முதல் பக்க செய்திகள் 

வரி வடிவங்களாகவே உள்ள கலப்பு திருமணங்கள் : முதல்வர் கருணாநிதி வருத்தம்
ஜனவரி 19,2010,00:00  IST

Front page news and headlines today

சென்னை : ""இன்னும் நம் நாட்டில் காதல் திருமணம், கலப்புத் திருமணம் என்பதெல்லாம், வெறும் வரிவடிவங்களாக உள்ளன. அதை விடுத்து, உண்மையிலேயே காதல் திருமணம், கலப்புத் திருமணம் நமது சமுதாயத்தில் நடக்க வேண்டும்,'' என்று முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.கார்த்திகேயன், ரேவதி ஆகியோரது திருமணத்தை நடத்தி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது: மணமக்கள் பற்றி ஸ்டாலின் பேசும் போது, "ஸ்டுப்பிட்' என்பதில் தான் இந்த காதல் ஆரம்பமானதாக சொன்னார். பொதுவாக, காதலிப்பதே முட்டாள்தனம் என்ற ஒரு தத்துவம் நாட்டில் இருக்கிறது. ஆனால், அது முட்டாள்தனம் அல்ல. முழுமையான அறிவின் எல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், மணமக்கள் தங்களது வாழ்க்கையை நடத்துவர். இது கலப்புத் திருமணம் என்றனர். அந்தக் கலப்புத் திருமணத்தை இங்கு பாராட்டிப் பேசிய எத்தனை பேர் செய்து கொண்டனர் என்பதை தங்கள் நெஞ்சில் கை வைத்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால், கலப்புத் திருமணத்தைப் பற்றி வானளாவப் பேசுகிறவர்கள், தங்கள் ஜாதியில், சொந்தத்தில் பெண் கிடைக்கிறதா, சொந்தத்தில் மணமகன் கிடைக்கிறானா என்று தான் கணக்கிடும் காலமாக இந்தக் காலம் இருக்கிறது.இன்னும் நம் நாட்டில் காதல் திருமணம், கலப்புத் திருமணம் என்பதெல்லாம் வெறும் வரிவடிவங்களாக, வார்த்தை ஜாலங்களாக இருக்கின்றன. அதை விடுத்து உண்மையிலேயே காதல் திருமணம், கலப்புத் திருமணம் நமது நாட்டில், சமுதாயத்தில் நடக்க வேண்டும். இன்றைக்குச் சமத்துவபுரங்களை உருவாக்கியிருக்கிறோம் என்றால், அது ஏதோ ஏழைகளுக்கு வீட்டு வசதி செய்து தருகிறோம் என்றல்ல. அந்தச் சமத்துவபுரங்களிலே தான், கலப்புத் திருமணமே இன்று உருவாகிறது. சமத்துவபுரங்களில் உருவாகிற காதல், கலப்புத் திருமணங்களாக மாறி, அவர்கள் மூலம் இந்த நாட்டுக்கு கிடைக்கும் புதல்வர் கள் அல்லது புதல்விகள், எதிர்காலத்தில் இந்த தமிழகத்தை சமத்துவ பாதையில் நடத்திச் செல்லக் கூடிய வகையில் வளரக் கூடும் என்ற எண்ணத்தில் தான் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 ellorum kalapputhirumanam ponnungappa...neeyum oru nallathu senjatha irukkum tamilnattukku...appuram eppatha jathi marayaum 
by Murugan,chennai,India    21-01-2010 22:29:49 IST
 Dear All,
Mr. Karunanidhi opionion is wise. Intercast ove marriages will enhance the cooperation between people if all they choose it, because the new generation would not be divided by caste & religion. Intercast marriage would make a good generation and it would be good for united and peaceful India. 
by K Mohan,Saudi Arabia,India    21-01-2010 14:00:27 IST
 கலப்பு திருமணம் நம் சமூகத்திற்கு மிக கெடுதல்.அவ்வாறு திருமணம் செய்தவர்களின் நிலைமையை நேரில் கண்ட அனுபவத்தில் இதை உறுதியாக சொல்கிறேன்.இத்தகைய திருமணங்களால் சமூகத்தில் பெரும் குழப்பமும் கலவரமும் எஅற்படும்.இதைத்தான் கலைஞர் விரும்புகிறார்.  
by kalai R.Kalappaiya,singapore,India    21-01-2010 07:51:35 IST
 திருமணம் என்றாலே கலப்புதானய்யா...அப்புறம் என்ன? 
by மு முக,சென்னை,India    21-01-2010 06:46:59 IST
  GB ரிஸ்வான் ,jeddah,Saudi அரேபியா உங்கள் karuthukku மிக்க நன்றி.. ஆடை நன் அமோதிக்றேன்... நாட்டுப்பற்று உள்ள எவனுக்கும்.. உள்ள ஆதங்கம் தான் அது.  
by tamil தமிழ் நேசன் ,chennai,India    19-01-2010 19:25:46 IST
 Poi velaya parungapa.. athavittu vetti kadha pesikittu irukatheenga. natla ethavathu vela iruntha parunga.. 
by S ammu,canada,United States    19-01-2010 19:10:36 IST
 கலப்பு திருமணம் பண்ணுவீங்களோ...!!! கலக்காத திருமணம் பண்ணுவீங்களோ...!!!! கொஞ்சம் ஓவரா மக்கள் தொகையை பெருக்காமல் இருங்கள்...!!!! அப்புறம் முக்கியமான ஒன்னு மாமியார் மருமகள் சண்டைய தீர்க்க நல்ல வழி சொல்லுங்க...!!!! அத விட்டுட்டு கல்யாணத்துல கொழப்பம் செய்யறதே பொழப்பா இருக்கப்படாது....!!!! 
by TVM TVM,Erode,India    19-01-2010 17:55:22 IST
 நண்பர் ரிஸ்வானுக்கு ஆத்தா ஆட்சிதான் நல்லாட்சி போலும். 
by J j,DUBAI,United Arab Emirates    19-01-2010 16:00:03 IST
 நான் கலப்பு திருமணம் தான் செய்து உளேன். இந்த செய்தி படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  
by P GOWRI,madurai,India    19-01-2010 15:50:37 IST
 காதல் திருமணமோ கலப்பு திருமணமோ, இது ஒரு பரத்தை சமுதாயத்தை உருவாக்கும். இச்சமுதாயம் இன்றைய முதல்வருக்கு மிகவும் பிடிக்கும் போலிருக்கு? மேலை நாட்டில் விவாகரத்துகள் நம் நாட்டைவிட அதிகம். ஏன்? கலப்பு திருமணத்தினால் கலாச்சார வேறுபாடு காலபோக்கில் வெளிவந்து விவாகரத்தில் முடியும். 
by CRV கணேஷ் ,Muscat,Oman    19-01-2010 15:39:47 IST
 திருமணத்தினால் சமத்துவம் ஏற்படும் என்று நினைப்பது பகல் கனவு. இலங்கைத் தமிழர்களும் சிங்களவர்களும் பெருவாரியாக திருமண பந்தத்தில் சேர்ந்தால் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுவிடுமா? அ.தி.மு.க வினரும் , தி.மு.க. வினரும் பெருவாரியாக திருமண பந்தத்தில் சேர்ந்தால் தமிழக அரசியல் தெளிந்துவிடுமா? இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் / சீனர்களும் திருமணம் செய்துகொண்டால் எல்லை பிரச்சினை தீர்ந்து போய்விடுமா ? உள்ளன்பும் விட்டுக்கொடுக்கும் மனமும் இறைநெறிசெல்லும் மரபுமே சமத்துவத்திற்கு வழி. பண்டைக்காலத்து நாயன்மார் ஆழ்வார் வழி மட்டுமல்லாது இன்று உள்ள அய்யப்ப பக்தியுமே இதற்கு சான்று.
ம.இராமகிருஷ்ணன்
 
