Dinamalar - No 1 Tamil News Paper

முதல் பக்க செய்திகள் 

கோயில்களை புனரமைக்கும் சென்னை பெண்ணின் சாதனை
ஜனவரி 04,2010,00:00  IST

Front page news and headlines today

கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால், கோவில் இருந்தும் அதைப்பராமரிப் பவர்கள் இல்லாமல் புதர் மண்டிக்கிடப்பவை எத்தனையோ! இப்படிப்பட்ட கோவில்களை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த மகாலட்சுமி சுப்பிரமணியம்.



குரு சேவா ரத்னா, திருப்பணி செம்மல், திருப்பணி திலகம் போன்ற பலப்பல விருதுகளை பெற்றுள்ள இவர், பத்மா சேஷாத்ரி பள்ளியில் நூலகராகவும், லயன்ஸ் கிளப்பில் தலைவராகவும் உள்ளார்.மயிலாடுதுறை அருகிலுள்ள கோழிகுத்தி இவர் பிறந்த ஊர். இங்குள்ள வானமுட்டி பெருமாள் கோவில் மிகவும் பாழடைந்து மேற்கூரையின்றி சிதிலமடைந்து காணப் பட்டது.உடனே, ஊரில் உள்ள பெரியவர்கள் அனைவரையும் அழைத்துப் பேசி, அவரவர்களிடமே பொறுப்பை ஒப்படைத்து கும்பாபிஷேகத்தை நல்லமுறையில் நடத்தினார்.



இதனை தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் பகுதியிலுள்ள பாழடைந்த கோவில்களிலும் திருப்பணி செய்ய இவரை கேட்டுக்கொண்டனர். அன்று முதல் பழமையான கோயில்களை புனரமைக்கும் தொண்டைச் செய்துவருகிறார்.இதுவரை, 12 கோவில்களில் திருப்பணி முடிந்துள்ளது. 42 கோவில்களில் திருப்பணி நடந்துவருகிறது.கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவதோடு நின்றுவிடாது, அந்த கோவிலில் தினசரி பூஜை நடக்கவும், பராமரிப்பிற்கும் தேவையான நிதிக்கு ஏற்பாடு செய்கிறார். தனது மருமகன் கார்த்திக் கவுசிக், மகன் அர்ஜுன், மகள் ரம்யா ஆகியோர் மூலமாக, கணிசமான நிதியை வழங்கி வருகிறார்.



திருவிடைமருதூர் மகாலிங்கம் கோவிலுக்கு முற்பட்டதான ரிஷிபுரீஸ்வரர், சேஷாத்ரி சுவாமிகள் பிறந்த ஊரான வழூர் சுந்தரவதனப் பெருமாள் கோவில், திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி முத்துப்பேட்டை தாலுகாவில் உள்ள அபிராமி அம்பாள் சமேத குலசேகர சுவாமி கோவில் போன்ற கோவில்களை புனரமைப்பு செய்ய வாய்ப்பு கிடைத்ததை, பாக்கியமாகக் கருதுகிறார்.இவருடன் இணைந்து, கோவில் திருப்பணியில் பங்கேற்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: மகாலட்சுமி சுப்பிரமணியம், துளசி அப்பார்ட்மென்ட், 11,குப்புசாமி தெரு, தி.நகர், சென்னை-17. போன்: 099400 53289, 044-2815 2533.



- நமது சிறப்பு நிருபர் -

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 அம்மா உங்களை பணிந்து வணங்குகிறேன். கடவுள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நல்லருள் புரிவானாக. உங்கள் மூலம் இந்த சமுகதிற்கும் நம் இந்திய மக்கள்களுக்கும் எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.  
by G கணேச .சேகர் ,singapore (sirkali-mangaimadam),India    11-02-2010 22:00:06 IST
 ''''RADHEYKRISHNA''''
GREAT WORK.WE SHALL BE BLESSED TO TAKE PART IN THIS MAHA KAINKARYAM.
WE WILL CONTACT THEM.
M.BALAKRISHNAN
00971 50 5971844
 
by M BALAKRISHNAN,SHARJAH,India    06-01-2010 11:44:47 IST
  மிகவும் பாராட்டத்தக்க விஷயம். உங்களின் சேவை தொடர eraivanai பிரதிகிறேன்
madhan, Abudhabi 
by J MADHAN,mussafah,United Arab Emirates    05-01-2010 12:05:27 IST
 We need more Mahalakshmi ''s to renovate and maintain our temples in Tamilnadu. Govement concetrates only on revenue generating temples. Govement does not bother about the non-revenue generating temples. Good Work Mrs. Mahalakshmi. We like to volunteer our time, money & service to renovate and maintain our temples in Tamilnadu. 
by K Karuppannan Krishnappan,Pune,India    05-01-2010 00:48:17 IST
 Really Great Job, thanks to Dinamalar, we can be part of this social work.
 
