Dinamalar

நினைத்தாலே இனிக்கும்... ,  
 

நினைத்தாலே இனிக்கும்...

உலக கோப்பைக்கு அடுத்து ஐ.சி.சி., நடத்தும் மிகப் பெரிய தொடர் சாம்பியன்ஸ் டிராபி. சர்வதேச அளவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் 1998ல், 'நாக் அவுட் டிராபி' என்ற பெயரில் 'மினி' உலக கோப்பை (50 ஓவர்) தொடர் துவங்கப்பட்டது. பின் சாம்பியன்ஸ் டிராபி என பெயர் மாறியது. கடந்த காலத்தில் சாதித்த அணிகள்.

1998-தென் ஆப்ரிக்கா

முதல் தொடர் 1998ல் வங்கதேசத்தில் நடந்தது. அசார் தலைமையிலான இந்திய அணி அரையிறுதியுடன் நடையை கட்டியது.

பைனலில் வெஸ்ட் இண்டீஸ் (245/10) இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்கா (248/6, 47 ஓவர்), 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முதல் கோப்பை கைப்பற்றியது.

2000-நியூசிலாந்து

இரண்டாவது தொடர் 2000ல் கென்யாவில் நடந்தது. . பைனலில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், கங்குலி (117) சதம் அடிக்க, இந்தியா 264 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி (265/6) கெய்ர்ன்ஸ் (102*) உதவியுடன் சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.

2002-இந்தியா, இலங்கை

மூன்றாவது தொடர் 2002ல் இலங்கையில் நடந்தது. 'நாக்-அவுட்' டிராபி என அழைக்கப்பட்ட தொடர், சாம்பியன்ஸ் டிராபி என பெயர் மாற்றம் கண்டது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.

பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் (செப். 29) மோதின. இலங்கை அணி 50 ஓவரில் 244 ரன்கள் எடுத்தது. பின், விளையாடிய இந்திய அணி 2 ஓவரில் 14 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட, போட்டி அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த நாளில் (செப். 30) இரண்டாவது முறையாக பைனல் நடந்தது. முதலில் 'பேட்' செய்த இலங்கை அணி 222 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 8.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்திருந்தபோது, மீண்டும் மழை பெய்ய, இந்தியா, இலங்கை அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

2004-வெஸ்ட் இண்டீஸ்

நான்காவது தொடர்(2004) இங்கிலாந்தில் நடந்தது. தனது பிரிவில் 2வது இடம் பிடித்த இந்திய அணி, லீக் சுற்றுடன் வெளியேறியது.

பைனலில் அசத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி (218), 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை (217) வீழ்த்தி கோப்பை வென்றது.

2006-ஆஸ்திரேலியா

ஐந்தாவது தொடர் (2006) இந்தியாவில் நடந்தது. மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்ற இந்தியா, லீக் சுற்றுடன் வெளியேறியது.

பைனலில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 138 ரன்களி்ல் சுருண்டது. பின், மழை குறுக்கிட ஆஸ்திரேலிய அணிக்கு 'டக்வொர்த் -லீவிஸ்' முறைப்படி 35 ஓவரில் 116 ரன்கள் என இலக்கு மாற்றப்பட்டது. வாட்சன் அரை சதம் விளாச, ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முதல் கோப்பையை முத்திட்டது.

2009- மீண்டும் ஆஸி.,

ஆறாவது தொடர், 2008 செப்டம்பரில் பாகிஸ்தானில் நடப்பதாக இருந்தது.ஆனால், லாகூரில் இலங்கை அணி சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த, ஒத்திவைக்கப்பட்டது. பின் 2009ல் தென் ஆப்ரிக்காவில் நடத்தப்பட்டது. தனது பிரிவில் 2வது இடம் பிடித்த இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.

பைனலில் ஆர்ப்பரித்த ஆஸ்திரேலிய அணி (206/4) 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை (200/9) வீழ்த்தி, தொடர்ந்து 2வது முறையாக கோப்பை வென்றது.

2013-இந்தியா

ஏழாவது தொடரை (2013) நினைத்தாலே இந்திய ரசிகர்களுக்கு இனிமையாக இருக்கும். இத்தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடந்தது. பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.சுமார் 5:30 மணி நேரம் மழையால் பாதிக்கப்பட, 'டுவென்டி-20' போட்டியாக மாற்றப்பட்டது. முதலில் விளையாடிய இந்திய அணிக்கு கோஹ்லி 43 ரன்கள் விளாச, 20 ஓவரில் 129 ரன்கள் குவித்தது. பின், களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 124 ரன்கள் மட்டும் எடுத்து, 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இந்திய அணி 2002க்குப்பின் இரண்டாவது முறையாக கோப்பை கைப்பற்றியது. தவிர, ஐ.சி.சி., நடத்தும் மூன்று உலக கோப்பையும் (2007- 'டுவென்டி-20', 2011- 50 ஓவர், 2013- சாம்பியன்ஸ் டிராபி) வென்ற முதல் கேப்டன் என்ற சாதனை படைத்தார் தோனி.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
ஹாக்கி மைதானத்தில் கிரிக்கெட்

ஹாக்கி மைதானத்தில் கிரிக்கெட்

ஜூன் 17,2017 புதுடில்லி: டில்லி தயான்சந்த் ஹாக்கி மைதானத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி பைனல் ராட்சத ஸ்கிரீனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ...
கங்குலியின் காரை தாக்கிய பாக்., ரசிகர்கள்

கங்குலியின் காரை தாக்கிய பாக்., ரசிகர்கள்

ஜூன் 17,2017 லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் பைனலுக்கு முன்னேறிய போது, இந்திய வீரர் கங்குலியின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்திய விஷயம் தற்போது ...
இங்கிலாந்து ‘ஜெர்சியுடன்’ வார்ன்

இங்கிலாந்து ‘ஜெர்சியுடன்’ வார்ன்

ஜூன் 15,2017 லண்டன்: கங்குலியிடம் பந்தயத்தில் தோற்ற வார்ன், ஒருநாள் முழுவதும் இங்கிலாந்து அணியின் 'ஜெர்சி' அணிந்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து, ...