by M Ramakrishnan,Chennai,India    19-01-2010 15:13:17 IST
 Dear Riswan,
Mike solluvathu patriyellam kavalaippadavendam, Mr.மைக் avargal Jegathratchagan,vaali ,Vairamuthu மாதிரி
parattuvizha kumballa iruppavar endru ninaikkiren, neengal அதை kandukollavendam. 
by A AMUDHAKUMAR,kuwait,Kuwait    19-01-2010 14:50:44 IST
 
Hi Complaining Fools !!

What ever it is you close your eyes and start crying ?? This DMK is performing much much better than any others... they helped lot to poor and creating lot of jobs...

Lot of new projects which we never expected to happen is happening now (ex: cleaning kovam) ... TN become best place to open IT and othr industries ... Infrastructure getting better and better.... Lots of plans and helps for poors and farmers... TN is much peacful compared to ADMK period..

We can see clearly these DMK have great interest to bring TN front... Can any one say what others did good than these ???

Still you all complaning blindly... so why you hate this govt this much ??? i can guess you all should be failed fools in life and jus complain ... 
by A குமார்,Singapore,Singapore    19-01-2010 14:29:01 IST
 மாண்புமிகு முதல்வர் சமத்துவ ஆட்சியின் சாதனைகள்!
தேர்தல் வேட்பாளர் பட்டியல் என்றால் வடக்கே வன்னியர் தெற்கே தேவர்
வன்னியர் சங்க விழாவில் ராமதாஸ் தலைமையில் கலந்துகொள்வார்
பசும்பொன் தேவர் குருபூஜையிலும் கலந்து கொள்வார் அதிமுகவுக்கு போட்டியாக!.
மேலும் பல ஜாதி விழாக்களில் அமைச்சர்களை அனுப்புவார்
ஆனால் ஜாதி இல்லாத சமுதாயம் பற்றி பேச இவருக்கு மனம் எவ்வாறு தான் வருகிறதோ! 
by கண்ணன்,Chennai,India    19-01-2010 14:14:43 IST
 கலப்பு திருமணம் நம் நாட்டிற்கு மிகவும் அவசியமானது,இந்த கருத்தை நம் அனைவருமே ஏற்றுக்கொள்ள வேண்டும் ,  
by k rajan,conakry,Guinea    19-01-2010 13:56:38 IST
 GB ரிஸ்வான் அவர்களே நீங்க சொன்னது உண்மை தான்
சும்மா தேவை இல்லாம முதல அரசாங்கம் எப்புடின்னு பருந்கைய அங்க பாரு இந்த ஏலேச்றிசிட்டி பில்லா போட்டு தக்கா போறாரு நம்ம ஆற்காடு வீர சாமி அண்ணன் நீங்க என்னடான்ன  
by A சரவணன்,DUBAI,India    19-01-2010 13:14:52 IST
 அடடா ! ஜாதியை ஒழிக்க எவ்வளவு எளிய சங்கரன் திட்டம். காந்தி , அம்பேட்கர் , பெரியார் போன்ற தலைவர்கள் இது தெரியாமல் எல்லாம் எவ்வளவு கஷ்டப் பட்டு விட்டார்களே.
இட ஒதுக்கீடு வருவதற்கு முன் பள்ளிகளில் ஜாதி கேட்கப் படவில்லை.அப்பொழுதெல்லாம் ஜாதி ஒழிந்து தான் இருந்த்து !. பள்ளிகளில் ஜாதி கேட்கப் பட்டபின்பு தான் இந்தியாவில்
ஜாதியே தோன்றியது. அப்பப்பா இட ஒதுக்கீட்டுக்கு எதிராக எத்தனை பூனைகள்.
 
