முதல் பக்க செய்திகள் 

அருந்ததியர் உள் ஒதுக்கீடு : ஆதிதிராவிடர் தேசிய ஆணைய துணைத் தலைவர் எதிர்ப்பு
பிப்ரவரி 19,2010,00:00  IST

Front page news and headlines today

சென்னை : ""தமிழகத்தில் அருந்ததியினருக்கு வழங்கப்பட்டுள்ள 3 சதவீத உள் ஒதுக்கீடு, அரசியல் சட்ட விதிமுறைக்கு மாறானது. ஆதிதிராவிடருக்கான திட்டங்கள் செயல்படுத்தியதிலும் கருத்து சொல்ல முடியாத நிலை உள்ளது,'' என்று ஆதிதிராவிடர் தேசிய ஆணைய துணைத் தலைவர் காம்ப்ளே கூறினார்.தமிழகத்தில் ஆதிதிராவிட மக்களுக்கான திட்டங்கள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. ஆதிதிராவிடர் தேசிய ஆணைய துணைத் தலைவர் காம்ப்ளே தலைமை வகித்தார். உறுப்பினர் மகேந்திர போத், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசி, தலைமைச் செயலர், போலீஸ் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். ஆய்வுக் கூட்டம் முடிந்ததும், ஆதிதிராவிடர் தேசிய ஆணைய துணைத் தலைவர் என்.எம்.காம்ப்ளே நிருபர்களிடம் கூறியதாவது: ஆதிதிராவிடர் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறும் தமிழக அரசால், எப்படி பயன்படுத்தப்பட்டது, எவ்வளவு பேர் பயன் பெற்றனர் போன்ற புள்ளி விவரங்களைத் தர முடியவில்லை.அரசு ஊழியர்களில் ஆதிதிராவிடர் எத்தனை பேர், எத்தனை பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது, காலியிடங்கள் எவ்வளவு, பள்ளி, கல்லூரிகள் என்ன நிலை என்ற விவரங்களும் மாவட்ட வாரியாகவோ, துறை ரீதியாகவோ இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் பணியாளர் சங்கம் மற்றும் அரசுக்குமிடையே கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் தொடர்பு அதிகாரி இருப்பார். அதுபோன்று அதிகாரி இங்கு இல்லாததால், தகவல் பரிமாற்றம் சரியாக இல்லை என்று கருதுகிறேன். பிற மக்கள் ஆக்கிரமித்துள்ள இடங்கள் தான் பல இடங்களில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்பது தொடர்பாக 8,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன.தமிழகம் முற்போக்கான மாநிலம் என கருதப்படும் நிலையில், மனித கழிவுகளை மனிதனே எடுக்கும் நிலை; அதற்கான புகைப்பட ஆதாரம் உள்ளது. வன்கொடுமை வழக்குகளில், தண்டனை விகிதம் மிகக் குறைவாக உள்ளது. தமிழகத்தில் இதற்கென சிறப்பு கோர்ட்கள் அமைக்க வேண்டும். தலித்துகளுடன் கோவிலுக்குச் சென்ற குடியாத்தம் எம்.எல்.ஏ., லதா மீதான தாக்குதல் குறித்து, இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் அருந்ததியினருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது, அரசியல் சட்ட விதிமுறைகளுக்கு மீறானது. இதுமாதிரி ஏதும் முடிவுகள் எடுத்தால், ஆணையத்திடம் ஆலோசனை பெற வேண்டும். அதுபோன்ற நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. நிறைய எதிர்பார்ப்போடு தமிழகத்திற்கு வந்தோம்; ஆனால், மாநில அரசின் செயல்பாட்டில் எந்த கருத்தும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம். இவ்வாறு காம்ப்ளே கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 அப்படியே கொஞ்சம் படிச்ச நல்ல தகுதி உள்ளவர்குளுக்கு 5% reservation செய்தால் நாடு உருபுடும்.  
by v chandra,chennai,India    19-02-2010 17:48:17 IST
 அய்யா கணக்கு கேட்ட எம்.ஜி.ஆர் கட்சியிலுருந்து வெளியேற்றப்பட்டார்,ஒங்களுக்கு எப்படி சவுகரியம்?தலைமை கணக்கு அதிகாரி உண்மைய சொல்ல போய் செமத்தியா வாங்கி கட்டிகினு போனாரு,அடுத்தது நீங்க பாவம்,தமிழக ஆட்சியாளர்களிடம் இதையெல்லாம் கேட்க்ககூடாதுன்னு ஒங்களுக்கு தெரியவேணாம்,தமிழகத்தையே குடும்பத்தோட சுத்தி சுத்தி ரவுண்டு கட்டிகினு இருக்கறாங்க,அது புரியாம! 
by k thiru,chennai,India    19-02-2010 17:29:01 IST
 நிச்சயம் ஒரு நாள் ஜாதி ஒழிய வேண்டும் என்றால் இது போன்ற உள் மற்றும் வெளி ஒதுக்கிடு முறையை ஒழிக்க வேண்டும் கம்ப்ளே பதில் சரியான ஒன்றே  
by s அருள்ராஜ்,chennai,India    19-02-2010 16:56:59 IST
 Hello Every body ,please look at this news very terrible , What is hell is going on in Tamil Nadu ,Mr Kalingner said we does this job and we does that job , we are very good government.

