Dinamalar

சச்சின் முதல்வன் ,  
 

சச்சின் முதல்வன்

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில், இந்திய ஜாம்பவான் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர், 69 போட்டியில் 5 சதம், 16 அரைசதம் உட்பட 2526 ரன்கள் எடுத்துள்ளார்.

அசார் அபாரம்

இவ்விரு அணிகள் மோதிய போட்டிகளில் அதிக 'கேட்ச்' செய்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் அசார் முதலிடத்தில் உள்ளார். இவர், 64 போட்டியில் 44 'கேட்ச்' செய்துள்ளார். இவரை அடுத்து பாகிஸ்தானின் அப்ரிதி (30 'கேட்ச்'), இந்தியாவின் சச்சின் (29), டிராவிட் (25) பீல்டிங்கில் அசத்தினர்.

71

அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் மொயின் கான் முன்னிலை வகிக்கிறார். இவர், 49 போட்டியில் 58 'கேட்ச்', 13 'ஸ்டெம்பிங்' என 71 விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் தோனி (39 விக்கெட் வீழ்ச்சி), பாகிஸ்தானின் கம்ரான் அக்மல் (31), இந்தியாவின் நயன் மோங்கியா (29) உள்ளனர்.

சூப்பர் ஜோடி

எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகள் வரிசையில் இந்தியாவின் சச்சின், சித்து ஜோடி முதலிடத்தில் உள்ளது. கடந்த 1996ல் சார்ஜாவில் நடந்த போட்டியில் 2வது விக்கெட்டுக்கு இணைந்த இந்திய ஜோடி 231 ரன்கள் குவித்தது.

இரண்டாவது இடத்தில், பாகிஸ்தானின் சயீத் அன்வர், இசாஜ் அகமது ஜோடி (230 ரன், 3வது விக்கெட், இடம்: தாகா, 1998) உள்ளது.

69

அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர், 69 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக பங்கேற்றுள்ளார். இவரை தொடர்ந்து பாகிஸ்தானின் இன்சமாம், அப்ரிதி தலா 67 போட்டிகளில் விளையாடி உள்ளனர். இந்தியாவின் அசார், 64 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

வெற்றிக் கேப்டன்

அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன்கள் பட்டியலில் பாகிஸ்தானின் இம்ரான் கான் முன்னிலையில் உள்ளார். இவர், 24 போட்டியில் 19 வெற்றியை பெற்றுத் தந்துள்ளார்.

100 சதவீதம்

உலக கோப்பை (50 ஓவர் 'டுவென்டி-20') வரலாற்றில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 100 சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளது. இதுவரை மோதிய 11 போட்களில் (50 ஓவரில் 6 'டுவென்டி-20'யில் 5 போட்டி) மோதின. அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.

தொடருமா

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோதின. இதில் பாகிஸ்தான் 2 (2004, 2009), இந்தியா ஒரு (2013) போட்டியில் வென்றன. இம்முறை இந்திய அணி அசத்தும் பட்சத்தில், தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்யலாம்.

127

சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை 127 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 51, பாகிஸ்தான் 72 போட்டிகளில் வென்றன. நான்கு போட்டிகளுக்கு முடிவு இல்லை.

356

கடந்த 2005ல் விசாப்பட்டனத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

* கடந்த 2004ல் கராச்சியில் நடந்த ஒருநாள் போட்டியில் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 344 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக தனது சிறந்த ஸ்கோரை பெற்றது.

79

சியால்கோட்டில், 1978ல் நடந்த ஒருநாள் போட்டியில் 79 ரன்னுக்கு சுருண்ட இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக தனது குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

* கடந்த 1985ல் சார்ஜாவில் நடந்த ஒருநாள் போட்டியில் 87 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டான' பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக மோசமான ஸ்கோரை பெற்றது.

194

இவ்விரு அணிகள் மோதிய போட்டிகளில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் சயீத் அன்வர் முன்னிலை வகிக்கிறார். கடந்த 1997ல் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் அசத்திய அன்வர், 146 பந்தில் 194 ரன்கள் (5 சிக்சர், 22 பவுண்டரி) குவித்தார். இதன்மூலம் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். தற்போது இச்சாதனை இந்தியாவின் ரோகித் சர்மா (264 ரன், எதிர்-இலங்கை, இடம்: கோல்கட்டா, 2014) வசம் உள்ளது.

* இரண்டாவது இடத்தில் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி (183 ரன், இடம்: தாகா, 2012) உள்ளார்.

5

அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின், பாகிஸ்தானின் சல்மான் பட் முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் இருவரும் தலா 5 சதம் அடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து பாகிஸ்தானின் சோயப் மாலிக், சயீத் அன்வர், இன்சமாம் தலா 4 சதம் அடித்துள்ளனர்.

தற்போதுள்ள இந்திய வீரர்களில் கேப்டன் விராத் கோஹ்லி, தோனி தலா 2 சதமடித்துள்ளனர்.

'டக்-அவுட்' சோகம்

அதிக முறை 'டக்-அவுட்' ஆன வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் ஸ்ரீநாத், பாகிஸ்தானின் அப்ரிதி முன்னிலையில் உள்ளனர். இவர்கள் இருவரும் தலா 6 முறை ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டாகினர். பாகிஸ்தானின் யூனிஸ் கான், மொயின் கான், இந்தியாவின் சச்சின் தலா 5, கங்குலி 4 முறை 'டக்-அவுட்' ஆனார்கள்.

அக்ரம் அசத்தல்

அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் முதலிடத்தில் உள்ளார். இவர், 48 போட்டியில் 60 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

7

ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் அகுய்ப் ஜாவத் முன்னிலை வகிக்கிறார். கடந்த 1991ல் சார்ஜாவில் நடந்த போட்டியில் 10 ஓவரில் 37 ரன்கள் வழங்கி, 7 விக்கெட் வீழ்த்தினார். இவரை அடுத்து பாகிஸ்தானின் இம்ரான் கான் (1985), நவித்-உல்-ஹசன் (2005) தலா 6 விக்கெட் சாய்த்தனர்.

இந்தியா சார்பில் கங்குலி (1997), வெங்கடேஷ் பிரசாத் (1999), சச்சின் (2005) தலா 5 விக்கெட் கைப்பற்றினர்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வித்தியாசத்தில் உலக சாதனை

வித்தியாசத்தில் உலக சாதனை

ஜூன் 18,2017 இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, ஐ.சி.சி., தொடரின் பைனலில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்த அணி என்ற சாதனை படைத்தது. ...
கோஹ்லி 8000 ரன்கள்

கோஹ்லி 8000 ரன்கள்

ஜூன் 15,2017 இந்திய கேப்டன் கோஹ்லி, தனது 88வது ரன்னை கடந்த போது, சர்வதேச ஒருநாள் போட்டியில் 8000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர், 183 போட்டியில் (175 இன்னிங்ஸ்) 27 சதம், 42 ...
கங்குலியை முந்தினார் தவான்

கங்குலியை முந்தினார் தவான்

ஜூன் 15,2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் கங்குலியை (665 ரன்) முந்தி, முதலிடம் பிடித்தார் ஷிகர் தவான். இவர், இதுவரை 9 போட்டியில் 680 ரன்கள் ...