by M.S பூபதி,ajman,United Arab Emirates    19-01-2010 13:14:12 IST
 நண்பர் திரு Mike,Muscat,ஓமன் அவர்களே வணக்கம்..நீங்கள் ஓமனில் இருப்பதும் நான் சவுதியில் வந்து இருப்பதும் பணம் சம்பாரிக்க தான் மறுபதற்கு இல்லை.

நம் இருவரை போல நிறைய வாசகர்கள் பல நாடுகளை உள்ளார்கள்..இங்கே கருத்து சொல்வதில் எல்லோருக்கும் உரிமை இருக்கு.நாட்டில் பல நல திட்டங்கள் முடிந்து தயார் நிலையில் உள்ளன அதை இயக்கி வைக்க இந்த முதல்வர்களுக்கு நேரம் இல்லை ,,,தேதி இல்லையாம்..தினந்தோறும் இவர்கள் மக்கள் வரிபனத்தில் விழா எடுப்பதும்..

மஞ்சள் நீராட்டு விழா முதல் திருமண விழா வரை கலந்துகொண்டு வெட்டியாக பேசிக்கொண்டுள்ளனர்..அதை நேரிடையாக நம்மால் போய் கேட்க முடியாது..அந்த ஆதங்கத்தில் இங்கே வாசகர்கள் கருத்துகளை கோபமாக இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள்..

பணம் மட்டும் சம்பாரிக்க வந்து நாட்டு நிலையில் அக்கறை காட்டமால் இருந்தால் அது சுயநலம்..அது உங்களுக்கு பொருந்த்தும் எனில் சரி எனக்கு பொருந்தலை.

நான் வந்தது பணம் சம்பாரிக்க தான் தினமலரில் கருத்து சொல்ல இல்லை..என்று தாங்கள் எனக்கு சொல்ல வேண்டியது இல்லை..

முடிந்தால் கலைஞர் அவர்களுக்கு மக்கள் உங்களை முதல்வர் ஆக்கி உள்ளது மக்கள் பனி செய்ய தானே தவிர இப்படி வெட்டியாக பேச இல்லை என சொல்லும்./. ஒரு சின்ன வேண்டுக்கோள் இவரால் தமிழகத்தில் உள்ள அத்தனை கல்வி நிலயங்களில் ஜாதி இல்லமால் விண்ணப்பங்கள் வழங்க முடியுமா? என கேட்டு பாருங்கள்..உங்கள் விமர்சனத்துக்கு நன்றி..  
by GB ரிஸ்வான்,jeddah,Saudi Arabia    19-01-2010 12:54:59 IST
 முதல்வர் எது செய்தாலும் சில முட்டாள்களுக்கு புரிவதில்லை.
கழுதைகளுக்கு எங்கே கற்பூர வாசனை புரிய போகிறது.
காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாம்.
தான் திருடி பிறரை நம்பார்.
நிறை குடம் ததும்பாது.
அரை வேக்காடு ஆயிரம் ஸீன் காட்டும்.

by r ரமணி,Chennai,India
அய்யா ரமணி, நீங்கள் மு க வின் அடிவருடி என்பதை நிருபித்துவிட்டீர்கள். 
by v dev,doha,India    19-01-2010 12:54:22 IST
 யாரு ? யாருக்கு ? எப்படி அமையும் என்பது யாருக்கும் தெரியாது... கலப்பு திருமணமாவது கத்தரிக்கவது ,, முதல்ல நாட்ட காப்பாத்தும் ஒய் ...

 
by M Riyas,Al-khobar,Saudi Arabia    19-01-2010 12:52:43 IST
 GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia
போன்ற சிலர் எப்போதும் எதிர்த்து சொன்னாள் விளம்பரமாக எடுத்து கொள்கிறார்கள். முதல்வர் கருத்து பொதுவாக பார்த்தால் நல்ல விசயமே. சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே பெரிய மாற்றத்தை கொடுக்க முடியும். நாம் மாறினால் அரசும் மாறும். தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் தமிழகத்துக்கு மட்டும்தான் கிடைத்தார்கள். 
by மன்னைபாரதி ,kattumannarkoil,India    19-01-2010 12:31:22 IST
 ஹலோ GB ரிஸ்வான்! உனக்கு வேற வேலை வெட்டியே இல்லையா? எப்போ பார்த்தாலும் முதல் ஆளாய் தினமலரில் கருத்தை வெளியிடுகிறாய். பட்டிமன்றத்துக்கு சாலமன் பாப்பையாவும் அரசியலுக்கு சோ போன்றவர்களும் இருக்காங்க. நீ சவுதி போனோமா நாலு காசு பார்த்தோமான்னு வூரு வந்து சேரு. இப்படியே பேசிகினு இருந்தே எவன் கிட்டயாவது உதை வாங்க போற.  
by R சுரேஷ் Babu ,Miruthangapatti,India    19-01-2010 12:13:00 IST
 திரு விஜயஷங்கர்... மஞ்சள் துண்டு போட்ட பகுத்தறிவு வாதி மு க சொல்லும் அபத்தங்களை எல்லோரும் வாயை பொத்திக் கொண்டு கேட்டு கொண்டிருக்க மாட்டார்கள் (காங்கிரஸ் காரர்களை போல). ரிஸ்வான் போல ஓரிருவர் இருப்பார்கள். மஸ்கட்டிலுருந்து கருத்து எழுதும் நண்பர் சவுதி அரேபியாவிலிருந்து எழுதும் ரிஸ்வான் அங்கு சம்பாதிக்கத்தான் சென்று இருக்கிறார்... தினமலரில் கருத்து எழுத அல்ல என்கிறார். இவர் மச்காட்டிர்க்கு எதற்க்காக சென்றிருக்கிறார்... தினமலரில் கருத்து எழுதும் வேலைக்கா?

