முதல் பக்க செய்திகள் 

போலி மருந்து விற்றால் ஆயுள் தண்டனை ; முதல்வர் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் முடிவு
மார்ச் 22,2010,00:00  IST

சென்னை: தமிழகத்தில் போலி மற்றும் காலவதியான மாத்திரைகளை விற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து முதல்வர் கருணாநிதி சுகாதார ஆய்வு மற்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் சட்ட நடைமுறைகள் கடுமையாக்க முடிவு செய்யப்பட்டதாக சுகாதார செயலர் நிருபர்களிடம் தெரிவித்தார். அவசர ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் நிருபர்களிடம் பேசிய தமிழக சுகாதார செயலர் சுப்புராஜ் கூறியதாவது:

போலி மற்றும் காலவதியான மருந்துகள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இவர்களை தமிழகத்தில் வேரோடு களைய வேண்டும் என்றும் , இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு உயர்ந்த பட்டசம் ஆயுள் தண்டனை வழங்கிட குற்ற நடைமுறை சட்டத்தில் மாற்றம் கொண்டு வர முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

மனித உயிர்களை காக்கும் மருந்துகள் காலாவதியானால், அவற்றை அழித்துவிட வேண்டும். அவற்றை மீண்டும் விற்பனை செய்யும் போது, உயிர் காக்கும் மருந்துகளே மனித உயிர்களை பலிவாங்கி விடும்.அழிக்கப்பட வேண்டிய மருந்துகளை மீண்டும் புழக்கத்தில் விட்டு, பொதுமக்கள் உயிருடன் விளையாடி வந்த கும்பல், தற்போது சென்னை போலீசாரிடம் சிக்கியுள்ளது.பொதுவாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் தயாரிப்பு மருந்துகளை டீலர்களுக்கு அனுப்பி அவர்கள் மூலம் மருந்துக் கடைகள், மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்கின்றன. இவ்வாறு அனுப்பப்படும் மருந்துகளில் தயாரிப்பு மற்றும் காலாவதியாகும் காலம் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கும். குறிப்பிட்ட காலாவதியாகும் காலம் முடிந்த பின், அந்த மருந்துகளை விற்பனைக்கு வைக்கக் கூடாது என்பதே விதி.இவ்வாறு காலாவதியாகும் மருந்துகளை, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தனியாக பிரதிநிதி ஒருவரை நியமித்து அவற்றை அழிப்பதற்கான பணியில் ஈடுபடுகின்றன.

 

சென்னையை பொறுத்தவரையில் கொடுங்கையூர், எழில் நகரில் தான் காலாவதியான மருந்து பொருட்கள் அழிக்கப்படுகின்றன. இவ்வாறு அழிக்க வேண்டிய மருந்துகள், மீண்டும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக சென்னையில் உள்ள மருந்து ஆய்வு அதிகாரி இளங்கோவிற்கு தகவல் கிடைத்தது.7 பேர் கைது: உடன் அவர், சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். கமிஷனர் உத்தரவின்படி, வடசென்னை இணை கமிஷனர் சேசஷாயி, புளியந்தோப்பு துணை கமிஷனர் பாஸ்கரன் மேற்பார்வையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு சோதனை நடத்தினர். அதில், கோயம்பேட்டில் உள்ள 'மீனா ஹெல்த் கேர்' எனும் மருந்து ஏஜன்சியில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதில், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மருந்துகள் அதிகளவில் இருந்ததாக கூறப்படுகிறது.

 

இது தொடர் பாக, முத்தமிழ்நகர் ஆறாவது தெருவைச் சேர்ந்த ஜெகதாம்பாள் (50), அவரது மருமகள் சுமிதாராணி (29), சூளைமேடு ராகவன் தெருவைச் சேர்ந்த தம்பிராஜன் (50), கோயம்பேடு, பிருந்தாவன் தெருவைச் சேர்ந்த கோபிநாதன் (29), கொளத்தூரைச் சேர்ந்த விஜயகுமார் (34), புளியந் தோப்பைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (35) மற்றும் பாடி, சீனிவாச நகரைச் சேர்ந்த கிருபாகரன்(30) ஆகிய ஏழு பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும், கோயம்பேடு, மீனா ஹெல்த்கேர் நிறுவனத்தின் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம்(45), கைது செய்யப் பட்ட ஜெகதாம்பாளின் மகனும், சுமிதாராணியின் கணவனுமான ரவி (எ) பிரபாகரன், வெங்கடேசன், எழும்பூர், அர்ஜுனா கார்டன் தெருவைச் சேர்ந்த சஞ்சய் குமார், சூளைமேட்டை சேர்ந்த பாஸ்கரன்(35), பிரதீப் ஜோர்டியா (32), சேகர் (35) ஆகிய ஏழு பேரை தேடி வருகின்றனர்.

 

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அழிக்கக் கூறி தரும் காலாவதியாகும் மருந்துகளை வெங்கடேசன் என்பவர், ஜெகதாம்பாளின் மகன் ரவியிடம் கொண்டு சென்று கொடுத்துள்ளார். இவற்றை பெற்ற ரவி, எழும்பூரில் உள்ள சஞ்சய் குமாரிடம் கொடுத்துள்ளார். அவர், மருந்து ஸ்டிரிப்களில் உள்ள தயாரிப்பு, காலாவதி குறிப்புகள், விலை மற்றும் பேட்ஜ் எண்களை ரசாயனக் கலவை கொண்டு அழித்துவிட்டு, புதிய தயாரிப்பு, புதிய தேதி பதிவு செய்து, சூளைமேட்டை சேர்ந்த மார்க்கெட்டிங் ஏஜன்ட்டான பிரதீப் ஜோர்டியாவிடம் அளித்துள்ளார்.மருந்துகளை பெற்ற பிரதீப் ஜோர்டியா, அவற்றை கோயம்பேட்டில் உள்ள மொத்த விற்பனையாளருக்கு அனுப்பி, அதன் பின், மருந்துக் கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள், பல ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

போலீசார் தரப்பில், தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அப்படி பிடிபடும் போது இவர்கள் எங்கெல்லாம் இம்மாதிரி செயல்பட்டு காலாவதியான மருந்துகளை விற்று பலரது வாழ்வில் சதி புரிந்திருக்கின்றனர் என்று தெரியும்.

 

சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ் உத்தரவில், ''தமிழகம் முழுவதும் 42 ஆயிரம் மருந்துக் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப் படும் நிலையில், இது போன்ற மோசடி சம்பவங்கள் சவாலாக அமைந்து விடுகின்றன. விலை உயர்ந்த மருந்துகள் மட்டும் இப்படி விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகம் முழுவதும் போலி மருந்துகளை கண்டுபிடிக்க மருந்து கட்டுப்பாட்டு புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 

காலாவதி மருந்துகள் கண்டறியப்பட்டது எப்படி? மருந்து நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் போலி வராமல் தடுக்க பல யுக்திகளை கையாளுகின்றன. அதே போன்று, ஆண்டு தோறும் தயாரிக்கப்படும் மருந்துகளில் குறிப்பாக மாத்திரைகளை பொறுத்தவரையில் ஒவ் வொரு ஆண்டும் மாத்திரைகள், அட்டைகளில் வைக்கப்படும் எண்ணிக்கையில் மாறுபடுகின்றன.உதாரணமாக 2008ம் ஆண்டு தயாரிக்கப் பட்ட மாத்திரை அட்டைகளில் எட்டு மாத்திரை இருந்தால், அடுத்தாண்டில் 10 மாத்திரைகள் கொண்டதாகவும், அதற்கடுத்தாண்டில் 12 மாத்திரை அல்லது 15 மாத் திரைகள் கொண்டதாகவும் இந்த அட்டைகள் இருக்கும் என கூறப்படுகிறது.பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான மாத்திரை அட்டைகளில் தயாரிக்கப்பட்ட ஆண்டிற்கும், மாத்திரை அளவிற்கும் சம்பந்தமில்லாமல் இருந்ததால் தான் இந்த மோசடி கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

