முதல் பக்க செய்திகள் 

நீதித்துறையில் கவலை தரும் அளவு லஞ்சம் கிடையாது: மொய்லி
பிப்ரவரி 13,2010,00:00  IST

Front page news and headlines today

புதுடில்லி : "நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அது இன்னும் பெரிய அளவுக்கு உயரவில்லை' என, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, பதவியில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார். அவர் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில்,"நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பது உண்மை தான்; ஆனால் உயர்மட்ட அளவில் சற்று குறைவாக இருக்கிறது' என்றார்.தனக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவி தரப்படாதது மனவருத்தத்தை தருவதாகவும் வெளிப்படையாக கூறினார். நீதித்துறை வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி அளித்த பேட்டி:நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை உண்மை இல்லை என முற்றிலும் மறுத்து விட முடியாது. அதற்காக, இதை மிகைப்படுத்தியும் கூறக் கூடாது. நீதித் துறையில் பெரிய அளவுக்கு, கவலைப்படும் அளவுக்கு லஞ்ச நடவடிக்கைகள் இல்லை.மற்ற துறைகளை பார்க்கும் போது இதில் லஞ்சம் குறைவு . இதை என்னால் உறுதியாக கூற முடியும். நீதித் துறையில் இதுபோன்ற முறைகேடுகள் இருந்தால், அதைச் சீராக்க இனி கொண்டு வரப்படும் நீதிபதிகள் கண்ணியம் மற்றும் பொறுப்பு குறித்த மசோதா சரி செய்ய உதவிடும் .இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
  ஐயா நம் தினமலர் வாசகர் அனைவரும் பொது கட்சியா இருப்போம் , கருத்துகளை பரிமரிகொள்ளுவோம்,  
by S சுபா கணேஷ்,kuala lumpur,Malaysia    13-02-2010 21:49:17 IST
 அய்யா
அரசியல்வாதிகளே உங்கள் பேச்சையெல்லாம் கேட்கவும்
உங்கள் செயல்களை பார்க்க சகிக்காமல் நீதி தேவதை தன் கண்களையும் காதுகளையும்
கருப்பு துணியால் கட்டிக்கொண்டாள்.


நீங்கள் உங்கள் கண்களையும் காதுகளையும் திறந்து நாட்டில் நடப்புகளை தெரிந்துகொண்டு பேசுங்கள்.

இல்லாவிட்டால் வெட்டிப்பேச்சு பேசாமல் உருப்படியான வேலை இருந்தால் செய்யுங்கள்.


 
by R KARTHI,TIRUPUR,India    13-02-2010 17:15:42 IST
 ஆமா.. கொஞ்சமா லஞ்சம் வாங்கினா தப்பில்லை, கொஞ்சமா பொய் சொன்னா தப்பில்லை, கொஞ்சமா கொலை செய்தா தப்பில்லை.. எல்லாத்துக்கும் ஒரு லிஸ்ட் ரெடி பண்ணி அரசு அலுவலக வாசல்ல போர்டு வச்சிடுங்க, ரொம்ப வசதியா இருக்கும்.  
by A முருகன்,Singapore,Singapore    13-02-2010 14:58:17 IST
 The minister admits that there is corruption in Judiciary. The main briber is the government machineries, either in the center or in state, followed by politicians belongs to ruling parties as well as the rich community. In fact there is no democracy even in the Indian judiciary. 
by cp mony,saudi arabia,India    13-02-2010 14:08:40 IST
 சேகர் சிங்கப்பூரானை போன்று இருக்கும் வெத்துவேட்டுக்கள் என்ன செய்வது? ஜெயலலிதாவுக்கும் இந்த செய்திக்கும் என்ன அய்யா சம்பந்தம்? உங்கம்மா ஆட்சிக்கு வந்துட்டா எல்லாம் சரியாகி விடுமா? நீ என்ன சிங்கப்பூர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயலாளர்(?) மாதிரியே பேசுறே?  
by S தமிழ் செல்வன் ,Madurai,India    13-02-2010 12:45:24 IST
 தீர்ப்பு வழங்குவோர் ஊழல் வழியிலே,ஏழை குறைகளை தீர்க்க வழியில்லை;தூக்க நிலையிலே நீதி வழங்குவோர்-இன்று,தூக்கு மேடையில் நீதி தேவதை. 
by வஞ்சி.க.தங்கமணி ,SHAHALAM,Malaysia    13-02-2010 12:20:10 IST
 நீதி துறையினருக்கு, சிறு குற்றம் செய்தலும் மரண தண்டனையும் கடும் சித்திரவதையும் கொடுக்கப் படவேண்டும்.

நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருக்கிறது. ஒரு ரூபாய் வாங்கினலும் லஞ்சம் தான். சட்டம் கடுமையாக இருக்க வேண்டும்.

நீதித்துறைக்கு இன்னும் சட்டம் கடுமையாக்கப் பட வேண்டும். They have to be punished in a brutal way like punishment enforced in arabian countries.

See this minister statement ''நீதித் துறையில் பெரிய அளவுக்கு, கவலைப்படும் அளவுக்கு லஞ்ச நடவடிக்கைகள் இல்லை'', it reveals or hinted that he n his party going develop it.

Judicial system must be removed. That only leds to the present atrocities.