ஜாதி என்பதோ மதம் என்பதோ திருமணத்தில் முக்கியம் வகிக்கும். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பழக்க வழக்கம், கலாசாரம் இருக்கும். வேறு பிரிவினரை சேர்ந்த பெண்ணோ / பையனோ 25 - 30 வயதில் மாற்றிக் கொள்ளுவது என்பது கடினம். உதாரணத்திற்கு ஒரு பார்பனர் வீட்டு பையன் கிருஸ்துவ பெண்ணையோ இஸ்லாமிய பெண்ணையோ காதலித்து கை பிடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒன்று அவர் அந்த பெண்ணுக்காக மாமிசம் சாப்பிட பழக வேண்டும் அல்லது அந்த பெண் இவருக்காக மாமிசம் சாப்பிடுவதை / சமைப்பதை நிறுத்த வேண்டும். இது நடைமுறையில் மிகுந்த கடினமான காரியம். இதற்க்கு முன் வருபவர்களுக்கு காதல் / கலப்பு திருமணம் என்பது கடினமானதல்ல. இல்லையென்றால் இதுவே முக்கிய பிரச்சினையாக முடியும்.  
by H நாராயணன்,Hyderabad,India    19-01-2010 11:58:12 IST
 கலப்பு திருமணத்தால் எப்படி ஜாதி ஒழியும் என்று புரியவில்லை. பிள்ளைக்கு தந்தையின் ஜாதிதான். எங்கு சென்றாலும் ஜாதி கேட்கிறீர்கள். கலப்பின ஜாதி என்று ஒரு ஜாதியை புதிதாக உருவாக்கி, சலுகைகளை கொடுங்கள்.  
by K JEEVITHAN,villupuram,India    19-01-2010 11:54:35 IST
 Ms. Manimegalai,

//ந்தையின் ஜாதியே...ஆமாம்.. கலப்புத்திருமணம் மூலம் பிறந்த குழந்தைகள் தந்தையின் ஜாதியைச் சார்ந்தவர்கள் எனும் நீதிமன்றத் தீர்ப்பை மற்றும் சட்டத்தைக்கூட இவரால் கொண்டுவர முடியவில்லை! //

I think it has been changed lately. Please refer your advocate for further details. 
by Dr Tamilnadu Thamizan,USA,India    19-01-2010 11:47:29 IST
 Really Fantastic Idea this? Congrats!
Generally I dont like Kalaignar and his Family. But This Idea is very Nice. Because then only we can get unity.
Intercasete , Inter religion is the Solution to solve all the Problem. I am not supporting Love marriage.

Dear Parents please don''''t search alliance for only your Community. Search the Bride or Bridegroom for caste no bar.making inter caste marriage is Healthy for our country.
Dear Parents you should search the person good character and good Education and good Family background , not caste or religion.Educated People can do and Follow this, Thanks

Vijay TV Gopinath is also trying to change the People to make Intercaste, inter-religion marriage on his NEEYA NAANA show. So hats off to him. Please viewers think and take the good Decision.

But i request the government should support the Intercaste marriage and they have to give some reservations & grievances to them. Then only the People come forward to get inter-caste,inter-religion Marriage.
Please try to make Bharathiyar dreams