காலாவதி மருந்து சாப்பிட்டால் என்னவாகும்?காலாவதியான மருந்துகள் சாப்பிட்டால் மனித உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாக்டர் ஒருவர் தெரிவித்த தகவல்:சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்த பாதிப்புகள் உள்ள நோயாளிகள் காலாவதியான மருந்துகளை சாப்பிட்டால் சர்க்கரை அளவோ, ரத்த அழுத்தத்தின் அளவோ கட்டுக்குள் வராது. மாறாக வேறு பல பிரச்னைகளை உண்டாக்கிவிடும். கர்ப்பிணி பெண்களுக்கு தைராய்டு இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்து காலாவதியானதாக இருந்தால், குழந்தை மூளைக் கோளாறுடன் பிறக்க வாய்ப்புள்ளது. பொதுவாக மருந்துகள் சூரிய வெப்பம் பட்டால் விஷமாகக் கூட மாறிவிட வாய்ப்புள்ளது. எனவே, காலாவதியான மருந்துகள் சாப்பிட்டால் மருந்தின் தன்மையை பொறுத்து பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   |  More Picture
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 வர வர உயிருக்கு உலை வைக்கிறானுவோ!!எனவே அயுள் தண்டனை குறைவு . 
by s இபு/பாரிஸ் ,sarcelles,France    23-03-2010 00:00:40 IST
 'வரவேற்க தக்க முடிவு,மனித உயிர்களுடன் விளையாடும் இவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும். இரக்கமில்லாத அரக்கர்கள் சட்டத்தின் பிடியிலேருந்து தப்ப விட கூடாது, ரூல்ஸ் மட்டும் போதாது, நடமுறை படுத்தனும்,' 
by A Alawdeen,Abudhabi,UnitedArabEmirates    22-03-2010 23:24:40 IST
 அப்ப இத்தன நாளா சும்மா தான் இருந்துச்சா சட்டம் . இதல்லாம் பார்க்க அரசுக்கு ஏது நேரம் . இலவச அறிவுப்புகளுக்கே நேரம் சரி யா இருக்கு . ஒட்டு பொருக்கிகளுக்கு 
by G Ramesh,Riyadh,SaudiArabia    22-03-2010 23:10:30 IST
 wild animals.....shoot its 
by S Durai,karuppur,Dubai,UnitedArabEmirates    22-03-2010 22:56:32 IST
  அரசாங்கம் செய்ய வேண்டியது... எல்லா மாத்திரைகளும் நல்லமுறையில் pack செய்யப்பட்டு expiration date மக்களுக்கு விளங்குகின்ற மொழியில் எழுதப்பட்டு விற்கப்படுகின்றதா என்று கவனிக்க வேண்டும். மக்களின் உயிரோடு விளைய யடுகின்றவர்கள் கண்டிப்பாக தண்டிக பட்வேண்டும்  
by R.S Mathusoothan,Nashville,UnitedStates    22-03-2010 21:54:28 IST
  சில மாதங்களுக்கு முன் சீனாவில் போலி பால் பவுடர் விற்ற மூன்று பேரை தூக்கில் இட்டனர். இங்கும் அது போல் செய்தால் நன்றாக இருக்கும். 
by a j,singapore,Singapore    22-03-2010 21:30:55 IST
 மிக சிறந்த துணிச்சலா முடிவு . தமிழக அரசுக்கு பாராட்டுகள்  
by து. கார்த்திகேயன் ,singapore,India    22-03-2010 21:13:14 IST
 பணத்திற்காக வியாதிஸ்தர்கள் குழந்தைகள் உயிருடன் விளையாடும் இவர்களை தூக்கில் இடவேண்டும்  
by kmas meeran,riyath,SaudiArabia    22-03-2010 21:06:41 IST
 Kill them in public feeding the expired medicine 
by rk raman,ottawa,India    22-03-2010 20:35:39 IST
 எம். டி .படித்த மருத்துவர்கள் சமீப காலமாக, கலர் கலராக மருந்துகளை எழுதி மக்களின் பணத்தைச் சுருட்டத் தொடங்கியுள்ளனர்.ஆனாலும் வியாதி குணமாகிறதா?என்றால் பெரும்பாலானவர்கள் இல்லை, என்று தான் சொல்வார்கள்.இதற்குக் காரணம் இப்போது தெரிந்திருக்கும்.! சுகாதாரத் துறை விரைந்து செயல்பட்டால், இந்தியாவில் உள்ள மருந்துக்கடைகளில் பத்து சதவீதம் மட்டும் தான் அசல் மருந்தாக இருக்கும்.பாக்கி இதுபோல டுபாங்கூராகத்தான் இருக்கும்..!  
by va.me salahdeen,dubai,UnitedArabEmirates    22-03-2010 20:03:56 IST
 Medicines should be dispensed only through pharmacist(B.Pharm).even the owner of Pharmacy(Retail and wholesale)should be B.pharm Graduate. most of the pharmacies run with out pharmacist they will give not proper guidance to the patients.Next storage most of the medicine should be stored in 25 degree centigrade but no one is doing, that leads to decomposition of the drugs.my sincere request to govt pharmacy should run only with B.Pharm graduate.  
by DR Ravi,madurai,India    22-03-2010 19:50:37 IST
 தூக்கில் போடுங்கள் இவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசம் இல்லை................. 
by ரமேஷ்,singapore,Singapore    22-03-2010 19:27:19 IST
 இதில் சில விஷயங்கள் எல்லோருக்கும் தெரியவேண்டியது என்னவென்றால் யாராவது மாட்டுகிரானென்றால் ,நித்தியானந்த சமாசாரம் தான். பேரம் படியவில்லை . இது மிக நீண்டகாலமாக நடக்கிறது. ஆசுபத்திரியில் வாங்கும் மருந்துகள் ஏன் வேலை செய்வதில்லை .யாராவது அங்கு கண்டுபிடிகிரர்களா ? ஏன்? பாதி மருந்துகள் வெறும் மாவு அல்லது கலர் தண்ணீர் தான் .உலகத்தில் தடை செய்யப்பட்ட மருந்துகள் ( சாரிடான் ,லோமோடில் ....) செக் செய்து பாருங்கள் ....ஏன் இங்கு இருக்கிறது ...மாதாந்திர வசூல் ..... 
by p கமலூடின்,chennai,India    22-03-2010 19:27:10 IST
 வரவேற்க தக்க முடிவு, கொடுமையான மரண தண்டனை கொடுக்கணும். ரூல்ஸ் மட்டும் போதாது, நடமுறை படுத்தனும்.  
by A basker,Muscat,India    22-03-2010 19:21:39 IST
 எங்கெங்கு காணினும் போலியடா? போலி போலீஸ் , போலி ஐஏஎஸ், போலி ஐபிஎஸ், போலி டாக்டர், போலி வருமானவரி அதிகாரிகள், போலி உணவு பொருள்கள், காய்கறிகள், போலி சான்றிதழ்கள், போலி ரூபாய் நோட்டுகள், போலி வாக்காளர்கள், போலி சாமியார்கள், தற்போது போலி மருந்துகள். இருந்துவிட்டு போகட்டும், நாட்டுபற்று இல்லாத போலி அரசியல்வாதிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கப்போகிறிர்கள் ?  
by K JEEVITHAN,VILLUPURAM,India    22-03-2010 19:00:21 IST
 அனைவருக்கும் வணக்கம், இந்த அரசாங்கம் இயற்றும் சட்டங்கள் அனைத்தும் இனி நடக்க போகும் தவறுகளைத்தான் தண்டிக்கும். இவ்வளவு பெரிய தேச துரோகம் செய்த இந்த திருட்டு கும்பலை தண்டிக்குமா? இதன் பின்னணியில் கண்டிப்பாக ஒரு கரை படிந்த கரை வேட்டிக்காரன் இருப்பான் அவன் தண்டிக்க படுவானா?  
by M பிரகாஷ்,Chennai,India    22-03-2010 18:53:28 IST
