாக்டர் கிருஷ்ண கோபால் அவர்கள் தான் உண்மையான கடவுள். ஏனென்றால் கடவுள் இருந்தால் டாக்டர் அவர்களை காப்பாற்றி இருப்பார். இன்னும் பலரை vaazhavaipatharkaga. பிரார்த்தனை செய்கிறேன் அவர் ஆத்மா சாந்தி அடைய  
by d venkat,chennai,India    02-01-2010 11:23:29 IST
 இது தான் உண்மையான பரந்த மனப்பான்மை. இந்த தைரியம் நம் எல்லோருக்கும் வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். டாக்டரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.
 
by S. பாஸ்கரன்,singapore,Singapore    02-01-2010 11:23:19 IST
 Hats off..good job.. 
by G Nithyakumar,Dubai,India    02-01-2010 11:19:45 IST
 மனிதன் (டாக்டர்) என்பவன் கடவுள் ஆகலம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம். வாழை போல் தன்னை தந்து தியாகி ஆகலாம். தன்னுடைய இதயத்தை தானமாக கொடுத்த தேனி டாக்டர் அனைவரது இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்(இருக்கிறார்). அவருடைய ஆன்மா சாந்தியடையவும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய குடும்பத்தார்க்கு கடவுள் துணையிருப்பார். 
by S Rajeshkanna,Theni,India    02-01-2010 11:15:15 IST
 உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
 
by K குணசேகர்,Singapore,Singapore    02-01-2010 11:06:42 IST
 அவர் ஆன்ம சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்  
by m rafik,singapore,Singapore    02-01-2010 11:01:55 IST
 கடவுள் அவரின் குடும்பத்தை வழி நடத்துவர்.  
by T பிரியா,chennai,India    02-01-2010 11:01:35 IST
 May his soul rest in peace and our heartfelt condolences to his family. He''s a standing example to many of us 
by G Srinivasan,Singapore,India    02-01-2010 10:50:33 IST
 ''
தமிழ்நாட்டில் கருணை இறந்தது என்று யார் கூறியது..,.!!!

இவரின் வடிவில் இதோ இங்கே அது அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது..>!!

'' 
by நான் இந்தியன்,தமிழ்நாடு,India    02-01-2010 10:40:40 IST
 the doctors family has done the greatest thing to the society .heartiest condolence to the family. 
by s dr gangadaran,tuticorin,India    02-01-2010 10:21:23 IST
 my deep condolence to Dr.Krishnagopalan family,who had given respect to his profession and created awareness to the public by donating his organs.Lets hope other doctors should take him as role model. 
by Mr K.Prakash,Coimbatore,India    02-01-2010 10:09:54 IST
 இருதய சிகிச்சை டாக்டர் கிருஷ்ண கோபால் இதயம் படைத்த எல்லா மனிதருள்ளும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். இறைவன் என்றென்றும் அவர் குடும்பத்தை காப்பாற்றுவார்.  
by M GANESHAN,Kearkandy village, Yellanhalli, Ooty.,India    02-01-2010 10:09:27 IST
 ஒரே ஒரு பாராட்டு சொல்லி அவர்களுடைய சேவை மனப்பான்மையை மதிப்பிட முடியாது. என்னுடைய கண்ணீர் துளிகள் அவர்களுடைய பாதங்களை கழுவட்டும்.. 
by Sokka balu,Bahrain,Bahrain    02-01-2010 09:57:42 IST
 இவ்வளவு வேதனையிலும் டாக்டர் குடும்பத்தினர் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டது பாராட்டுக்குரியது. இவ்வுலகில் இவரது குடும்பத்தை போன்றவர்கள் செய்யும் நல்ல காரியங்களால்தான் மனித நேயம் அழியாமல் உள்ளது.

அவரது ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன் இச்சம்பவம் பலரையும் ஊக்குவித்து உடல் தானம் மற்றும் உறுப்பு தானத்தை அதிகரிக்க நிச்சயம் உதவும்
 
by V LAKSHMI,COIMBATORE,India    02-01-2010 09:33:53 IST
 இருக்க வேண்டிய மனிதர் இறந்து விட்டார். 
by a சதீஷ் kumar,karur,India    02-01-2010 09:27:17 IST
 அனைவரது இதயங்களிலும் இறக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் டாக்டர் கிருஷ்ண கோபால். டாக்டர் ஆத்துமா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்  
by Bala பாலசுப்ரமணியன்,Singapore,India    02-01-2010 09:03:22 IST
 டாக்டர் கிருஷ்ணகோபால் இறக்க வில்லை! என்றும் வாழ்கிறார். கடவுள் அவர் குடும்பத்தை என்றும் காத்திடுவார்.  
by துரை செல்வராஜூ ,Thanjavur,India    02-01-2010 09:01:55 IST
 சங்கு சுட்டாலும் வெண்மை தரும்  
by a sivabalan,bangalore,India    02-01-2010 08:41:09 IST
  mr krishna gopal lives in three people
god bless krishnagopal family
 