Thanks With regrads,
Sincere Indian,
G.J. Prabudazz Janakiraman 
by G.J Prabudass,Chennai,India    19-01-2010 11:40:32 IST
 மணிமேகலை அவர்களுக்கு .....
தாங்கள் இந்த நாட்டில் தான் வாழ்கிறீர்களா ? உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில் , கலப்பு திருமணம் செய்த வர்களுக்கு பிறத்த குழந்தைகள் தனது தாய் அல்லது தந்தை யின் ஜாதியை தேர்ந்து எடுத்து கொள்ளலாம் . இந்த செய்தி தினமலரில் தான் நான் வாசித்தேன் . இப்படி விவாதம் செய்யாமல் நீங்கள் அனைவரும் என் கலப்பு திருமணத்தை ஆதரிக்க கூடாது ?கலப்பு திருமனத்தால் மட்டுமே இந்த நாட்டில் சமத்துவத்தை கொண்டுவர முடியும் . நான் என்னால் என்ன முடியுமோ அதை செய்து விட்டேன் . நீங்களும் உங்களால் முடிந்த அளவும் இந்த ஜாதி பேயை விரட்ட முயலுங்கள் . அதைவிட்டு முத்லவறது கருத்தை எதிர்த்து கூறவேண்டும் என்று எதாவது எழுதாதீர்கள் . 
by C பிரதீப்,Chennai,India    19-01-2010 11:33:07 IST
 அறிவுக்களஞ்சியம் பூபதி அவர்களே, அரசு ஜாதியை ஒழிக்க நினைத்தால் ஒரே நாளில் ஒழிக்கலாம்- கல்வி கூடம், அரசு பணி மற்றும் எதிலும் ஜாதி குறிப்பிட வேண்டாம் என்று சொல்லி. சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் உங்களை போல் வாய் பேச்சில் மயங்கும் மக்கள் இருக்கும் வரை அவர்கள் ஏன் சொல்ல வேண்டும்?  
by N.S. Sankaran,Chennai,India    19-01-2010 11:24:12 IST
 வீண் பேச்சு , வெட்டி வேலை, சுயநலம் .. இது எல்லாவற்றிற்கும் மறு உருவம் மு.க. கலி ரொம்ப முதி போச்சு..  
by tamil தமிழ் நேசன் ,chennai ,India    19-01-2010 11:08:59 IST
 முதல்வர் அவர்களே...பள்ளி மற்றும் கல்லூரிகளில் என்ன ஜாதி என்று கேட்பதை நிறுத்த சொல்லுங்கள் ... நிறைய பிரச்சனைகள் சரி ஆகும்..
இப்படிக்கு தமிழன்... 
by S ஜைனுல்.,Jubail..,Saudi Arabia    19-01-2010 10:52:49 IST
 முதல்வர் எதைச் சொன்னாலும் அதை எதிர்க்க வேண்டியதில்லை. காதல்/கலப்பு/சீர்திருத்தத் திருமணங்களைப் பொருத்தவரையில் அவரது குடும்பம் ஒரு நல்ல முன் உதாரணமே. அரசியல்வாதிகள் வெறும் நிர்வாகிகள் மட்டுமல்லர். சமூக சீர்திருத்தங்களையும் அவர்கள் முன்னெடுக்க வேண்டியவர்களே. ஒவ்வொரு பேச்சையும் அதனதன் தன்மையிலேயே அளவிட வேண்டும் . கலப்புத் திருமணத்தை ஆத்ரித்துப் பேசுகையில் ஊழல்வாதி இதைப் பற்றிப் பேசலாமா என்பது சரியா ? தொகுதி வேட்பாளர் ஜாதி அடிப்படையில் நிறுத்தப்படுகிறார் என்ற குற்றச்சாட்டு நியாயமானதே. இதில் மக்களின் குற்றம் இல்லையா ? இவ்வகையில் காங். பாராட்டத்தக்கது. ஆனால் சிதம்பரம் தட்டுத்தடுமாரி வென்றதற்கும் , மாணிக் தாக்கூர் போகிற போக்கில் வென்றதற்கும் , ஈ.வி.கே.எஸ் , தங்கபாலு , மணிசங்கர் அய்யர் இவர்கள் தோற்றதற்கு மக்களின் ஜாதி உணர்வே காரணம். இலங்கைத் தமிழர் பிரச்சனை ஓரளவே வாக்காளர்களைத் திசை திருப்பியது . வாசகர்கள் இதையும் கண்டிக்க வேண்டும். மக்கள் அப்பட்டமான ஜாதி உணர்வுடன் இருக்கையில் எந்தக் கட்சி தான் ஜாதி தாண்டிய வேட்பாளர்களை நிறுத்தும் 
by M.S பூபதி,ajman,United Arab Emirates    19-01-2010 10:52:05 IST
 மதம் இல்லாமல் எப்படி பி.ஜே.பி யால் அரசியல் நடத்த முடியாதோ அது போல் சாதி பெயர் சொல்லாமல் தமிழ் நாட்டு கட்சிகள் அரசியல் நடத்த முடியாது  
by s ரகுமான்,chennai,India    19-01-2010 10:52:00 IST
 இந்த கருத்து ஏழை பாமர மக்களுக்கு மட்டும் தான் இதே பணக்கார அரசியல்ல்வாதிகளுக்கு அல்ல . அவரது பிள்ளைகள் வேற ஜாதி பெண்ணையோ , பையனையோ காதல் செய்தால் தண்டனை .  
by I ஷேக் தாவூத் ,SUNGAI PETANI , KEDAH ,Malaysia    19-01-2010 10:40:04 IST
 தமிழ் கலாசாரத்தை காற்றில் பறக்கவிட்டு மக்களை கெடுக்கும் கலைஞர் டிவிக்கு சொலுங்கள். ப்ளீஸ்  
by a அப்துல் கதர் ,dubai ,United Arab Emirates    19-01-2010 10:27:57 IST
 செல்வி மணிமேகலை அவர்களின் கருது மிக ஆக்கபூர்வமானது. இந்த பகுத்தறிவு அரசு, முதலில் கலப்பு திருமணம் செய்தோருக்கு தான் அரசு சலுகைகள் என்று அறிவிக்க தயாரா. திரு முக குடும்பத்தார் பிறப்பு சான்றிதழில் ஜாதி குறிப்பிட்டார்களா இல்லையா?  
by திரு ஜெய்,கனடா ,Canada    19-01-2010 10:16:02 IST
 ரிஸ்வான் தயவு செய்து உங்களுக்கு நாவடக்கம் தேவை . நீங்கள் சவுதி அரேபியா வந்தது வேலை பார்க்க தானே தவிர தினமலர் கமெண்ட்ஸ் எழுத அல்ல . நான் சொல்வது உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன். இதை போலத்தான் அமைச்சராய் வந்த கலைநர் விழாக்களில் கலந்து கொண்டு சமுதாயதிற்கு நல்ல கருத்துக்கள் சொன்னால் உங்களுக்கு இப்படி என்ன வெறுப்பு . கடுமையாக எழுதி இருப்பின் என்னை மன்னிக்கவும் .  
by Mike,Muscat,Oman    19-01-2010 10:05:18 IST
 முதல்வர் எது செய்தாலும் சில முட்டாள்களுக்கு புரிவதில்லை.
கழுதைகளுக்கு எங்கே கற்பூர வாசனை புரிய போகிறது.
காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாம்.
தான் திருடி பிறரை நம்பார்.
நிறை குடம் ததும்பாது.
அரை வேக்காடு ஆயிரம் ஸீன் காட்டும்.
 