 மக்கள் உணர்ச்சி பிளம்பாய் இருக்கிறார்கள். துப்பாகியால் குண்டடி பட்டு இறப்பதை விட போலி மருந்தினால் கொஞ்சம் கொஞ்சமாக சாவது கொடுமையிலும் கொடுமை. இவர்களுக்கு அதிகபட்ச தண்டனை தர வேண்டும் என்று மக்கள் அரட்டினாலும் அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தை தாக்கியவன், மும்பை தாக்குதலை நடத்தியவன் போன்ற மிக பெரும் குற்றவாளிகள் கூட சிறைச்சாலைகளில் சாவை பற்றிய பயம் இன்றி உறங்கும் போது இந்த குற்றவாளிகளை அரசு தூக்கில் போடும் என்பது நடக்கவே நடக்காது. இருக்கவே இருக்கிறது வேற்று மனித உரிமை சங்கங்கள். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள். இவர்களும் நிமதியாக சிறையில் உறங்குவது நிச்சயம். எப்படியும் உயிர் போகாது இவர்களுக்கு.  
by k கைப்புள்ள,nj,India    22-03-2010 18:52:11 IST
 இதன் முலம் சம்பாதித்த பணம் மற்றும் திரும்ப பெற்று ஏழை மக்கள் நீதி சேர்க்க வேண்டும்  
by M HARI,chennai,India    22-03-2010 18:34:46 IST
 பரவாயில்லை.உயிர் காக்கும் இந்த விஷயத்திலாவது தமிழக முதல்வர் நல்ல அக்கறை காட்டுகிறார். வாழ்த்துகள்.!. போலி மருந்துகளை விற்று மற்றவர்களின் உயிரை பறிப்பவர்களுக்கு வெறும் ஆயுள் தண்டனைதானா.?. மற்றவர் உயிரை பறிக்கும் அவர்களுடைய உயிரையும் பறிக்க சட்டம் போடலாமே.!. ஆயுள் தண்டனை பெற்று சிறைக்கு செல்லும் செல்வந்தர்களின் நிலை தெரியாதா என்ன! 
by R Rameshbabu,Salem,India    22-03-2010 18:33:13 IST
 First you must findout who is the Backround of this Cheating fellow.He will punishable.after that their labours and friends.  
by mika Ramesh,Chennai,India    22-03-2010 18:27:01 IST
 மாத்திரைகள் pack செய்யப்பட்டிருக்கும் wrapper கள் பளபளப்பான அலுமினியம் தாள்களில் வருகின்றன. அதில் எழுதி இருக்கும் விபரங்கள், ஒரு பூதக்கண்ணாடி வைத்துப்பார்தலும் தெரியாது. அமெரிக்க போன்ற மேற்கத்திய நாடுகளில், மாத்திரைகளின் விபரம் எளிதில் படிக்கும் படியாக அதன் மேல் அச்சடிக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் தான் மாத்திரைகள் காலாவதியான தேதி, விலை, கம்பெனி பெயர், தயாரிப்பு தேதி முதலியன தெரியும். மற்றபடி வேறு விபரங்கள் ஏதும் வாங்குபவர்களுக்கு தெரிய வழியில்லை. இதற்கு அரசு சட்டத்திருத்தத்தின் மூலம் ஒரு வழி காண வேண்டும். வாழ்க வளமுடன்,  
by சிவா,Thanjavur,India    22-03-2010 18:26:55 IST
 anbulla asiriyar avargalukku, ivargalai ellam Thookkil poda vendum.  
by R Ragothaman,Dubai,India    22-03-2010 18:22:56 IST
  ஏன்டா இந்த கொலை வெறி  
by sara,tamilnadu,India    22-03-2010 18:10:22 IST
 அய்யா கலைஞர் அவர்களே இவர்களுக்கு எப்படியாவது ஆயுள் தண்டனை வாங்கி கொடுங்கள். இறைவன் என்று ஒருவன் உண்டு. அவன் உங்களது மறு உலக வாழ்க்கையை கஷ்டம் இல்லாமல் வைப்பானாக.  
by A Abdullah,madurai,India    22-03-2010 18:04:48 IST
 இது போன்ற குற்றவாளிகளை பிடிப்பது காவல் துறையினருக்கு பெரிய விசயமல்ல. ஆனால், இக்குற்றங்களை கண்டுபிடுபிடிப்பது காவலர்களே - முடிவெடுப்பது உயரதிகாரத்தில் இருப்பவர்கள். அவர்கள் காவலர்களின் நடவடிக்கைகளை அமல்படுத்தினால் மட்டுமே இது போன்ற குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும். ஆனால், அரசியல், உயர்மட்ட அதிகாரிகளின் தலையீடு இருக்கும்பட்சத்தில் இது பத்திரிகை செய்தியாகவே போய்விட கூடும். மருத்துவ கண்காணிப்பு துறைக்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரிகள், தங்களின் கட்டுபாட்டுக்குள் இருக்கும் ஊழியர்கள், சரியாக பயன்படுத்தினால் இது போன்ற குற்றங்களை எளிதாக தடுத்து விடலாம்.  
by R R,Trichy,India    22-03-2010 17:36:27 IST
 இவர்களுக்கு தண்டனை தருவதைவிட, கால்கள் இரண்டையும் மருத்துவமுறையில் எடுத்துவிடவேண்டும், பின்பு இவர்களை ரோட்டில் போர்டு வைத்து பிச்சை எடுக்க விட வேண்டும். அப்போதுதான் எதற்கான தண்டனை என்பது அடுத்தவனுக்கும் தெரியும், ஆயுள் தண்டனை கொடுத்தால் நாட்டில் எவருக்கும் தெரியாமல் போய்விடும். இன்னும் எத்தனை பேர் இந்த தொழில் செய்கிறார்களோ ஆண்டவனுக்க்தான் தெரியும். 
by G Manickam,Sivagangai,India    22-03-2010 16:51:43 IST
 வாசகர்களின் கருத்துகளில் இருக்கின்ற உணர்வுகள் மதிக்கப்படணும்.. இந்த கருத்துகளை காப்பி பண்ணி செயின் மெயில் அனுப்பி விழிப்புணர்வு ootanum .ஏன் marana thandanai விதிக்கக் கூடாது? அதுவும் பொது ஜனம் முன்பகஹா? குற்றங்கள் குறைய, மக்கள் நிம்மதியாக வாழ, கடும் தண்டனை நிறைவேற்றுதலும், விரைந்த நீதியும் அவசியம். பொறுப்பான அரசு நம் கோரிக்கைகளை பரிசீலனை செய்யும்.?  
by K Kannan,Trichy,India    22-03-2010 16:33:05 IST
 தீவிரவதத்தை விட கொடுமையானது  
by ரஹ்மத் ,lahaddatu,Malaysia    22-03-2010 16:16:10 IST
 மனித உயிர்களுடன் விளையாடும் இவர்களை தூக்கில் போடவேண்டும் 
by N Shankar,Abudhabi,UnitedArabEmirates    22-03-2010 16:02:04 IST
 இவனுங்களை அப்படியே, கொதிக்கிற எண்ணையில போட்டு varuththedukkanum, இவனுக்கும் வெடிகுண்டு வைக்கரவனுக்கும் enna வித்தியாசம் !, ஜஸ்ட் கொல்லனும் பப்ளிக் ல வச்சு! 
by J Jagan,Tamilnadu,India    22-03-2010 15:46:29 IST
 அவர்களுடைய பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் அந்த மருந்துகளை கொடுக்க வேண்டும்  
by b சதீஷ் குமார் ,tirupur,India    22-03-2010 15:46:29 IST
 ஆயுள் தண்டனை பத்தவே பத்தாது!  
by M கார்த்திக்,Pune,India    22-03-2010 15:43:36 IST
 மனித உயிர்களுடன் விளையாடும் இவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும். இவர்களை தூக்கில் போடவேண்டும். Ivarkalin Kudumathiyum தூக்கில் போடவேண்டும் 
by MR. Dubai,Dubai,India    22-03-2010 15:42:23 IST
 போலிகளை கண்டுபிடிக்க மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்  
by k kathir,kanchipuram,India    22-03-2010 15:36:28 IST
 இவனுகள உலகில் எந்த ஒரு நாட்டுலயும் நடமாட விடக்குடது  
by KUNDU rasam,boonlay,Singapore    22-03-2010 15:28:49 IST
 பகல் கொள்ளை அடிக்கும் மருந்து கடைகளும் மருத்துவ மனைகளும் ஏன் செலவு செய்து 'incineration' எனபடுகிற எரிக்கும் செயலை செய்வதில்லை. இதற்கும் ஒரு சட்டம் வந்தால் தான் செய்வார்கள? 
