Dinamalar

இது பைனல் பாதை ,  
 

இது பைனல் பாதை

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒருநாள் தரவரிசையில் 'டாப்-8' இடத்திலுள்ள அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் 'ஏ', 'பி' என, இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் போட்டிகள் 18 நாட்கள் நடக்கவுள்ளன.

* இம்முறை 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

* 'பி' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் உள்ளன.

* ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள், மற்ற அணிகளுடன் லீக் சுற்றில் மோதும். முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.

* ஜூன் 14, 15ல் அரையிறுதி போட்டிகள் நடக்கும். இதில் வெல்லும் அணிகள் ஜூன் 18ம் தேதி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் பைனலில் மோதும்.

ரூ. 29 கோடி பரிசு

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 29 கோடி. இது கடந்த 2013 தொடரை விட, ரூ. 3.22 கோடி அதிகம். பைனலில் சாதித்து கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 14 கோடி பரிசு கிடைக்கும். இரண்டாவது இடம் பிடிக்கும் அணி ரூ. 7 கோடி பெறும்.

* தவிர, அரையிறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா ரூ. 2.9 கோடி தரப்படும்.

* லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகள் தலா ரூ. 58 லட்சம் கொண்டு செல்லும்.

* இரு பிரிவிலும் நான்காவது இடத்துக்கு தள்ளப்படும் அணிகளுக்கு தலா ரூ. 39 லட்சம் கிடைக்கும்.

கோப்பை எப்படி

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில், சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு முதல் இரு தொடரில் வெவ்வேறு விதமான கோப்பை வழங்கப்பட்டன. இதன் பின், 2002 முதல் ஒரே விதமான கோப்பை தரப்படுகிறது.

ஸ்டெர்லிங் சில்வர்(92.5 சதவீதம் வெள்ளி, மீதமுள்ள 7.5 சதவீதம் காப்பர், நிக்கல் அல்லது ஜின்க் கலந்தது) கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கோப்பை ரூ. 3.1 கி.கி., எடை கொண்டது. மேற்பகுதியில் கிரிக்கெட் பந்து இடம் பெற்றிருக்கும். உயரம் 46 செ.மீ.. உள்ள இக்கோப்பையின் கீழ்பகுதி 47 செ.மீ., விட்டம், மேற்பகுதி 48 செ.மீ., விட்டம் கொண்டது. கோப்பையின் மதிப்பு ரூ. 12 லட்சம்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
ஹாக்கி மைதானத்தில் கிரிக்கெட்

ஹாக்கி மைதானத்தில் கிரிக்கெட்

ஜூன் 17,2017 புதுடில்லி: டில்லி தயான்சந்த் ஹாக்கி மைதானத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி பைனல் ராட்சத ஸ்கிரீனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ...
கங்குலியின் காரை தாக்கிய பாக்., ரசிகர்கள்

கங்குலியின் காரை தாக்கிய பாக்., ரசிகர்கள்

ஜூன் 17,2017 லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் பைனலுக்கு முன்னேறிய போது, இந்திய வீரர் கங்குலியின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்திய விஷயம் தற்போது ...
இங்கிலாந்து ‘ஜெர்சியுடன்’ வார்ன்

இங்கிலாந்து ‘ஜெர்சியுடன்’ வார்ன்

ஜூன் 15,2017 லண்டன்: கங்குலியிடம் பந்தயத்தில் தோற்ற வார்ன், ஒருநாள் முழுவதும் இங்கிலாந்து அணியின் 'ஜெர்சி' அணிந்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து, ...