Anbey Sivam  
by T A M Athavan,Tuticorin,India    13-02-2010 12:19:55 IST
 10 % வாங்கினால் தப்பில்லை. அதற்கு மேல் வாங்கினால் லஞ்சம். கையை வெட்டினால் தப்பில்லை, தலையை வெட்டினால் தப்பு என்று சட்டத்தை திருத்துவார் என்று நம்பலாம். ஆஹா இதுவல்லவோ ஜனநாயகம். .  
by r raman,madurai,India    13-02-2010 12:16:34 IST
 போகிற போக்கைப் பார்த்தால் இவ்வளவு பணம் வாங்கிக்கொண்டால் அது லஞ்சமாக கருத படமாட்டாது என்று வாங்கும் லிமிட்டை அரசாங்கமே அறிவித்துவிடும் போலிருக்கிறது.  
by V Balakumar,mumbai,India    13-02-2010 12:10:06 IST
 it is an irresponsible statement from an union minister!
bribe is illegal whether it is small or big!!???
when it happens in judiciary it is all the morre harmful!patting the judiciary saying it is less ,, is not healthy!  
by gk natarajan,chennai,India    13-02-2010 12:01:17 IST
 திரு ராதாகிருஷ்ணன் சொல்வது வடிவேலு சொல்வதைபோல சிறுபிள்ளைதனமாக இருக்கிறது. தயவு செய்து இப்படியெல்லாம் ஜோக் அடிக்காதீர்கள் திரு ராதாகிருஷ்ணன் அவர்களே. இவர்கள் எல்லாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருந்த மாட்டார்கள்... 
by t பார்த்திபன்,Periyakulam,India    13-02-2010 11:39:54 IST
 if it is a case involving moily or his relations and if the other party bribes and gets a victory,is that ok for moily? what kind of people we have in govt?for politicians anything short of murder is fine I presume. 
by v kannan,chennai,India    13-02-2010 09:41:51 IST
 சபாஷ் திரு வீரப்ப மொய்லி அவர்களே. இன்னும் லஞ்சம் நன்றாக வேரோடிய பிறகு களை எடுக்கலாம். 
by p. முத்துக்குமார்.,CHENNAI.KODAMBAKKAM,India    13-02-2010 09:04:32 IST
 லஞ்சம் வாங்குவது சட்ட ரீதியாக தப்பில்லை என்று ஆணை வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.  
by T பார்த்திபன்,Periyakulam,India    13-02-2010 08:38:11 IST
 வளரும் நாடான இந்தியாவில் எந்த துறை ஆனாலும் லஞ்சம் வாங்குகின்ற அதிகாரிகளை நாடு கடத்த வேண்டும். கட்சியில் பதவி கொடுத்து அழகு பார்க்க கூடாது.சட்டம் கடுமையாக இருக்க வேண்டும் .நடக்குமா நம் நாட்டில்? 
by S RADHAKRISHNAN,PARIS,France    13-02-2010 02:18:44 IST
 நீதித்துறையில் மட்டுமா லஞ்சம்? நிர்வாகத்துறையில் என்ன வாழுதாம்?
லஞ்சத்துக்கு கூட ஒரு ''எல்லை''வகுக்கின்றார்களே..கவலை தரும் அளவுக்கு இல்லை என்கிறாரே..அப்போ கவலை தரும் அளவு என்னவோ ''மந்திரியாரே'' கொஞ்சம் அந்த ''லிமிட்'' சொல்லிவிட்டால் அவர்களும் அந்த லிமிட்டை தாண்டமாட்டார்கள்..
அப்போ எத்தனை அப்பாவிகளுக்கு தண்டனையோ..எத்தனை முதல்வர்களின் பிள்ளைகளுக்கு ''விடுதலையோ''? இவரை நிச்சயம் விசாரிக்க வேண்டுமே..

வாங்கிய நீதியில் பிள்ளைகள் ஆடும் ஆட்டத்தை பார்கின்றோமே..இறைவன் மட்டுமல்ல ''வேறு'' எவனாலுமே இன்றைய இந்தியாவை ''திருத்தவே''முடியாது என்று நினைக்காமல்..''அம்மா''அவர்களை ஆதரியுங்கள் ''நன்றே'' நடக்கும்.. 
by P சேகர்,SINGAPORE,Singapore    13-02-2010 02:09:58 IST
 பெரிய குற்றவாளிகளுடன் சேர்ந்து மலேசிய, சிங்கப்பூர், ஐரோப்பா டூர் மற்றும் தேநீர் விருந்து என்ற அளவில் மட்டும்தான் லஞ்சம் உள்ளது. மக்கள் கவலைப்படும் அளவுக்கு நீதித்துறையில் லஞ்சம் இல்லை. மக்களுக்குத்தான், லஞ்சம் கொடுக்கவே கவலை இல்லையே, எனவே அவர்கள் கவலை படும் அளவு என்பது இன்னும் எந்த துறைக்கும் வரவில்லை. அதற்கான முயற்சி, கூடிய விரைவில் தாங்கள் எடுக்க வேண்டும்.  
by ரவி,TORONTO,Canada    13-02-2010 01:53:52 IST
 லஞ்சத்தை ஒழிப்பது எப்போது? யார் இதைச் செய்வது? 
by Mr. Yila,Nellai,India    13-02-2010 01:49:03 IST
 ஆமா லஞ்சம் கொஞ்சம் கம்மி.
ஒரு பழமொழி இருக்கு சொன்னா அசிங்கமா இருக்கும்... கொஞ்சம் வாங்கினாலும் லஞ்சம் தான். நெரையா வாங்கினலும் லஞ்சம் தான். 1ரூபாய் வாங்கினலும் லஞ்சம் தான். 100ருபாய் வாங்கினலும் லஞ்சம தான். யாரவது அந்த ஆளு காதுல பொய் சொல்லுங்க பா  
by A சரவண்ன்(யாமிருக்க பயமென்) ,DUBAI(MADURAI),India    13-02-2010 01:40:25 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்