by mr கோபி,chennai,India    22-03-2010 15:22:35 IST
 இனி மருந்து அட்டை மற்றும் பாட்டில் மூடி உள்புறமும் காலாவதி தேதி அச்சிட்டு சீலிட வேண்டும். அப்படி செய்தால் இதுபோன்ற மோசடிகளை தவிர்க்கலாம். 
by S SENGUTTUVAN,DUBAI,UnitedArabEmirates    22-03-2010 15:11:38 IST
 dear friends, I was shocked to see the message, since i am B.pharm graguate i used to wonder how responsible we are to our community., I want to suggest one thing before punishing them please find out the root cause for this kind of activity. all the laws should be strictly followed, medicine should be bought from pharmacies only with bill, the government should make the rule without bill no sales of drugs should be done., moreover all the pharmacies should be run only the pharmacy graduates (strict).cancel all the licence those who are keeping only pharmacist licence and running the pharmacy by unqualified persons., Also in all hospitals it must have only qualified persons(D.pharm,B.pharm)., no doctors should keep all the medicines for himself and sell, it is illegal to sell medicine without proper drug licence., government should also increase the drug inspectors for vigiliant checking., the drug control department should ask the companies to maintain register for the disposal of unused or expired medicine.(may be quantity and videos of the process of disposal). we can easily prevent the usage of expired medicine. as a pharmacy graguates we are the most responsible people to save all people from these kind of deeds., i am also requesting all the pharmacy graguates those who are issued licence for shops, must work there or elese take your licence back. all the pharmacies should keep at least one pharmacy graguate in the shop full time.  
by v manikandan,chennai,India    22-03-2010 15:11:27 IST
 முதல்வரே, இவர்களுக்கு ஆயுள் தண்டனை போதாது, தூக்கு தண்டனை கொடுங்கள்  
by swamy ஆரோக்கியதாஸ்,muscat,Oman    22-03-2010 15:01:18 IST
 காவல் துறை அதிகாரிகளே தயவுசெய்து கொஞ்சம் நீதியோடு நடந்து இதுமாதிரி ஆள்களுக்கு தக்க தண்டனை கொடுங்கள். ஏனென்றால் அப்பத்தான் உங்க Department மேல கொஞ்சம் மக்களுக்கு மரியாதை வரும். இன்னும் இதன் பின்னால் கண்டிப்பாக பெரிய புள்ளிகள் உண்டு அதையும் மறந்து விடாதீர்கள், 
by swamy ஆரோக்கியதாஸ்,muscat,Oman    22-03-2010 14:55:00 IST
 இவர்களை தூக்கில் போடவேண்டும்  
by r மகேஷ் ,அரக்கோணம்இந்திய,India    22-03-2010 14:47:28 IST
 Shoot at sight.......... 
by babu,singapore,India    22-03-2010 14:44:50 IST
 First the authorities should provide detailed report of the expired medicines (Product Name and where it was distributed) so the distressed persons or their relatives may know that they used it and claim their demands. The authorities should freeze all bank accounts for these related accused persons and pay the claims of affected people from these amounts.  
by A Qasim,Riyadh,SaudiArabia    22-03-2010 14:37:12 IST
 இப்படி பட்ட பாவிகளை சும்மா விட கூடாது. கடுமையான தண்டனை குடுக்க வேண்டும். இது போன்று நிறைய கம்பெனிகள் உள்ளன. தயவு பண்ணி அதை அரசு உடனடியாக கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மருந்து கடைகளும் அப்படி பட்ட மருந்துகளை வாங்க கூடாது. மக்களே ஒன்று படுங்கள் இதற்கு எதிராக போராட...  
by AH முஹமது பா. பஹுருதீன் ,Riyadh,SaudiArabia    22-03-2010 14:23:49 IST
 இனி நல்ல வேட்டைதான் போலீஸ்சுக்கு,,,,,  
by M பாலாஜி,Al-Khobar,SaudiArabia    22-03-2010 13:51:40 IST
 அரபு நாடுகளில் தன்டனை தருவது போல இந்த கொலைகாரர்களின் தலையை வெட்டி தள்ள வேண்டும். 
by P. ஜெகதீஷ்,Pondicherry,India    22-03-2010 13:50:27 IST
 Arsangam puthiya sattam iyatri intha maathiri kutrangaluku Maranathadanai vazanga vandum. 
by Ashraf,Riyadh,SaudiArabia    22-03-2010 13:44:40 IST
 Excellent explanation and awareness about medicine.Thank you for your valuable suggestion to public but the thing is people try to follow.  
by p kathir,singapore,India    22-03-2010 13:37:28 IST
 இந்த மருந்தை எல்லாம் அவர்களது சொந்தங்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும். அவர்கள் அதை சாப்பிட்டு சாவதை நேரடியா TV இல் காட்ட வேண்டும். அதை நாங்கள் பார்க்க வேண்டும். 
by T Bazkar,Chennai,India    22-03-2010 13:37:05 IST
 அவர்களுக்கு மனித உயிரின் மாண்பு பற்றிய விளக்கம் அவர்களுக்கு (அறிவிலி நாய்களுக்கு ) அளிக்கப்பட வேண்டும். காசுக்காக மனித உயிரை aleipavarai thukkil ida vendum  
by L மரியா louis,Chennai.india,India    22-03-2010 13:23:42 IST
 sir , small request please encounter sir  
by sheik sinthsmathar.m,dubai,India    22-03-2010 13:23:02 IST
 hallo police., Pls encounter these fellows. We will give you a real salute. 
by R Sathyanarayanan,chennai,India    22-03-2010 13:14:53 IST
 இன் தட் கேஸ் வாட் இஸ் அவர் கோர்ட் ஜட்ஜெமென்ட் , மீண்டும் இவர்களை போல் யாரும் இந்த தப்பை பண்ணாத மாதிரி இருக்கவேண்டும்  
by B saravanan,chennai,India    22-03-2010 13:11:32 IST
 ஏன்டா நாய்களா? ஒரு உயிரின் மதிப்பு உங்களுக்கு புரியாதா? இதை செய்தவர்கள் குடும்பமே உருப்படாது. ஒருநாள் நீங்களே அறியாத வண்ணம் உங்கள் குடும்பத்தினரே இதை சாப்பிட்டு சாகும் போது தான் தெரியும் நீங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று?  
by பள்ளி மாணவன் ,Chennai,India    22-03-2010 13:04:49 IST