by r ரமணி,Chennai,India    19-01-2010 10:01:14 IST
 நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றிப் பேசும் இவர்...
வாய்ச்சொல்லில் வீரரடி!

தினமலர் குழுவுக்கு... பாரதியாரின் பாடலை பின்னணியில் ஓட விடுங்கள்  
by gs கணபதி ,Kharoum,Sudan    19-01-2010 09:59:16 IST
 
Dear All,
Did you know? Most of the family members of Thiru MK had inter-caste marriage. He is the only leader in India, proved by his action according to his talk about the inter-caste marriage.
You guys, how many of you had an inter-caste marriage? Just talk whole heartedly. Thiru MK is the initiative of the inter-cast marriage in Tamil nadu.
The very big notable point is Mr. DCM’s marriage. Those people know about that only can praise Thiru.MK is a man of word OK.
How many leaders in India had taken a bride from low caste family? Thiru. MK did?
You guys don’t talk without knowing anything like a crazy commenter; just scold Thiru MK anyhow with abusive comments.
One of crazy comments has been given to suggest Thiru MK to run his party office in SAMATHUVAPURAM.
Hei, come on man!
Such a big political leader how can he run his office in SAMATHUVAPURAM. You no need to be in USA to comment like that.
 
by T JOPET,singapore,Singapore    19-01-2010 09:36:22 IST
 கலப்பு திருமணம் நம் சமூகத்திற்கு மிக கெடுதல்.அவ்வாறு திருமணம் செய்தவர்களின் நிலைமையை நேரில் கண்ட அனுபவத்தில் இதை உறுதியாக சொல்கிறேன்.இத்தகைய திருமணங்களால் சமூகத்தில் பெரும் குழப்பமும் கலவரமும் எஅற்படும்.இதைத்தான் கலைஞர் விரும்புகிறார்.இது அவருடிய சுயநலத்திற்கு மிகவும் தேவையான ஒரு விஷயம்.அன்பர்களே ஒட்டு மாங்கா ருசிக்காது.ஜாதி மாம்பழம் ருசியானது.சிங்கத்திற்கும் சிங்கத்திற்கும் பிறந்தால் சிங்கக்குட்டி.சிங்கத்திற்கும் புளிக்கும் பிறந்தால் அது என்னகுட்டி... உங்கள் சிந்தனைக்கே இதை விடுகிறேன்.  
by s annamalai ,chennai-44,India    19-01-2010 09:08:18 IST
 இன்றைய இளம் சமுதாயம் எதனை பேர் விவாகரத்துக்கு பொய் நீதிமன்றத்தில் நிற்கின்றர்கள் என்ற புளிவிவரத்தை முதல்வர் வாங்கி பார்ப்பது நலம், இதில் பெரும்பன்மையனவர்கள் கலப்பு, காதல் திருமணம் செய்தவர்கள்தான். தமிழர்க்கு என்று ஒரு பண்பாடு, கலாச்சாரம் உள்ளது. அதை விடுத்தது காதல் திருமணம், கலப்பு திருமணம் போன்றவற்றை அரசே ஊக்குவித்தல் சமுதாயம் இன்னும் சீரழிய வாய்ப்பு உள்ளது, ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்வதில் தவறில்லை. இதை அரசே உகுவிதல் கலாச்சாரம் கெட்டுபோக வாய்ப்பு அதிகம் ''''நாம் கண்குடகவே பார்க்கின்றோம் டாஸ்மார்க் கடையல் எவளவு இளைஞர்கள் பதிப்பு அடைதுள்ளர்கள் என்று''''.  
by S மனோகர் ,Chennai,India    19-01-2010 09:08:00 IST
 என் மகன் காதலித்து கலப்பு திருமணம் தான் செய்தான் அவனுக்கு அரசாங்க சலுகைகள் ஏதும் கிடைக்கவில்லை எல்லா அவங்களையும் கொடுத்தோம் கேட்ட படி

உங்கள் இருவரின் ஜாதியும் கலப்பு திருமண சட்டத்தின் கீழ் வரவில்லை போய் வாருங்கள் என்று தமிழ் நாட்டு அரசாங்க அதிகாரி கூறிவிட்டார்
கலப்பு திருமணம் என்றல் என்ன?
கேட்டேன் அதுக்கு கீழ் ஜாதி பையன் மேல் ஜாதி பெண்ணைதிருமணம் செய்தால் உதவி தொகைஉண்டு என்று கூறினார்கள்