by k manavazhagan,saudi,India    02-01-2010 08:40:31 IST
 ''''ஆத்மாவிற்கு அழிவில்லை'''' டாக்டர் கிருஷ்ணகோபால் இறந்தும் வாழ்கிறார். அவர் குடும்பத்தினரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.  
by Dr துரை அண்ணாமலை ,singapore,India    02-01-2010 08:36:38 IST
 I appreciate Dr. Krishnagopal & his Family who took the decision of donating his organs. May his soul rest in peace and May God give strength to his family and children at this devastating moment.  
by nsr sridha,Hartford,United States    02-01-2010 08:19:06 IST
 என்ன எழுதுவது?.இறந்தவருக்கு அஞ்சலி செய்வதா?.அவர் குடும்பத்தாரை பாராட்டுவதா ?.நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது .அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் . 
by v நாராயணன்,bangalore,India    02-01-2010 07:54:11 IST
  மிகவும் உயர்ந்த, உலகத்திலேயே யாரும் தயங்ககூடிய ஒரு மிகவும் மனிதாபிமான செயல். டாக்டருடைய மனைவி பாராட்டுதலுக்வுறியவர். 
by N.V SAMPATH,CHENNAI,India    02-01-2010 07:52:04 IST
 நல்ல சமூக சேவை. தங்கள் உதவிக்கு ஆயிரம் நன்றிகள். வாழ்க உங்கள் குடும்பம். உங்கள் ஆத்மா என்றும் இறைவனிடத்தில். 
by VBR Ragh,Bangalore,India    02-01-2010 07:47:10 IST
  இவ்வுலகில் இவரது குடும்பத்தை போன்றவர்களால் செய்யும் நல்ல காரியங்களால்தான் மனித நேயம் அழியாமல் உள்ளது.

அவரது ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்
 
by ரமேஷ் பெள்ளி,cleveland,United States    02-01-2010 07:05:45 IST
 long live doctor !!! 
by s india,singapore,Singapore    02-01-2010 06:57:45 IST
 டாக்டர் கிருஷ்ணா மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 
by amyr முஹம்மத் அமின் ,paris,France    02-01-2010 06:29:05 IST
 such a kind of great service
hats off you....
our deepest condolenences to his families and mates  
by S Dhachina,Adelaide,Australia    02-01-2010 06:25:39 IST
 இறந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பது இது தானோ. கடவுள் அவர் தம் குடும்பத்தை என்றென்றும் காத்திடுவார்.
 
by S Palani,Kluang,Malaysia    02-01-2010 05:55:10 IST
 திரு கிருஷ்ணா கோபால்அவர்களின் குடும்பத்தார்க்கு எம் அழ்ந்த அனுதாபங்களும், அதேநேரத்தில் பாராட்டுதலையும் தெரிவிக்கிறேன். உடல் உருப்புகளின் தானத்தின் முக்கியத்துவத்தை, என் மகன் பிறந்து ஒரு மாதமே ஆனபொழுது, குடல் மற்றாரு அறுவை சிகிச்சை (Lever Transplant) செய்ய வேண்டும் என்றபோது உணர்ந்தேன். பின்னர் என் உபயோகம் உள்ள அணைத்து உறுப்புகளையும் தானம் செய்ய சம்மதித்தேன். ஒருவர் இறந்துதான் அடுத்தவரை காப்பற்ற வேண்டும் என்பது கொடுமை, ஆனால் அப்படி இறந்தும் அடுத்தவர்க்கு உயிர்கொடுக்கும் பொழுது மனிதன் தெய்வமாகிறான். டாக்டர் கிர்ஷ்ண கோபால் தெய்வமனார்.  
by திரு ஜெய் , கனடா,Canada    02-01-2010 05:52:03 IST
 நல்ல உள்ளங்கள் என்பது இதுதான். அவரது குடும்பத்தின் இந்த சேவை என்றும் மறக்க முடியாத ஒன்று. டாக்டர் ராஜகோபால் ஆத்மா சாந்தி அடையவும் அவரது குடும்பத்திற்காக இறைவனை பிராத்திக்கிரேன்.  
by I ஜோசப் ,thoothukudi,India    02-01-2010 05:40:09 IST
 இச்சம்பவம் பலரையும் ஊக்குவித்து உடல் தானம் மற்றும் உறுப்பு தானத்தை அதிகரிக்க நிச்சயம் உதவும் . 
by A Krishna,Zhenjiang; China,India    02-01-2010 02:00:12 IST
 புது வருஷத்தில் ஒரு நல்ல செய்தி தந்த தினமலர் பத்திரிகைக்கு முதல் நன்றிகள். அடுத்து டாக்டர் கிருஷ்ணகோபால் இறக்கவில்லை!!!!!!அவர்,என்னும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கார்.அவரின் குடும்பத்தாருக்கு கடவுள் துணை என்றும் இருக்கும். 
by G AMMIYA,DENHELDER,Netherlands    02-01-2010 01:51:39 IST
 தேனி டாக்டர் கிருஷ்ணகோபாலின் குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இதயமுள்ள டாக்டர்களும் இந்தியாவில் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. டாக்டர் கிருஷ்ணகோபால் என்றும் வாழ்கிறார்.  
by M SHAHA,cergy 95,France    02-01-2010 01:44:15 IST
 உங்கள் அத்மா சாந்தி பெற நான் இறைவனை வேண்டுகிறேன்  
by Mr Karthick,Madurai,India    02-01-2010 01:29:41 IST
 ஐயா நீவிர் இறக்கவில்லை.. இவ்வுலகில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்..பாழும் மனிதர் வாழும் நாட்டில் தெய்வமாய் நீவிர் நின்று எல்லோரையும் காப்பாற்றுவீராக. உன் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.  
by P சேகர்,SINGAPORE,Singapore    02-01-2010 01:20:39 IST
 Normally, I have bad impression on service & treatment by doctors.
But Dr, Krishna Gobal have broken that bad impression,
My deepest condolences to his family & friends. 
by M Anand,Alkhor,Qatar    02-01-2010 00:55:59 IST
 இவ்வளவு வேதனையிலும் டாக்டர் குடும்பத்தினர் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டது பாராட்டுக்குரியது. அவர் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுவோம். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.  
by R ஷ்யாம்,Qatar,Qatar    02-01-2010 00:50:18 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்