 நான் திரு A பாலன்,Vanavasisalem,India அவர்கள் சொல்வதை முழுவதும் ஏற்று கொள்கிறேன். இந்தியாவில் இவர் சொல்வதுபோல் சட்டமெல்லாம் காமடி தான்  
by பள்ளி மாணவன் ,Chennai,India    22-03-2010 12:55:56 IST
 சட்டத்தை கடுமையாக்க வேண்டும் வீணர்களே... இல்லையென்றால் நாளைக்கு இந்தியா வாழ்வதற்கு தகுதியல்லாத நாடாக மாறி விடும்  
by Mr பள்ளி மாணவன் ,Chennai,India    22-03-2010 12:51:24 IST
 In china, we know for these type of crimes they will give capital punishment (death). But in our country what is the punishment? The type of punishment only reduce these crimes. 
by G Divaharan,Tirunelveli,India    22-03-2010 12:51:01 IST
 இவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசமே இல்லை..தெரு நாய்களை வேட்டையாடி அழிப்பது போல் அழித்துவிட வேண்டும்..  
by V முத்துக்குமார்,Chennai,India    22-03-2010 12:37:08 IST
 please taken strict against this anti-social element and raid to all medical agencies, labroatary and godown 
by ks paramanandan,trivendrum,India    22-03-2010 12:19:13 IST
 அணைத்து மருந்துகளையும் எரித்து இவர்களை கைது செய்து தூக்கிலிட வேண்டும். தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
by KUMARAN,CHENNAI,India    22-03-2010 12:10:56 IST
 என்கவுன்டர் பண்ணுங்க  
by ma தமிழன் ,tenkasi,India    22-03-2010 12:09:23 IST
 இன்றைக்கு கலப்படம் இல்லாத பொருட்களே இல்லை. எல்லாவற்றிற்கும் ஒரு விதிமுறை இருக்கும்பொது ஒவ்வொரு முறையும் உயிரிழப்பிற்கு பிறகுதான் நடவடிக்கை எடுக்கிறது அரசாங்கம். இதுவும் ஒரு வகையில் தீவிரவாத செயல்தான் அதற்கு சரியான நடவடிக்கை எடுக்காத எந்த ஒரு அரசும் துணை போகிறது என்று தான் அர்த்தம்.எந்த ஒரு சிங்கமும் மற்றொரு சிங்கத்தை கொல்வதில்லை, எந்த ஒரு புலியும் மற்றொரு புலியை கொல்வதில்லை, மனிதன் மட்டும்தான் மற்றொரு மனிதனை கொல்கிறான்.மனிதன் ஒரு மோசமான மிருகம். தண்டனை கடுமையாக இல்லாத வரை இதற்கு ஒரு முடிவு கிடைகாது .  
by c balu,vadapalanichennai,India    22-03-2010 12:05:25 IST
 இந்த நாயிகளையெல்லாம் தூக்கில் போடுங்கள். இறக்கம் காட்டாதீர். இந்த மாத்திரைய சாப்பிட்ட எத்தன உயிர் போகும். அத இந்த நாய்களால தர முடியுமா ? உயிர் பத்தி கவலைப் படாதவங்க உயிர் நமக்கு தேலை இல்ல ??? 
by g christ,chennai,India    22-03-2010 12:03:43 IST
 மன்னிக்க முடியாத குற்றம். இச்செயலால் இவர்களின் குடும்பத்தார்கள்,நண்பர்கள் பாதிப்பார்கள் என தெரியாதா? ஆட்சியாளர்களின் நேர்மை அரசு அதிகாரிகளை நல்வழிபடுத்தும்,அரசு அதிகாரிகளின் கண்டிப்பு இதுபோன்ற செயல்களை ஒழிக்கும் 'உணர்வார்களா ஆட்சியாளர்கள் ' 
by yasmin,kuching,Malaysia    22-03-2010 11:58:30 IST
 We should punish people who do these crime like in dubai. It the punishment is less then we cannot control crime. 
by PK ரமேஷ் Moorthy,Chennai,India    22-03-2010 11:55:29 IST
 வாழ்த்துக்கள் தமிழ்நாடு போலீஸ். எனது அன்பான வேண்டுகோள் , அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை / மரண தண்டனை வழங்க வேண்டும். வைக்கீல் வைத்து வாதட வாய்ப்பு தராதீர்கள். அப்படி வக்கீல் வந்தால் அவர்களும் தண்டனை பெறவேண்டும். 
by புருஷோத்தமன் ,coimbatore,India    22-03-2010 11:55:04 IST
 காவல் துறைக்கு வாழ்த்துக்கள். மேலும் அவர்கள் பின்னணி முழுவதும் அறிந்து அதிகபட்ச தண்டனை வாங்கித்தர வேண்டும். அட இறக்கம் இல்லாத கயவர்களா கடவுள் இருப்பது உண்மை என்றால் உங்களைபோன்ற மனிதர்களை படைத்த அவனும் ஒரு குற்றவாளி தான். மரண தண்டனை தந்தால் உடனே இறந்து விடுவார்கள். அது தவ.று இரண்டு கையையும் கட் பண்ணி ஒரு இரண்டு வருடம் கஷ்ட பட வைத்து பின் மரண தண்டனை தர வேண்டும்.  
by K. காசி விஸ்வநாதன் ,dammam.saudi,India    22-03-2010 11:53:03 IST
 இவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். பணத்திற்காக எதையும் செய்யும இவர்கள் மண்ணில் வாழ இடமில்லை  
by v jeeva,bangalore,India    22-03-2010 11:50:28 IST
 Goverment can not hesistae to make a Special Law to hang them. Also, they have to arrrange a Special Court to enquire them and judgement should be within 6 months. Otherwise, with the political power and money, they will repeat the same crucial works. DMK Government must be take the action and we need their decision very badly. 
by KJ Mohammed ,Madurai,India    22-03-2010 11:45:34 IST
 இவர்களையலாம் ஓட விட்டு கல்லால அடிச்சு கொல்லனும். இன்னும் நிறைய பேரு இருபாங்க அவங்களையும் கண்டுபுடுச்சு உள்ள போடணும். வாழ்கையில வெளியில வராத அளவுக்கு ஜெயில்ல போடணும். வாழ்க காவல்துறை: வளரட்டும் அவர்களின் பணி. அந்த நாய்கள வெளியில விட்டுராதீங்க  
by V STEPHEN RAJKUMAR,Muscat,Oman    22-03-2010 11:43:50 IST
 These bastards should be shot in front of public in Anna Salai. 
by S விஜய்,Chennai,India    22-03-2010 11:35:09 IST
 இவர்களின் இந்த செயல்களால் எத்தனை அப்பாவிகள் பாதிக்கப்பட்டிருப்பர்கள், உயிர் இழந்திருப்பார்கள். இவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டியவர்கள். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடமும் மருந்து கடையினருக்கும் பயிற்றுவிக்க வேண்டும். இவர்கள் தீவிரவதிகளைவிட மோசமானவர்கள். 
by R தமிழ் நேசன்,Riyadh,SaudiArabia    22-03-2010 11:33:12 IST
 கலப்படம் செய்த அந்த மனித தன்மை அற்ற அரக்கர்களுக்கு சாகும் வரை அதே காலாவதி மாத்திரைகளை கொடுங்கள்....கொஞ்சம் கொஞ்சமாக சாகும் வேதனை தெரியட்டும் அந்த சுயநல கிருமிகளுக்கு....... 
by M senthil,madurai,India    22-03-2010 11:31:45 IST
 அடப்பாவிகளா நீங்கள் எல்லாம் மனித பிறவிகள் தானா அல்லது பிணம் தின்னும் கழுகுகளா தெரியவில்லயே.பணத்துக்காக இவ்வளவு பெரிய மோசடியா.இவங்களை ஓட விட்டு சுட்டு விட வேண்டும். அப்ப தான் வேறு எந்த நாயும் இது மாதிரி செய்ய துணியாது.காவல் துறைக்கு ஒரு சல்யுட்.  
by A.A. முகமது அமீன் ,DUBAI,UnitedArabEmirates    22-03-2010 11:28:40 IST
