Dinamalar

‘கழுத்துக்கு நேராக கத்தி’ *கொதிக்கிறார் கோஹ்லி ,  
 

‘கழுத்துக்கு நேராக கத்தி’ *கொதிக்கிறார் கோஹ்லி

மும்பை: ''இந்திய துணைக் கண்டத்து கிரிக்கெட் வீரர்களுக்கு ஒவ்வொரு தொடரும் வாழ்வா... சாவா போல உள்ளது. அன்னிய மண்ணில் சிறப்பாக செயல்பட தவறினால், கழுத்து நேராக கத்தியை நீட்டுவது போன்ற ஆபத்தான சூழலை சந்திக்க நேரிடுகின்றனர்,'' என, விராத் கோஹ்லி ஆவேசமாக கூறினார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், 'மினி உலக கோப்பை' என்று அழைக்கப்படும் 8வது சாம்பியன்ஸ் டிராபி தொடர்(50 ஓவர்) வரும் ஜூன் 1 முதல் 18 வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்க உள்ளது.

இதில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் 'டாப்- 8' அணிகள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்கும் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் நேற்று, இங்கிலாந்து கிளம்பினர்.

இதற்கு முன் கோஹ்லி அளித்த பேட்டி:

கடந்த 2013ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அசத்திய இந்திய அணி கோப்பை வென்றது. இம்முறையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்பது நெருக்கடியாக இருக்கும் என, நினைக்கவில்லை. போட்டிகள், குறுகிய கால இடைவெளியில் நடப்பது மற்றும் உலகின் 'டாப்-8' அணிகள் மோதுவதால், மற்ற தொடர்களைவிட சாம்பியன்ஸ் டிராபி கடினமானது.

புரியாத புதிர்:

இந்திய துணைக் கண்டத்து கிரிக்கெட் வீரர்களுக்கு ஒவ்வொரு தொடரும் வாழ்வா... சாவா போல உள்ளது. மற்ற அணிகளைச் சேர்ந்த வீரர்கள் இந்திய மண்ணில் சரியாக விளையாடாமல் நாடு திரும்பினால், அங்கு பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதேநேரம், அன்னிய மண்ணில் இந்திய வீரர்கள் சொதப்பினால் அவ்வளவு தான், கழுத்துக்கு நேராக கத்தியை நீட்டுவது போன்ற ஆபத்தான சூழலை உணர்கின்றனர். கடுமையாக விமர்சிக்கின்றனர். இதுபோன்ற செயல்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

என்னைப் பொறுத்தவரையில் இழந்த 'பார்மை' மீ்ட்க வேண்டும் என, நினைத்து ஒருபோதும் விளையாடுவதில்லை. இந்தியாவுக்காக போட்டிகளில் வெற்றி பெற்றுத் தரவேண்டும் என்பது தான் ஒரே நோக்கம். .

இவ்வாறு கோஹ்லி கூறினார்.



பாக்., மோதல் எப்படி:

கோஹ்லி கூறுகையில்,''சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வரும் ஜூன் 4ம் தேதி இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது. எங்களைப் பொறுத்தவரையில் மற்ற போட்டிகளைப் போல இதுவும் ஒன்று, அவ்வளவு தான். இது குறித்து பரபரப்பான செய்திகள் வௌியாகின்றன. இதெல்லாம் எங்களது கட்டுப்பாட்டுக்குள் கிடையாது. கிரிக்கெட் வீரர் என்ற முறையில் மைதானத்துக்கு வெளியில் நடக்கும் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாது,''என்றார்.



இது வரலாறு

ஒருநாள் (6) மற்றும் 'டுவென்டி-20' (5) உலக கோப்பை தொடர்களில் இந்திய அணியை பாகிஸ்தான் ஒரு முறை கூட வென்றது கிடையாது. இத்தொடரில் இரு அணிகள் மோதிய 11 போட்டியிலும், இந்தியா தான் வென்றது. அதேநேரம், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரு அணிகள் 3 போட்டியில் மோதின. இதில் இந்தியா 1, பாகிஸ்தான் 2 போட்டியில் வென்றன.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
‘சாரி’ கேட்ட டிவிலியர்ஸ்

‘சாரி’ கேட்ட டிவிலியர்ஸ்

ஜூன் 14,2017 பர்மிங்காம்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியதால், ரசிகர்களிடம் தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் மன்னிப்பு கேட்டார். இங்கிலாந்து மற்றும் ...
 பைனலில் மோதுவது யார் * கோஹ்லி விருப்பம் என்ன

பைனலில் மோதுவது யார் * கோஹ்லி விருப்பம் என்ன

ஜூன் 13,2017 லண்டன்: 'சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோத வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புகின்றனர்,'' என, கேப்டன் கோஹ்லி ...
புண்படுமே...மனம் புண்படுமே! * இது கோஹ்லி ‘பார்முலா’

புண்படுமே...மனம் புண்படுமே! * இது கோஹ்லி ‘பார்முலா’

ஜூன் 12,2017 லண்டன்: ''கேப்டனாக நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமானால் சில நேரங்களில் சக வீரர்களின் மனம் புண்படும் வகையில் பேச நேரிடும்,''என, ...