Dinamalar

அடக்க முடியாத ஆசை ,  
 

அடக்க முடியாத ஆசை

இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டியை காண ரசிகர்களிடம் ஆசை அதிகம் இருக்கும். இரு அணிகள் மோதிய 'டென்ஷன்' மிகுந்த சில தருணங்கள்...

'ஜம்பிங்' ஜாவித்

கடந்த 1992, மார்ச் 4ல் சிட்னியில் நடந்த லீக் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கிரண் மோரே இருந்தார். பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியான்தத் பேட்டிங் செய்த போது, ஒவ்வொரு முறையும் தவளை மாதிரி குதித்து 'அவுட்' கேட்டார். உடனே மோரேயுடன், மியான்தத் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், 'ரன்-அவுட்' வாய்ப்பில் இருந்து தப்பியதும், கிரண் மோரே போல மூன்று முறை மேலும், கீழுமாக குதித்து சூடேற்றினார்.

பிரசாத்-சோகைல் மோதல்

1996ல் பெங்களூருவில் நடந்த காலிறுதியில் இரு அணிகள் மோதின. இந்திய அணியின் இலக்கை (287/8) துரத்திய பாகிஸ்தான் அணிக்கு அமீர் சோகைல், சயீத் அன்வர் 'சூப்பர்' துவக்கம் தந்தனர். தனது பந்தில் பவுண்டரி அடித்த சோகைலை, வெறுப்புடன் பார்த்தார் வெங்கடேஷ் பிரசாத். அதற்கு சோகைல், என்னைப் பார்க்காதே, பந்தைப் பார் என்பது போல 'சைகை' செய்தார். அடுத்த பந்தில் சோகைல் போல்டாக, பிரசாத்தை கோபத்துடன் பார்க்க, வெளியே போ என, தன் பங்கிற்கு சைகை காண்பிக்க, அரங்கமே அதிர்ந்தது.

சச்சின் 'சிக்சர்'

கடந்த 2003ல் நடந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி 'வேகப்புயல்' சோயப் அக்தரை நம்பி களமிறங்கியது. ஆனால், இவரது முதல் ஓவரில் சச்சின் ஒரு சிக்சர், 2 பவுண்டரி என விளாச, இவர் தொடர்ந்து பவுலிங் செய்ய வரவில்லை.

காம்பிர்-அப்ரிதி மோதல்

2007ல் கான்பூரில் நடந்த போட்டியில் பாகிஸ்தானின் அப்ரிதி பந்தில் இந்தியாவின் காம்பிர், பவுண்டரி அடித்தார். அப்போது இருவருக்கும் இடையே லேசான வார்த்தை மோதல் உண்டானது. பின் ஒரு ரன்னுக்கு ஓடிய காம்பிர், அப்ரிதி மீது மோதினர். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் வார்த்தை போர் முற்றியது. பின், அம்பயர்கள் தலையிட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனர். போட்டி முடிந்த பின், 'மேட்ச் ரெப்ரி' இருவருக்கும் அபராதம் விதித்தார்.

இதேபோல காம்பிர் - கம்ரான் அக்மல் (2010), ஹர்பஜன் சிங் - அக்தர் (2010), இஷாந்த் சர்மா - கம்ரான் அக்மல் (2012) ஆகியோருக்கும் இடையே போட்டியின் போது வார்த்தை மோதல் ஏற்பட்டது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
ஹாக்கி மைதானத்தில் கிரிக்கெட்

ஹாக்கி மைதானத்தில் கிரிக்கெட்

ஜூன் 17,2017 புதுடில்லி: டில்லி தயான்சந்த் ஹாக்கி மைதானத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி பைனல் ராட்சத ஸ்கிரீனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ...
கங்குலியின் காரை தாக்கிய பாக்., ரசிகர்கள்

கங்குலியின் காரை தாக்கிய பாக்., ரசிகர்கள்

ஜூன் 17,2017 லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் பைனலுக்கு முன்னேறிய போது, இந்திய வீரர் கங்குலியின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்திய விஷயம் தற்போது ...
இங்கிலாந்து ‘ஜெர்சியுடன்’ வார்ன்

இங்கிலாந்து ‘ஜெர்சியுடன்’ வார்ன்

ஜூன் 15,2017 லண்டன்: கங்குலியிடம் பந்தயத்தில் தோற்ற வார்ன், ஒருநாள் முழுவதும் இங்கிலாந்து அணியின் 'ஜெர்சி' அணிந்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து, ...