 இன்னும் பால் மற்றும் உணவு பொருள்களில் கலப்படம் செய்பவர்களையும் கண்டுபிடித்து தண்டியுங்கள்  
by subbu subramaniam,chennai,India    22-03-2010 11:13:49 IST
 ஒரு வேளை சோற்றுக்காக திருடும் ஒரு சாதாரண பிக் பாக்கெட் திருடனை முகத்தை காட்டி அலம்பல் பண்ணும் போலீஸ் ஏன் இந்த ஈன பிறவிகளின் முகத்தை காட்ட மறுக்கிறது ஜாமீனில் வெளி வந்து மீண்டும் தொழில் செய்து அவர்களுக்கு மாமுல் கொடுககவா ? 
by d ராஜசேகரன்,villupuram,India    22-03-2010 11:10:29 IST
 இவர்கள் அனைவரையும் நடுத்தெருவில் நிறுத்தி சொறி நாயை விட்டு கடிக்கவிட்டு பின்னர் அவர்கள் தயாரித்த போலி மருந்துகளை அவர்களுக்கு அதிக அளவில் கொடுத்து கொல்ல வேண்டும்  
by swamy ஆரோக்கியதாஸ்,MUSCAT,India    22-03-2010 10:51:59 IST
 யோசிக்கவே வேண்டாம் இவர்களை தூக்கில் இடுங்கள்  
by swamy ஆரோக்கியதாஸ்,MUSCAT,India    22-03-2010 10:47:40 IST
 As per the WHO Advice: 1.When buying the Medicine from a chemist, the customer has to check the Expiry Date on every medicine, If the Expiry Date is erased , the customer no need to buy: in such cases, the Pharmacist has to label the loose medicine with the following details:1.Medicine Name,2.Batch Number,3.Expiry date,4.Dose Advise 2.If the bottle (syrup), bottle (Loose tablets) seal is broken, the customer should not buy the same. 3.The customer can ask any doubts about the medicine, and the Pharmacist has to give following explanations:1. Indications, 2.Side effects,3.Pre cautions. 4. The Pharmacist are not allowed to sell Anti Biotics,Sleeping Pills,Drugs used for Hyper tension,Diabetic etc..without prescriptions. The Pharmacist can sell in OTC (Over the Counter) only common medicine such as Paracetamol,Mild cough syrup,Non sedative Anti histamins,and Mild pain killers. 5.If the customer is having doubt regarding the dispensed medicine, they can show to the prescribed Doctor to re confirm. 6.Other than the Pharmacist, No one is allowed to dispense the medicine(like sales man) in Pharmacy. 7.Always get the Invoice (Cash bill) for your every purchase with Pharmacist signature on the Invoice.(the dispensed medicine name should appear on the Invoice) 8.Do not buy any medicine, if the medicine kept in direct sun light in the Pharmacy. 9.Do not buy any vaccines, if the vaccines kept out side the refridgerator, (Make sure..the refridgerator is switched on in all the times) 10. Avoid self medications (directly buying from chemist), always consult your doctor before going for any medications. 11. Ask the Pharmacist to write the dosage in proper way (how many times or hourly break,after food,before food,with food,chewable,to keep under the toungue ete) 12. Ask the storage for the medicines. Dear all.. If you have doubt on any medicine,when you buy from an chemist.you can give your complaint to Drug Inspector or nearest Police station. 
by A ஜீவா ,Maldives,Maldives    22-03-2010 10:46:13 IST
 hang them in public. 
by imthiaz,coimbatore,India    22-03-2010 10:33:28 IST
 குற்றமாம் சட்டமாம் தண்டனையாம் நீதியாம் நியாயமாம்!!!! அதுவும் இந்தியாவில்!!! ஹா ஹா... 
by A பாலன்,Vanavasisalem,India    22-03-2010 10:29:11 IST
 கடந்த வருடம் இதே போல சீனாவில் பாலில் கலப்படம் இருப்பதை கண்டுபிடித்து உடனடியாக அந்த நிறுவனத்தின் முதலாளி உட்பட நான்கு பேரை மின்சாரம் பாய்ச்சி மரண தண்டனை குடுத்தார்கள். அது போல் இங்கும் உடனடியாக மரண தண்டனை கொடுக்க வேண்டும். நம் நாட்டில் முடியாத காரியம் ஏனென்றால் ஜனநாயகம் என்ற பெயரில் அந்த நபர்களுக்காக வாதாட வக்கீல் பணத்தை பெற்றுக்கொண்டு ஜாமீனுக்கு தயாரைகிக் கொண்டு இருப்பார்.  
by mg அரவிந்தன்,guangzhou,china,India    22-03-2010 10:15:35 IST
 I feel medical company also involved in this issue. They totally failed to dispose expiry medicines in proper manner. we usually smash disposble cups, straw before put in to dust bin...how this medical company ignored such big mistakes.? investgate properly and bring real curlprits infront of every one.  
by Mr. Bala,Chennai,India    22-03-2010 10:14:29 IST
 அறிவுகெட்ட முட்டாள்கள். இது பச்சிளம் குழந்தைகளுக்கு எதிரான செயல். இது மாதிரி ஆட்களுக்கு மன்னிப்பே கிடையாது. அவர்களை சும்மா விட கூடாது. சாகடிக்க பட வேண்டும்,  
by டேவிட்,California,UnitedStates    22-03-2010 10:07:17 IST
 மரண தண்டனை அல்லது என்கௌன்ட்டர்  
by S சம்பத்,chennai,India    22-03-2010 10:06:30 IST
 அந்த மாத்திரைகளை அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுப்பார்களா ? உன்னைப்போல் பிறனையும் நேசி என்று ஏசு பிதா கூறினர். அதை கடைப்பிடிங்கள் . 
by V ராஜ் குமார் ,meenambalpuram,madurai,India    22-03-2010 10:00:25 IST
 really can not digest like this crime.Still most of the medical store they are selling not only expiry date out medicine, also selling duplicate medicine .If monitor all over tamilnadu medical store,can save many innocent people life.Must be release in internet ,of their photos with full deatils. 
by kumar,saudi,India    22-03-2010 09:59:48 IST
 இது போன்ற ஆளுங்களுக்கு தினமும் அவுங்க தயாரிச்ச அதே போலி மெடிசின்ஸ் அளவுக்கு அதிகமா கொடுத்து கொஞ்சம் கொஞ்சமா சித்தரவதை படுத்தி கொல்லனும். அவர்கள் வுடம்பில் ஏற்படும் ரசாயன மாற்றதை பற்றி தினமும் செய்தி தாள் மற்றும் டிவி சேனலில் ஒளிபரப்பணும். இது நாடாகும் பட்சத்தில் இது போன்ற தப்புக்கள் திரும்ப நடக்காது. 
by A. முத்துகுமரன்,Delhi,India    22-03-2010 09:58:28 IST
