Dinamalar

‘சிக்சர் மன்னன்’ கங்குலி ,  
 

‘சிக்சர் மன்னன்’ கங்குலி

அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சவுரவ் கங்குலி முன்னிலையில் உள்ளார். இவர், 13 போட்டியில் 17 சிக்சர் அடித்துள்ளார். இவரை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (15 சிக்சர்), ஆஸ்திரேலியாவின் வாட்சன் (12), இங்கிலாந்தின் கோலிங்வுட் (11), பாகிஸ்தானின் அப்ரிதி (10) அதிக சிக்சர் அடித்துள்ளனர்.

கெய்ல் '791'

அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் முன்னிலை வகிக்கிறார். இவர், 17 போட்டியில் 3 சதம், ஒரு அரைசதம் என 791 ரன்கள் குவித்துள்ளார். அடுத்த இடத்தில் இலங்கையின் ஜெயவர்தனா உள்ளார்.

ஆஸ்லே விளாசல்

ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் நாதன் ஆஸ்லே, ஜிம்பாப்வேயின் ஆன்டி பிளவர் முன்னிலை வகி்க்கின்றனர். இவர்கள் இருவரும் தலா 145 ரன்கள் எடுத்துள்ளனர்.

மூன்று பேர்...மூன்று சதம்

சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் இதுவரை 40 சதம் பதிவாகியுள்ளன. இதில் அதிக சதமடித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சவுரவ் கங்குலி, தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், வெஸ்ட் இண்டீசின் கெய்ல் முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் மூவரும் தலா 3 சதமடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து பாகிஸ்தானின் அன்வர், இந்தியாவின் ஷிகர் தவான், இலங்கையின் உபுல் தரங்கா, இங்கிலாந்தின் டிரஸ்கோத்திக், ஆஸ்திரேலியாவின் வாட்சன் தலா 2 சதமடித்துள்ளனர்.

டிராவிட் அபாரம்

அதிக அரைசதமடித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் ராகுல் டிராவிட் முன்னிலை வகிக்கிறார். இவர், 19 போட்டியில் 6 அரைசதமடித்துள்ளார். இவரை அடுத்து, ஆஸ்திரேலியாவின் டேமியன் மார்டின், வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால், இலங்கையின் மகிளா ஜெயவர்தனா தலா 5 அரைசதமடித்துள்ளனர்.

'டக்-அவுட்' சோகம்

அதிக முறை 'டக்-அவுட்டான' வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் வாட்சன் முதலிடத்தில் உள்ளார். இவர், 17 போட்டியில் 4 முறை ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டாகியுள்ளார். இவரை அடுத்து, வங்கதேசத்தின் ஹபிபுல் பஷார், நியூசிலாந்தின் நாதன் ஆஸ்லே, பாகிஸ்தானின் சோயிப் மாலிக், இலங்கையின் ஜெயசூர்யா தலா 3 முறை 'டக்-அவுட்' ஆனார்கள்.

ரன் மழை

ஒரு சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல் முன்னிலை வகிக்கிறார். இவர், 2006-07ல் இந்தியாவில் நடந்த தொடரில் 8 போட்டியில் 474 ரன்கள் (3 சதம்) எடுத்துள்ளார். கடந்த 2013ல் இங்கிலாந்தில் நடந்த தொடரில், இந்தியாவின் ஷிகர் தவான் 363 ரன்கள் (2 சதம், ஒரு அரைசதம்) குவித்துள்ளார்.

அப்ரிதி 'சரவெடி'

அதிக 'ஸ்டிரைக் ரேட்' வைத்துள்ள பேட்ஸ்மேன்கள் வரிசையில் பாகிஸ்தானின் அப்ரிதி முன்னிலையில் உள்ளார். இவரது 'ஸ்டிரைக் ரேட்' 305.55 ஆகும். இவரை அடுத்து, இங்கிலாந்தின் ரவி போபரா (253.84), நியூசிலாந்தின் மேக்மிலன் (237.03) அதிக 'ஸ்டிரைக்-ரேட்' வைத்துள்ளனர்.

இந்தியா ஆதிக்கம்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இதுவரை 24 போட்டியில் 15 வெற்றி, 6 தோல்வியை பெற்றது. மூன்று போட்டிகளுக்கு முடிவு இல்லை.

நியூசி., '347'

ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த அணிகளுக்கான வரிசையில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது. கடந்த 2004ல் லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 347 ரன்கள் குவித்தது.

அமெரிக்கா '65'

ஒரு இன்னிங்சில் குறைந்த ஸ்கோர் எடுத்த அணிகளுக்கான பட்டியலில் அமெரிக்க அணி முன்னிலையில் உள்ளது. கடந்த 2004ல் சவுத்தாம்ப்டனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்க அணி 65 ரன்னுக்கு சுருண்டது.

சிறந்த வெற்றி

சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது. கடந்த 2004ல் லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 210 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

* அதிக விக்கெட் வித்தியாசத்தில் சிறந்த வெற்றி பெற்ற அணிகளுக்கான வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது. கடந்த 2006ல் வங்கதேசத்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

'திரில்' வெற்றி

கடந்த 2013ல் பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

* கடந்த 2013ல் கார்டிப் நகரில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி 'திரில்' வெற்றியை பதிவு செய்தது.

கென்யா '42'

ஒரு இன்னிங்சில் அதிக உதிரி ரன்கள் வழங்கிய அணிகளுக்கான பட்டியலில் கென்யா முதலிடத்தில் உள்ளது. கடந்த 2004ல் சவுத்தாம்ப்டனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கென்ய பவுலர்கள் 42 ரன்கள் உதிரியாக வழங்கினர். இதனையடுத்து இலங்கை அணி 38 ரன்கள் (எதிர்-நெதர்லாந்து, 2002, இடம்: கொழும்பு) உதிரியாக வழங்கியது.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வித்தியாசத்தில் உலக சாதனை

வித்தியாசத்தில் உலக சாதனை

ஜூன் 18,2017 இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, ஐ.சி.சி., தொடரின் பைனலில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்த அணி என்ற சாதனை படைத்தது. ...
கோஹ்லி 8000 ரன்கள்

கோஹ்லி 8000 ரன்கள்

ஜூன் 15,2017 இந்திய கேப்டன் கோஹ்லி, தனது 88வது ரன்னை கடந்த போது, சர்வதேச ஒருநாள் போட்டியில் 8000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர், 183 போட்டியில் (175 இன்னிங்ஸ்) 27 சதம், 42 ...
கங்குலியை முந்தினார் தவான்

கங்குலியை முந்தினார் தவான்

ஜூன் 15,2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் கங்குலியை (665 ரன்) முந்தி, முதலிடம் பிடித்தார் ஷிகர் தவான். இவர், இதுவரை 9 போட்டியில் 680 ரன்கள் ...