அபப கலப்பு திருமணம் யாருயாரு செய்தால் அரசாங்கம் உதவி செய்யும் என்பதை விளக்கமா கூறி ஒரு பட்டியல் போடுங்கள் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன் சும்மா கண் துடைப்பு 
by nila mdu,madurai,India    19-01-2010 08:59:10 IST
 First ஜாதி Certificate, Do not ask any School and Goverment Office, then Automatic Cancel the ஜாதி. U mind it first. 
by k kannan,SINGAPORE,India    19-01-2010 08:55:49 IST
  முதல்வர் எந்த அறிக்கை கொடுதாலும் கிண்டலும் கேலியுமாக விமர்சனம் எழுதுவதில் தினமலரில் திரு GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia வடிவில் நான் பார்கிறேன்.  
by S விஜயஷங்கர்,arumbakkam,chennai,India    19-01-2010 08:47:07 IST
 திரு கருணாநிதிக்கு எந்த வேலையும் இல்லை. ஜாதி படி வேட்பாளர்களை நிறுத்துவார். எங்கே வன்னியர் அதிகமா இருக்கும் இடத்தில தேவர் சமுகத்தை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்து சமத்துவம் கொண்டு வாருங்கள் பார்போம். பாரதி முன்னரே சொன்னான் வாய் சொல் வீரரடி  
by gs கணபதி ,Khartoum,Sudan    19-01-2010 08:46:57 IST
 Dear CM,

why dont you consider giving reservations to intercaste marriages. In that way we can through away castes. Please think.
Thanks for your good steps for Tamil and Tamilnadu.


 
by Ram,Singapore,Singapore    19-01-2010 08:22:04 IST
 தந்தையின் ஜாதியே...ஆமாம்.. கலப்புத்திருமணம் மூலம் பிறந்த குழந்தைகள் தந்தையின் ஜாதியைச் சார்ந்தவர்கள் எனும் நீதிமன்றத் தீர்ப்பை மற்றும் சட்டத்தைக்கூட இவரால் கொண்டுவர முடியவில்லை!
கலப்புத்திருமணம் செய்துகொண்ட என் தோழி இரு சாதியினராலும் ஒதுக்கப்பட்டு உள்ளார்! சொத்தும் மறுக்கப்பட்டுள்ளது !
தந்தை உயர் சாதியினர் என்று சொல்லி மாநில அரசும் சலுகை அளிக்க மறுக்கிறது!
பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுச் சலுகை கலப்புத் திருமணம் செய்துகொள்பவருக்கே & அவர்களது வாரிசுகளுக்கே என மாற்ற வேண்டும்.ஜாதியை ஒழிக்க வேறு நல்ல வழியே இல்லை!  
by P மணிமேகலை,Madurai ,India    19-01-2010 08:18:51 IST
 இவர், ஜாதி பார்த்து வேட்பாளர் தேர்வு, ஜாதிக் கட்சிகளுடன் உறவு இவற்றைத் தவிர்க்கும் தைரியம் உண்டா?
இவற்றைச் செய்வாரா?
1.கலப்புத் திருமணம் செய்தவர்கள் மட்டுமே கழகத்தில் இருக்கலாம்.
2.ஜாதி, மதம் பார்த்து செய்யப்படும் திருமணங்களுக்கு கழகத்தவர் யாரும் போகக்கூடாது!
3..சட்டத்தை மீறி பல தார மணம் செய்துகொண்டவர்களை சிறை யிலடைக்க வேண்டும்!
4. பதினெட்டு வயதிற்கு குறைவானவர்களின் திருமணங்களில் ஈடுபடும்/ கலந்துகொள்ளும் தமது கட்சியனரை நீக்குவாரா?
5..இதெல்லாம் விட பெண்ணடிமையைப் போற்றும் மத சார்புள்ள திருமணங்களை கண்டிக்கும் தைரியமுண்டா ?
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றிப் பேசும் இவர்...
வாய்ச்சொல்லில் வீரரடி!
 