 This kind of people shold be punished . because we have living in more population country , We have to more concentration in this part . 
by S CHANDRAN,CHENNAI,Iran    22-03-2010 09:57:00 IST
 உயிர் காக்கும் மருந்தின் உற்பத்தி விலையை விட விற்பனை விலை பல பல மடங்கு அதிகமாக உள்ளது. ஆகையால் தான் இந்த நாச கார கும்பல் இந்த துறையையும் விட்டு வைக்கவில்லை. இதில் ஒரு பெண்ணும் உண்டு என்பது மிக வேதனைக்குரியது. இவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் மிக விரைவாக. அது வரை இந்த போலி மருந்துகளை தினமும் சொல்லி சொல்லி அவர்களுக்கு கொடுக்கவேண்டும். இது நீங்கள் தயாரித்த மருந்து தான் என்று  
by r ravindran,karur,India    22-03-2010 09:52:31 IST
 Kavalthuraikku mikka nandri....Ungalukku oru vendugol, dhayavu seidhu indha aasamy-galai encounter-il pottudunga.....ungalukku kodi punniyam!! 
by Suganya,Chennai,India    22-03-2010 09:21:17 IST
 இது போன்ற செயல்கள் ரொம்ப காலமாக நடைபெறுகிறது. பின்னாடி பெரிய ஆசாமிகள் இருக்க வாய்ப்பு உண்டு. முழுமையான விசாரணையை விரைந்து நடத்தி தண்டனையை வாங்கித்தந்தால் போற்றலாம். இதுபோல உணவு பொருட்களில் கலப்படமும் கண்டறியப்பட வேண்டும்.****** செய்வார்கள?***** 
by K Kannan,Trichy,India    22-03-2010 09:16:56 IST
 India சட்ட அமைப்பு அவர்களை ஒன்றும் seiadhu 
by D Rajesh,Chennai,India    22-03-2010 09:16:34 IST
 எல்லா பொருள்களும் வட இந்தியாவில் இருந்து தான் வருகிறது.. வட இந்திய பொருள்களை வாங்குவதை தமிழக மக்கள் நிறுத்த வேண்டும். இல்லைஎன்றால் இன்னும் கொஞ்ச நாளில் தமிழகம் சுடு காடாக மாறிவிடும்..... 
by M ராஜா,Madurai,India    22-03-2010 09:16:29 IST
 சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகள் பலி, யானை கால் மாத்திரை சாப்பிட்டவர்கள் சாவு என்பதை எல்லாம் மீண்டும் துருவித் தோண்ட வேண்டும். மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு பேதி மாத்திரை கொடுத்து முச்சந்தியில் நிறுத்த வேண்டும்.  
by E பாண்டியன் ,R.K.PET,India    22-03-2010 08:49:03 IST
 தூக்கில் போட வேண்டும் .  
by k sureshbabu,chennai,India    22-03-2010 08:48:19 IST
 ரத்தக்காட்டேரி இருக்குன்னு இப்ப நம்பறீங்களா?  
by E பாண்டியன்,R.K.PET,India    22-03-2010 08:39:23 IST
 காவல் துறைக்கு எனது மனமார்ந்த நன்றி  
by r razin,malayisia,India    22-03-2010 08:26:38 IST
 please do not wait, kill them immediately. 
by SB ahamed,chennai,India    22-03-2010 08:02:14 IST
 இதற்கு மிகச்சரியான தண்டனை என்ன தெரியுமா நண்பர்களே, அந்த மருந்துக்களை எல்லாம் இந்த நாய்களின் குடும்பத்தில் உள்ளவர்களை சாப்பிட செய்ய வேண்டும்  
by H DASTAGIR,dubai,India    22-03-2010 07:50:35 IST
 மருந்தாக்கியல் (Pharmacy ) படித்தவர்களை ஓரம் கட்டிவிட்டு மருந்துகளைப் பற்றி ஒன்றுமே அறியாத BSc படித்தவர்களை மருந்தாய்வாளர்களாக ஆக்கி காசு பார்க்க துடிக்கும் அரசியல்வாதிகள் இதுபோன்ற குற்றங்களுக்கு உடந்தை. மருந்துக் கட்டுப்பாட்டுத்துறையில் 30 % பதவிகள் காலியாக உள்ளன. முறைகேடு செய்யும் மருந்துக்கடைகள் மீது நடவடிக்கை எடுப்பதை ஆளும் கட்சியினரும், காவல்துறையினரும் தடுப்பது தொடர்கிறது! பெரும்பாலான கடைகளில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களே மருந்து விற்பனையில் உள்ளனர்! பார்மசிஸ்ட் பணியில் உள்ள கடைகளில் மட்டும் மருந்து வாங்குவதே சிறந்தது. எல்லாக் கடைகளிலும் புகைப்படத்துடன் உள்ள சான்றிதழ் தொங்க விடப்பட்டிருக்கும். மக்கள் விழித்துக் கொண்டாலே இதற்குத் தீர்வு.. 
by V.K மணி,Chennai,India    22-03-2010 07:45:36 IST
 அரசியல்வாதி சப்போர்ட் இருந்தால் இவர்கள் எல்லாரும் வெளியே வந்து விடுவார்கள். ஒரே வழி சுட்டு விடுங்கள்.  
by s dar,nammakkal,India    22-03-2010 07:38:14 IST
 இது கொலை குற்றத்திற்கு கொஞ்சமும் குறைந்தது இல்லை. தயவு செய்து இத்தகைய விஷ கிருமிகளை களைந்து விடுங்கள். 
by G ராமகிருஷ்ணன்,Singapore,India    22-03-2010 07:37:46 IST
 There shall be no delay and no pardon for these worst criminals They deserve capital punishment and should not be allowed to come out on bail till they are convicted and hanged All their wealth shall be confiscated and their names with photographs and address shall be published to make their dear ones hang their heads in shame Any Govt officials and shop keepers who have aided these criminals shall also be punished with life imprisonment and their properties too confiscated similarly Their names , addresses along with photographs also be published like wise  
by S Thiyagarajan,Chennai,India    22-03-2010 07:33:14 IST
 யா அல்லா, இவர்களையெல்லாம் ஒவ்வொரு நகமா பிடுங்க வேண்டும்.. அப்போது தான் மக்கள் சந்தோஷம் அடைவார்கள் .... 
by M ஷேக் அப்துல்லாஹ் ,Singapore,India    22-03-2010 07:19:49 IST
 evangalukku maranathandanai kodukkanum,  
by R Ragothaman,chennai,India    22-03-2010 07:06:09 IST
 மனித உயிர்களை காக்கும் மருந்துகள் காலாவதியானால், அவற்றை அழிக்கின்ற போது நேர்மையான அரசு அதிகாரி ஒருவர் முன்னிலையில் இயந்திரம் மூலமாக உருத்தெரியாமல் அழிக்கப்பட வேண்டும்.எத்தனை உயிர்களை இந்த பாவிகளின் பணத்தாசை பலிகொண்டதோ ?மருந்து விற்பனையாளர்கள் மட்டும் அல்ல டாக்டர்களும் இந்த பிரச்சனையின் விபரீத விளைவுகளை உணர்ந்து செயல்படவேண்டும்.உதாரணமாக டாக்டர் மருந்து எழுதி கொடுத்தபின் நோயாளி தான் வாங்கிய மருந்தை அதே மருத்துவமனைக்கு வந்து காட்டி செல்வதை கட்டாயமாக கடைபிடிக்கவேண்டும்..அப்படி செய்கின்றபோது குறிப்பிட்ட மருந்து அட்டையில் உள்ள மாத்திரையின் எண்ணிக்கையும் அந்த வருடமும் சரிதானா என கண்டறிய வசதியாக இருக்கும். அல்லது ஒவ்வொரு மருந்து கடையிலும் இது பற்றிய விவர அட்டைகள் வைக்க பட்டுஇருந்தால் மக்களே சரிபார்த்துக்கொள்ள வசதியாக இருக்கும். மிகமுக்கியமாக இப்படிப்பட்ட உயிரோடு விளையாடும் பணத்தாசை பிடித்த நாசகார கும்பலை சேர்ந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த அனைவரின் சொத்துக்களையும் (எத்தனை உயிர்களை பலிவாங்கி சேர்த்த சொத்துக்கள் )பறிமுதல் செய்து கடுமையான (மரணதண்டனை) தண்டனை தரவேண்டும். மருந்து கட்டுப்பாட்டு புலனாய்வு பிரிவினருக்கு சவாலாக இருக்கும் இந்த பிரச்சினையை அவர்கள் திறமையுடன் கையாண்டு மக்களின் உயிர்காக்க வேண்டும்.சவால் மிகுந்த பிரச்சனையை மக்களின் நலனில் அக்கறைகொண்டு சிறப்பாக செயல்பட்டு மோசடி கும்பலை கைது செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் . 