by S Ram,Dubai. UAE,India    04-01-2010 22:01:06 IST
 அம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு..வளர்க உங்களால் சேவை..தினமலருக்கு நன்றிகள் பல..
போன் நம்பர் கொடுத்ததிற்கு நன்றிகள்.  
by s thanigai,singapore,India    04-01-2010 21:01:36 IST
 இது நல்ல காரியம், தொடர்ந்து செய்வோமாக.
வாழ்கவளமுடன்
 
by AMAR அமர்நாத்,muscat/oman,India    04-01-2010 19:58:34 IST
 மனதார வாழ்த்துகிறேன். தொடரட்டும் தங்களது சீறிய நற்பணி.  
by K JEEVITHAN,villupuram,India    04-01-2010 19:40:45 IST
 தங்கள் இறை pani thodara வாழ்துக்கள்  
by K Sethumadhavan,Bengaluru,India    04-01-2010 18:50:53 IST
 திருமதி மஹாலட்சுமி சுப்ரமண்யம் சகல செளகர்யங்களுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்து இது போன்ற பல கோவில்களை புணரமைக்கும் பணியை செய்ய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். செய்தியையும், திருப்பணியில் பங்கேற்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியை வெளியிட்டமைக்கு தினமலருக்கு நன்றி.  
by C Arun Selvaraju,Paris,France    04-01-2010 17:55:35 IST
 அறிவதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும், மிகவும் அழகான பாரம்பரியச் செறிவு மிக்க கோவில்கள் சிதிலமடைந்து கிடப்பதை கண்டு நான் நிறைய வேதனை பட்டிருக்கிறேன். என் கிராமத்திலும் இப்போது புணரமைப்பு நடந்து வருகிறது. புதிய கோவில்களை கட்டுவதை விட, பழைய கோவில்கள் மிக அருமையானவை. தயவு செய்து எல்லா கோவில்களையும் மீட்டுக் கொண்டு வாருங்கள். ஆனால் அவற்றை சுற்றுல்லாத் தலம் போல ஆக்க வேண்டாம். அது கோவிலின் அமைதியை கெடுத்துவிடும். நன்றி.  
by S காதர் ,Bengalooru,India    04-01-2010 17:48:08 IST
 வெரி குட்  
by R Nambi,sg,India    04-01-2010 17:43:28 IST
 காஞ்சி சங்கராச்சார்யர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஒரு முறை கூறினார் பழைய கோவில்களை புதுபிக்க வேண்டும் அதனால் இறைவனின் பூரண அருள் கிடைக்கும். இந்த அம்மையார் மகத்தான சேவை செய்து வருகிறார். இறைவனுக்கு தெரியும் யார் மூலம் எதை நிறைவேற்ற வேண்டும் என்று. சிறப்பாக சேவை செய்யும் இவருக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். 
by G G,Doha,,Qatar    04-01-2010 16:21:04 IST
 அம்மா உங்களை பணிந்து வணங்குகிறேன். கடவுள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நல்லருள் புரிவானாக.  
by துரை செல்வராஜூ ,Thanjavur,India    04-01-2010 14:09:29 IST
 I appriciate the service. I am planning for long time to do the same service. But I am away from India. Defenetly people like me would join with Mrs.Mahalaxmi and help her to increase her service. 
by SSR Sundar,Kuwait,Kuwait    04-01-2010 14:06:59 IST
 உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் .. 
by K வெங்கட்,Hyderabad,India    04-01-2010 13:41:26 IST
 நீங்கள் செய்கின்ற பணிக்கு, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். 
by m முருகன்,chennai,India    04-01-2010 13:39:51 IST
 Smt. Mahalakshmi is a great source of inspiration for others to emulate. I would like to join this noble cause and request others to join and give shoulder to her in this noble endeavour.
Kudos to Madam
guruprasath, New Delhi
 
by N. Guruprasath,New Delhi,India    04-01-2010 12:53:44 IST
 டியர் சார், இது போன்ற நல்ல செய்திகளை எங்கள் போன்ற தூர தேசத்தில் உள்ளவர்களுக்கு பயன்படும்படியாக முகவரியும் தொடர்பு கொள்ள போன் நம்பரும் கொடுத்து உதவியதற்கு ரொம்ப நன்றி. மேலும் இவர்கள் போல நல்ல உள்ளங்கள் கொண்டவரை நாங்களும் விரைவில் தொடர்பு கொண்டு உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது, எல்லாம் வல்ல இறைவன் இதற்கு துணை நிற்கவேண்டும். வாழ்த்துக்கள் க.கிருஷ்ணா, சலலாஹ், ஓமன்.  
by G கிருஷ்ணா,Salalah,Oman    04-01-2010 12:02:28 IST
 உங்கள் சேவை நாட்டிற்க்கும் மக்களுக்கும் வருங்கால சமுதாயத்திற்கும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் . 
by L ஸ்ரீதரன்,Chennai,India    04-01-2010 11:54:19 IST
 Really i appriciate mrs.mahalakshimi service, in million people we find one person only like mahalakshimi she should continue this thorughout his life god grace she we get reward what ever help she need nri we will provide to them each drop become a rain when we save become a dam so we should support and encourge mrs maha effect with out any hestitation
thanks k.s.kumar jeddah saudiarabia  
by k sivakumar,jeddah ,saudi arabia,India    04-01-2010 10:14:28 IST
 We need People like Mrs.Mahalakshmi to keep our temples alive .We truly should appreciate her work. This is a very good form of service that should be continued. It would be really nice if all of us take a pledge to volunteer our time, money or service of any kind to our community in this new 2010 . Even 10 minutes of our time a month or 10 bucks a month could go a long way.Ladies, Lets start the service at home by implanting the value of ''Giving back'' to the society to our kids from very young age itself . 
by Priya Suresh ,wilmington,De,United States    04-01-2010 03:53:56 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்