Dinamalar

தோள் கொடுக்கும் தோனி * ஹர்திக் பாண்ட்யா உற்சாகம் ,  
 

தோள் கொடுக்கும் தோனி * ஹர்திக் பாண்ட்யா உற்சாகம்

லண்டன்: ''கடைசி வரை களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக 'பினிஷிங்' செய்து தர வேண்டும் என்றால், சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும். தோனியின் இந்த ஆலோசனை தான் எனக்கு கைகொடுத்தது,'' என, ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.

இந்திய அணியின் இளம் 'ஆல் ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா, 23. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ள இவர், வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் பங்கேற்றார். இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப 'அட்ஜஸ்ட்' செய்து கொண்ட பாண்ட்யா, 54 பந்தில் 80 ரன்கள் குவித்தார்.

இதுகுறித்து பாண்ட்யா கூறியது:

பயிற்சி போட்டியில் அதிக ரன்கள் எடுத்ததற்கு சகோதரர் தோனி தான் காரணம். போட்டியில் கடைசி வரை நின்று, சிறப்பான முறையில் 'பினிஷிங்' செய்து தருவது எப்படி,' என, அவரிடம் கேட்டேன்.

இதற்கு அவர்,' முதலில் அணியின் ஸ்கோரைப் பார்க்க வேண்டும். அடுத்து சூழ்நிலை எப்படி உள்ளது என கணிக்க வேண்டும். தேவையற்ற முறையில் நமக்கு நாமே நெருக்கடிகளை அதிகரித்துக் கொள்ளக் கூடாது. அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருக்க வேண்டும்.

தவிர, தனிப்பட்ட முறையில் வேறு எந்த நினைப்பும் இல்லாமல், போட்டியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அணிக்காக என்ன செய்ய முடியும் என, முடிவு செய்து, களத்தில் சற்று நிலைத்து நின்று, பிறகு ரன்கள் சேர்க்க வேண்டும்.' என்றார். தோனியின் இந்த மிகச்சிறந்த ஆலோசனைகள் தான் எனக்கு பெரிதும் கைகொடுக்கிறது.

'அட்ஜஸ்ட்' முக்கியம்:

இந்திய சூழ்நிலையை விட இங்குள்ள நிலை, முற்றிலும் வேறுபாடானது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் போது, வானிலை மேகமூட்டமாக இருந்ததால் பந்து நன்றாக 'சுவிங்' ஆனது. பேட்ஸ்மேன்களுக்கு தொல்லையாக இருந்தது.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் போது, வானம் தெ ளிவாக இருந்தது. ஆடுகளமும் கைகொடுத்ததால், அதிக ரன்கள் சேர்க்க முடிந்தது.

அதாவது இங்குள்ள சூழலுக்கு ஏற்பட, விரைவில் நம்மை மாற்றிக் கொள்வதைப் பொறுத்து தான் அணிக்கு உபயோகமாக இருக்க முடியும்.

இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறினார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
‘சாரி’ கேட்ட டிவிலியர்ஸ்

‘சாரி’ கேட்ட டிவிலியர்ஸ்

ஜூன் 14,2017 பர்மிங்காம்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியதால், ரசிகர்களிடம் தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் மன்னிப்பு கேட்டார். இங்கிலாந்து மற்றும் ...
 பைனலில் மோதுவது யார் * கோஹ்லி விருப்பம் என்ன

பைனலில் மோதுவது யார் * கோஹ்லி விருப்பம் என்ன

ஜூன் 13,2017 லண்டன்: 'சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோத வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புகின்றனர்,'' என, கேப்டன் கோஹ்லி ...
புண்படுமே...மனம் புண்படுமே! * இது கோஹ்லி ‘பார்முலா’

புண்படுமே...மனம் புண்படுமே! * இது கோஹ்லி ‘பார்முலா’

ஜூன் 12,2017 லண்டன்: ''கேப்டனாக நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமானால் சில நேரங்களில் சக வீரர்களின் மனம் புண்படும் வகையில் பேச நேரிடும்,''என, ...