Dinamalar

பந்துவீச்சில் மாற்றம்: அஷ்வின் ரெடி! ,  
 

பந்துவீச்சில் மாற்றம்: அஷ்வின் ரெடி!

மும்பை: ''சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாதிக்க, பந்துவீச்சில் சில புதிய யுத்திகளை கையாள தயாராக உள்ளேன்,'' என, அஷ்வின் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ல் துவங்குகிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு முன், ஒவ்வொரு அணிகளும் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றன. இதில் இந்திய அணி, நியூசிலாந்து (மே 28), வங்கதேசம் (மே 30) அணிகளுடன் மோதுகிறது.

இத்தொடருக்கான இந்திய அணியில், தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் இடம் பெற்றுள்ளார். சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13 டெஸ்டில் விளையாடிய இவருக்கு, சமீபத்தில் முடிந்த 10வது ஐ.பி.எல்., தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அஷ்வின் கூறியது: சமீபத்தில் கிடைத்த ஓய்வால், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சிறப்பான முறையில் தயாராக முடிந்தது. இத்தொடரில் எனது பந்துவீச்சில் சில மாற்றங்கள் கொண்டுவரவுள்ளேன். இதனை, அடுத்து நடக்கவுள்ள இரண்டு பயிற்சி போட்டியில் சோதித்து பார்க்க திட்டமிட்டுள்ளேன். எனது புதிய யுத்திகள், அணியின் வெற்றிக்கு நிச்சயம் கைகொடுக்கும் என நம்புகிறேன். ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, பந்துவீச்சில் வித்தியாசம் காட்ட முடிவு செய்தேன். இதன்மூலம் அதிக அளவில் ரன் வழங்குவதை தவிர்க்கலாம்.

ஐ.பி.எல்., தொடரில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு வீரர்களும் தங்களது பலத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இத்தொடர் மூலம் திறமையான நிறைய இளம் இந்திய வீரர்கள் கண்டறியப்படுவது வரவேற்கத்தக்கது. இது, அடுத்து வரும் தொடர்களிலும் நீடிக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு அஷ்வின் கூறினார்.



கவாஸ்கர் கையில் விருது

சியட் நிறுவனம் சார்பில், சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருது அஷ்வினுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை, முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் வழங்கி கவுரவித்தார். அஷ்வின், கடந்த 12 மாதங்களாக பங்கேற்ற டெஸ்டில் 99 விக்கெட் கைப்பற்றினார். இந்திய அணி, சொந்த மண்ணில் விளையாடிய 13 டெஸ்டில் 10ல் வெற்றி பெற காரணமாக இருந்தார். இதனால் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் (19 வயது) மோதிய ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்தியாவின் சுப்மன் கில், சிறந்த இளம் கிரிக்கெட் வீரருக்கான விருதை கைப்பற்றினார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
‘சாரி’ கேட்ட டிவிலியர்ஸ்

‘சாரி’ கேட்ட டிவிலியர்ஸ்

ஜூன் 14,2017 பர்மிங்காம்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியதால், ரசிகர்களிடம் தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் மன்னிப்பு கேட்டார். இங்கிலாந்து மற்றும் ...
 பைனலில் மோதுவது யார் * கோஹ்லி விருப்பம் என்ன

பைனலில் மோதுவது யார் * கோஹ்லி விருப்பம் என்ன

ஜூன் 13,2017 லண்டன்: 'சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோத வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புகின்றனர்,'' என, கேப்டன் கோஹ்லி ...
புண்படுமே...மனம் புண்படுமே! * இது கோஹ்லி ‘பார்முலா’

புண்படுமே...மனம் புண்படுமே! * இது கோஹ்லி ‘பார்முலா’

ஜூன் 12,2017 லண்டன்: ''கேப்டனாக நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமானால் சில நேரங்களில் சக வீரர்களின் மனம் புண்படும் வகையில் பேச நேரிடும்,''என, ...