by V Mani,Chennai,India    19-01-2010 08:04:15 IST
 பேசாமே நம்ம தானை தலைவரு காதல் புரோக்கராகி விடலாம் ,,நல்ல காசு ,,, 
by k sathish,cbe,India    19-01-2010 07:49:25 IST
 Sir, Dont feel anything bad coz we also expecting that some good leader will come to TN and we never seen them and we are not feeling anything bad and we are still voting for you right. So dont feel anything bad and this is how it works. Always have ''0'' expectations like how we have with your government.Have good food, watch TV and take rest. We dont need anymore Karuthu Kandasamy. If you look at the TN between Vilupuram to Kanyakumari its same as 30 years back. People are feeling anything bad? they are not voting for you? Take is easy man. Less tention and Less work. Have fun dude. We have lot of commedy pieces in TN. 
by P Pandian,Florida,United States    19-01-2010 07:40:37 IST
 Sir, first go and talk to your family members and change the company name ..... first clean your bud then smell others. Don''t try to break the obvious things in our culture like caste and religion. We are not like you guys talking something and doing something. We just follow the usual way of life. We dont need your suggestions or comments. If you want please talk to your family member and they may listen you. Karuthu sola kilambitaaru kaalankaathala 
by P Pandian,Florida,United States    19-01-2010 07:32:01 IST
 today s menu kallappu thirumanam and * stupid*
salamon pappaya style vangha maldives jeeva pesungha , next mr rizwan ,, pesungha , we all want to laugh at home , dinamalar readers take charge now start 1 2 3 4 ..........  
by vs athreiya,dubai,United Arab Emirates    19-01-2010 07:16:41 IST
 உன்னால ஏற்கெனவே சட்டம் ஓழுங்கு சீர் கேட்டு பொய் இருக்கு .இதுல இந்த அறிக்கை வேற. இதனால எத்தனை பெற்றொர்கள் கண்ணீர் விடபோறாங்களோ . 
by Soundararaj,singaporre,India    19-01-2010 07:03:31 IST
 மக்களை முட்டாளாக்க நிறைய திட்டம் போடு......ஆனால் கண்டிப்பா உனக்கு ஒரு நாள் ஆப்பு என்பது உறுதி ஏன்னா கடவுள் உனக்கு திட்டம் போடுவாரு.... உண்மையான நன்மைபயக்குற திட்டம் போடு.....அதுதான் எல்லோருக்கும் நல்லது.... 
by SUN SUNDAR,singapore,India    19-01-2010 06:54:59 IST
 ''சமத்துவபுரம்'' என்ற பெயரில் புதிய ''சேரி''ப்பகுதியை உருவாக்கிய பெருமை கலைஞரையே சேரும்.அழிந்து கொண்டிருக்கும் ஜாதி உணர்வை அழியவிடாமல் தூபம் போட்டுக்கொண்டிருப்பது நீங்களும்,ராமதாசும் போன்ற ஓட்டுவங்கி அரசியல்வாதிகள்தான்;தேர்தல் வந்தால் மட்டும் ஜாதியைப் பார்த்து வேட்பாளர்களை நிறுத்துகிறீர்களே? செத்துக்கொண்டிருக்கும் ஜாதிக்கு உயிரூட்டிக்கொண்டிருப்பது சமுதாயமல்ல;உங்களைப் போன்றவர்கள்தான்!  
by பெ. சக்திவேல்.,தாராபுரம்,India    19-01-2010 06:53:52 IST
  தகுதி இல்லாம அட்வைஸ் பண்றத முதல நிறுத்து. 
by M pothiraj,Tampa,United States    19-01-2010 05:34:19 IST
 Casteism will not go as long as these pseudo-secular hypocrites of Dravidian Parties rule the state.  
by @பிக்க்சய்பேர்,Bangalore,India    19-01-2010 05:14:58 IST
 First remove the CASTE column from all the certificates, then automatically mixed marriage will be in place. 
by s testing,test test,India    19-01-2010 05:05:06 IST
 திரு கருப்பையா அவர்களின் கட்டுரை‌யில் இந்த மு க எந்த அளவுக்கு ஆதரவு கொடுத்தார் என்பதனை நாக்கை பிடுங்கி சாகிற மாதிரி கேள்வி எழுப்பி உள்ளார்...  
by s ஸ்ரீராம்,chicago,United States    19-01-2010 04:39:10 IST
 You bet CM! Let us talk about it.

Can you and your family move to Samathuvapuram and live there forever? OR else will you live only cozy and rich people populated area like Gopalpuram? Be honest.. We agree that you can''t live in Samathuvapuram. Be honest to us!!! 
by PR பராங்குசம் ராமவாமி,USA,United States    19-01-2010 04:35:58 IST
 கலப்பு திருமணம் செய்பவர்களை பெற்றோர் ஆதரிக்கவில்லை. எனவே அரசு ஆதரிக்கவேண்டும். கலப்பு திருமணம் நமது சமுகத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் நிறைய பெற்றோர் புரிந்து கொள்ளவில்லை. கலப்பு திருமணத்தால் ஜாதி என்ற பேய் ஒளியும். ராமதாஸ் என்ற பச்சோந்தியும் மறையும். மேலும் மதம் என்ற பித்து தெளியும். யாரும் எவரையும் கலப்பு திருமணம் செய்வதற்கு, மதத்தை மாற்ற வர்புர்த்தகூடாது. மேலும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்கள் துணை தேடி கொள்வர். இது ஒன்றும் நமது தமிழ் சமுகத்திற்கு புதிது அல்ல. ஜாதி என்ற சதி தோன்றுவதற்கு பல நூற்றாண்டுக்கு முன்பு, தமிழர்கள் காதல் திருமணம் மட்டுமே செய்தனர் என்று நமது வரலாறு கூறுகிறது.  
by ரவி,TORONTO,Canada    19-01-2010 03:16:23 IST
 என்ன தலைவரே பண்றது?
ஒரு பொண்டாட்டி வச்சு சமாளிக்குறதே தாங்க முடியல.. இவரு பாரு.. இப்படி கலப்பு திருமணம் பத்தி dialogue..

நடத்து ராசா நடத்து ....2013 la தமிழ்நாடு உங்களோட குடும்ப சொத்து..
 
by M Karthi,New Jersey,United States    19-01-2010 03:15:05 IST
 ஐயா முதல்வர்களே...நாட்டில் நிறைய பிரச்சனைகள் உள்ளன...இப்படி தினதொரும் விழா விருந்து என அப்பனும் பிள்ளையும் நாட்களை கடத்தாமல் தயார் நிலையில் உள்ள 350 பஸ்களை இயக்க விடுங்கள்.அதுக்கு ஒரு விழா எடுத்து தொலையும்..

மக்கள் பனி செய்ய தேதி தாருங்கள்
காதல் கல்யாணமா ? கலப்பு திருமணமா என பட்டி மன்றம் நடத்த உங்களை மக்கள் முதல்வர் ஆக்கவில்லை.. அதுக்கு சாலமன் பாப்பையா இருக்கார்.

கொடுமைடா சாமி இந்த ஆட்சி..  
by GB ரிஸ்வான் ,jeddah,Saudi Arabia    19-01-2010 02:52:03 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்