But they can not do simple job , Mr Kamble asking question and his statement What is answer ? Mr Stalin can answer to him ,sure can not?

One thing the Kalinger hole family give bullshit (like TV , Cylinder , and gas , Land) to Tamil Nadu people , please tamil nadu people please weak up and through out the DMK government this is my opinion , any body comments ,please tell I appreciate your comments , because I am saying is 100% correct.  
by M sarwan,India,India    19-02-2010 15:31:23 IST
 நேஷனல் கமிஷன் கருத்து சரியானது 
by MR மோகன் ,Madurai,India    19-02-2010 14:50:50 IST
 ஜாதியை சிலர் ஆதரிக்கின்றனர் சிலர் ஆதரிக்கவில்லை. காரணம் சிலருக்கு கிடைக்கும் சலுகை சிலருக்கு கிடைப்பதில்லை. ஆகையால் அரசாங்கம் ஆளுக்கொரு சட்டமும் ஆளுக்கொரு சலுகையும் கொடுக்க முடியாது. பொதுவாக போடப்படும் சட்டம் சிலருக்கு பாதகமாக இருக்கலாம். அது அவர்களின் நேரம். தங்க தலைவர் கலைனர் கருணாநீதி அவர்கள் இருக்கும் வரை அணிவருக்குமே நன்மை தான் கிடைக்கும். கவலைபடாதே தமிழா.  
by R இளங்கோவன்,Singapore,Singapore    19-02-2010 12:02:36 IST
 ஆதி திராவிடர்களில் பல பிரிவுகள் இருப்பதாக அறிகிறோம். சில பிரிவு மக்களே அரசு தரும் பலன்களை அனுபவிக்கின்றனர்.பலர் விடுபட்டு விடுகின்றனர். உ.ம் வள்ளுவன் ஜாதி. இவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதே இல்லை. இவர்களின் வாழ்க்கை தரம் சிறப்பாக இல்லை என்பது ஊரறிந்த உண்மை. ஜாதி வாரியாக உள் ஒதிக்கீடு இருப்பது நல்லது தான். அப்பதான் சமத்துவம் நிலவும். இது என் அனுபவ பூர்வ கருத்து. 
by K Kannan,Trichy,India    19-02-2010 09:11:25 IST
 அய்யா காம்ப்ளே அவர்களே புள்ளி விவரமா கேக்குரீர் ........
எதற்க்காக கேக்குரீர் புள்ளி விவரம் நீ என்ன மாமனா மச்சானா இல்லை எங்கள் கழக உடன்பிறப்பா?
இது எங்கள் ஆட்சி , எங்கள் குடும்ப ஆட்சி , எங்கள் கழக ஆட்சி நாங்கள் எது வேண்டுமானாலும் பண்ணுவோம்
உண்மையிலேயே எங்கள் ஆட்சியை பற்றி தெரிந்திருந்தால் நீ இப்படி கேட்டிருக்க மாட்டாய் .
எத்தனை எதிர்க்கட்சி M.L.A க்கள் எங்கள் கட்சியில் சேர்த்தோம் என்று கேள், எத்தனை பேரை ராஜினாமா செய்ய வைத்து எத்தனை இடைத்தேர்தல்களை சந்தித்தோம் என்று கேள், கோழி பிரியாணிக்கும் குவார்ட்டர் பாட்டிலுக்கும் எவ்வளவு செலவு செய்தோம் என்று கேள் பதில் சொல்கிறோம் , இவ்வளவு சாதனைகள் இருக்கும் போது எங்கள் ஆட்சிக்கும் குடும்பத்துக்கும் பயனில்லாத சம்பம்தமில்லாத கேள்விகளை கேட்டால் நாங்கள் எப்படி பதில் சொல்ல முடியும் , நாங்கள் இந்த ஜாதிக்கு இது செய்தோம் அந்த ஜாதிக்கு அது செய்தோம் என்று சொல்லி சொல்லி தமிழ்நாட்டையே முட்டாளாக்கிவிட்டு எதுவும் செய்ய மாட்டோம் , எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது எங்கள் குடும்ப வளர்ச்சியும் கழக வளர்ச்சியுமே முக்கியம் முக்கியம் முக்கியம் என்று கூற கடமைப்பட்டிருக்கிறேன் ... 
by S Ananth,Chennai,India    19-02-2010 06:54:45 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்