Dinamalar

பயமறியா ‘இளம் புலிகள்’ ,  
 

பயமறியா ‘இளம் புலிகள்’

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாதிக்க காத்திருக்கும் சில இளம் நட்சத்திரங்கள்.

பும்ரா(இந்தியா)

இந்திய அணியின் 'வேகப்புயல்' பும்ரா, 23. மிகவும் வித்தியாசமாக பந்துவீசும் இவரது முக்கிய ஆயுதம் 'யார்க்கர்' தான். 2016ல் ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுகம் ஆனார். மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் 6 விக்கெட்டுகள் வீழ்த்த, 'தொடரின் சிறந்த கண்டு பிடிப்பு' என, தோனி புகழ்ந்தார். கடைசி கட்ட ஓவர்களை கட்டுக் கோப்பாக வீசும் இவர், சாம்பியன்ஸ் டிராபியிலும் மிரட்டுவார் என நம்பப்படுகிறது.

கம்மின்ஸ்(ஆஸி.,)

ஆஸ்திரேலிய அணியிடம் பலம் வேகப்பந்து வீச்சு தான். இதில் இளம் வீரர் கம்மின்ஸ், 24, முன்னணியில் உள்ளார். கடந்த 2011ல் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார். சமீபத்திய நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 41 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தி, வெற்றிக்கு கைகொடுத்தார்.

பில்லிங்ஸ்(இங்கிலாந்து)

சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விக்கெட் கீப்பராக களமிறங்கியவர் சாம் பில்லிங்ஸ், 25. இங்கிலாந்து அணியின் வலிமையான பேட்டிங் படைக்கு, இவர் கூடுதல் வலு சேர்க்கிறார். எப்படிப்பட்ட வகையில் பவுலிங் செய்தாலும், அதை சிக்சருக்கு அனுப்பும் திறமை இவருக்கு உள்ளது. இதுவரை 11 போட்டியில் 246 ரன்கள் எடுத்துள்ளார்.

ரபாடா(தென் ஆப்ரிக்கா)

தென் ஆப்ரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா. வயது 22 தான். இதற்குள் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வலம் வந்து விட்டார். பந்தை 'சுவிங்' செய்வது, துல்லியமாக 'யார்க்கர்' வீசுவது, முகத்துக்கு நேராக பந்தை 'பவுன்ஸ்' செய்வது என, மிரட்டல் வீரராக திகழ்கிறார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் சாதித்த (16 ரன்/ 6 விக்.,) இவர், உலகின் சிறந்த அறிமுக பவுலர் ஆனார். தவிர, தய்ஜுல் இஸ்லாமிற்குப் (வங்கதேசம்) பின், அறிமுக போட்டியில் 'ஹாட்ரிக்' வீழ்த்திய 2வது பவுலர் ஆனார்.

சான்ட்னர்( நியூசி.,)

நியூசிலாந்து அணியின் இடது கை 'சுழல்' பந்து வீச்சு 'ஆல் ரவுண்டர்' சான்ட்னர், 25. கடந்த 2015ல் அறிமுகம் ஆன இவர், மூன்று வித கிரிக்கெட்டிலும் தவிர்க்க முடியாத வீரராக வளர்ந்துள்ளார். 'ஜாம்பவான்' பவுலர் வெட்டோரியின் சாயலில் காணப்படும் சான்ட்னர், 2016 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரைப் போல, மீண்டும் சாதிக்கலாம்.

முஸ்தபிஜூர் (வங்கதேசம்)

வங்கதேச அணியின் மிகச்சிறந்த 'வேகப்புயல்' முஸ்தபிஜூர் ரஹ்மான், 21. ஜிம்பாப்வேயின் பிரையன் வெட்டோரிக்குப் (எதிரணி-வங்கதேசம்) 5, 5 விக்.,) பின், அறிமுகமான முதல் இரு ஒருநாள் போட்டிகளில் 5 அல்லது அதற்கும் மேல் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது பவுலர் முஸ்தபிஜூர் (எதிரணி- இந்தியா, 5, 6 விக்.,).

குசால் மெண்டிஸ்(இலங்கை)

இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ், 22. கடந்த 2015ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆனார். பிரண்டன் குருப்புக்கு (எதிரணி-நியூசி., 187 ரன்), முதல் டெஸ்ட் சதத்தில் அதிக ரன் (எதிரணி-ஆஸி., 176) எடுத்தவர் இவர் தான். 'சாம்பியன்' வீரர் சங்ககரா ஓய்வுக்குப் (2015) பின், 3வது இடத்தில் களமிறங்கி பல்வேறு வீரர்கள் வந்த போதும், குசால் மெண்டிஸ் தான் இதற்கு பொருத்தமானவர் என, நம்பப்படுகிறார்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
ஹாக்கி மைதானத்தில் கிரிக்கெட்

ஹாக்கி மைதானத்தில் கிரிக்கெட்

ஜூன் 17,2017 புதுடில்லி: டில்லி தயான்சந்த் ஹாக்கி மைதானத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி பைனல் ராட்சத ஸ்கிரீனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ...
கங்குலியின் காரை தாக்கிய பாக்., ரசிகர்கள்

கங்குலியின் காரை தாக்கிய பாக்., ரசிகர்கள்

ஜூன் 17,2017 லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் பைனலுக்கு முன்னேறிய போது, இந்திய வீரர் கங்குலியின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்திய விஷயம் தற்போது ...
இங்கிலாந்து ‘ஜெர்சியுடன்’ வார்ன்

இங்கிலாந்து ‘ஜெர்சியுடன்’ வார்ன்

ஜூன் 15,2017 லண்டன்: கங்குலியிடம் பந்தயத்தில் தோற்ற வார்ன், ஒருநாள் முழுவதும் இங்கிலாந்து அணியின் 'ஜெர்சி' அணிந்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து, ...