by R. சிவப்ரியா காயத்திரி ,VilathikulamPudur,India    22-03-2010 07:04:44 IST
 இவர்களை சட்டத்தி முன் நிறுத்தி, அவர்களுக்கு தண்டனை வாங்கித்தருவது ஒரு புறம் இருந்தாலும், அவர்கள் தண்டனை நிறைவேற்றுவதற்கு எப்படியும் சுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் ஆகிவிடும். இதனிடையே அவர்கள் ஜாமீனில் வெளிவந்து தன்னுடைய குலத்தொழிலான இந்த கலப்பட தொழிலை மீண்டும் ஆரம்பித்து விடுவார்கள். சும்மா ஒரு என்கவுண்டர் போட்டு விடுங்கள். கலப்பட தொழிலில் ஈடுபடுவோருக்கு என்கவுண்டர்தான் என்றால் ஒரு பயலும் இந்த மாதிரி செய்ய மாட்டார்கள்.  
by sivaa,India,India    22-03-2010 06:52:34 IST
 இவர்களுக்கெல்லாம் மரண தண்டனையே சரியான தீர்ப்பு..... 
by T. தீபக் குமார்,Chennai,India    22-03-2010 06:49:04 IST
 dont they have CONSIENCE?what if the corrupted medicine by chance given to their own family? Is this the culture of india/we critise western culture for their divorces and sex b4 marriage etc but that s all farfar better than this... 
by s sulochana,singapore,India    22-03-2010 06:45:13 IST
 இவர்களுக்கு மரண தண்டனையை தவிர வேறெதை கொடுத்தாலும் ஏற்பதற்கில்லை. விசாரணையை விரைந்து முடித்து கொல்ல வேண்டும் .  
by K ரகு,NewJersey,India    22-03-2010 05:41:18 IST
  neenka yallam nalla irkka madinkada 
by sikkandardivan,riyadh,India    22-03-2010 05:14:53 IST
 இவர்களும் டெரரிஸ்ட்கள்தான்  
by a aks,Houston,UnitedStates    22-03-2010 05:13:26 IST
 அவர்கள் மனித சமுதாயத்துடன் விளையாடிவிட்டனர். அதுவும் கற்ப கால மருந்துகள் மற்றும் சிறு குழந்தைகள் மருந்துகள் இவற்றை விஷமாக்கி உள்ளனர் இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கவேண்டும் இல்லை என்றால் எல்லா இடங்களிலும் இவர்கள் முளைத்து நாட்டை விஷமாக்கி சுடுகாடாக்கி விடுவார்கள் நீதி அவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் காவல் துறைக்கு ஒரு சபாஷ். 
by s mani,arakkonam,India    22-03-2010 04:50:20 IST
 கிழிச்சீங்க . அடுத்து ஒரு நித்யானந்தாவோ சத்யானந்தாவோ வந்தா இந்த நாய்களை விட்ருவீங்க . 
by a சுனாமி,sydney,Australia    22-03-2010 04:49:47 IST
 காவல் துறைக்கு நன்றி !!!! உயிர்களுடன் விளையாடும் இவர்களுக்கு தேச துரோகம் என்ற ரீதியில் நீதிபதிகள் தண்டனையை கடுமையாக்கி, சட்டத்தின் பிடியிலேருந்து தப்ப விட கூடாது.  
by M பெபின்,chennai,India    22-03-2010 04:49:06 IST
 தூக்கில் போடவேண்டும்  
by leo,sunnyvale,UnitedStates    22-03-2010 04:47:25 IST
 These people should be brought to justice and hanged to death. Govt and Justice dept should not be lenient on these people. 
by G RR,CT,UnitedStates    22-03-2010 04:32:59 IST
 காபிடல் பனிஷ்மென்ட் ஷூட் பி கிவன்.  
by valliappan,dindigul,India    22-03-2010 03:57:17 IST
 Shoot these people down... Let the defense think that they also have family Pray the judge not to let them on Bail. Let law and justice prevail 
by R SARAVANAN,Chennai,India    22-03-2010 03:56:11 IST
 இவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கவேண்டும். 
by G சரபொஜி ராஜன்,doha,Qatar    22-03-2010 03:06:43 IST
 அட நாசமா போக. அப்படி என்னடா உங்களுக்கு பணம் பண்ண வேண்டிருக்கு. காசுகொடுத்தா கூட்டிகொடுத்டுவியா? கட்டைல போறவனே. பணத்துக்காக வோட்டு, பணத்துக்காக உயிர், இன்னும் பணத்துக்காக என்னெல்லாம் அசிங்கங்கள் அரங்கேரப்போகுதோ. தெய்வமே நீ தான் எங்க நாட்டை காப்பாத்தணும். 
by வெங்கடேசன்,Richmond,UnitedStates    22-03-2010 02:46:45 IST
 சீ என்ன கொடுமை இது, இப்படியே போனால் எதை நம்பி, யாரை நம்பி, ஒரு நாட்டில் மக்கள் நம்பிக்கையோடு வாழ முடியும்.தக்க நேரத்தில் விரைவாக செயல்பட்ட காவல் துறைக்கு நன்றி. இனி நீதித்துறைதான் விரைந்து செயல்பட வேண்டும். வழக்கம் போல ஒரு வருடம் ? கடுமையான தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபதாரம் என்ற ரீதியில் இல்லாமல்,பொதுமக்களை கொலை செய்ய முயற்சி,தேசத்த்ரோகம் என்ற ரீதியில் நீதிபதிகள் தண்டனையை கடுமையாக்கி,இனி வரும் காலங்களில் யாரும் இதுபோன்ற செயல்கள் செய்யாதவாறு,தீர்ப்பளிக்கவேண்டும். ஆனால் நடக்குமா.?. 
by j rajamohamed,Riyadh,SaudiArabia    22-03-2010 01:57:30 IST
 These guys very well deserve the death penalty. How can they try playing down with public lives? 
by கந்தப்பன்,Chennai,India    22-03-2010 01:32:07 IST
 payngaram. Tamil nattil inimel eduvum saiya mudiyum pola agivettadu. kiriminalkaglai tookil podha veandum sattam iyra veandum 
by by Ayubkhan,Sharjha,UnitedArabEmirates    22-03-2010 01:26:49 IST
 தூக்கிலிடவேண்டும்  
by M ராகவன் ,Hyderabad,India    22-03-2010 01:02:40 IST
 சரி .....கண்டுபுடுச்சு ..என்ன பண்ண போறீங்க ......ஒன்னும் பண்ண போறது இல்லை .....தவறு செய்தவனை துக்கில் இடுங்கள் ...முடிந்தால்  
by ராஜ்,Pune,India    22-03-2010 00:30:12 IST
 மனித உயிர்களுடன் விளையாடும் இவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும். இரக்கமில்லாத அரக்கர்கள் சட்டத்தின் பிடியிலேருந்து தப்ப விட கூடாது.  
by SUBBU,USA,UnitedStates    22-03-2010 00:25:38 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்