Dinamalar

தவான், ரோகித் அசத்தல் ,  
 

தவான், ரோகித் அசத்தல்

சாம்பியன்ஸ் டிராபி அரங்கில், ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் இந்தியாவின் ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி 2வது இடம் பிடித்தது. இதுவரை 6 இன்னிங்சில் 518 ரன்கள் குவித்தது. முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல்-சந்தர்பால் ஜோடி (635 ரன், 9 இன்னிங்ஸ்) உள்ளது.

91

நேற்று, 91 ரன்கள் எடுத்த இந்தியாவின் ரோகித் சர்மா, ஒருநாள் போட்டி அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார். இதற்கு முன், 2012ல் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் 68 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்ச ரன்னாக இருந்தது.

இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக 12 ஒருநாள் போட்டியில் விளையாடிய ரோகித், 5 அரைசதம் உட்பட 537 ரன்கள் எடுத்துள்ளார்.

136

முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்த இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்சமாக 3வது முறையாக ஒரு இன்னிங்சில் 100 அல்லது அதற்கு மேல் ரன்கள் சேர்த்தது. இதற்கு முன், தென் ஆப்ரிக்கா (127 ரன், முதல் விக்கெட், 2013), வெஸ்ட் இண்டீஸ் (101 ரன், முதல் விக்கெட், 2013) அணிகளுக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்தது.

இவர்களை அடுத்து, வெஸ்ட் இண்டீசின் கெய்ல் - சந்தர்பால் மற்றும் தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ் - ஸ்மித் ஜோடிகள் தலா 2 முறை இந்த இலக்கை எட்டின.

319

பேட்டிங்கில் அசத்திய இந்திய அணி 319 ரன்கள் குவித்தது. இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்தது. இதற்கு முன், 2009ல் செஞ்சுரியனில் நடந்த போட்டியில் 248 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது.

* தவிர இது, சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவின் 2வது அதிகபட்ச ஸ்கோர். கடந்த 2013ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 331 ரன்கள் குவித்தது அதிகபட்ச ரன்னாக உள்ளது.

பாக்., பவுலர்கள் காயம்

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களான முகமது ஆமிர், வகாப் ரியாஸ் காயம் காரணமாக பாதியில் 'பெவிலியன்' திரும்பினர்.

பீல்டிங் சொதப்பல்

பாகிஸ்தான் வீரர்களின் பீல்டிங் சொதப்பலாக இருந்தது. ஷதாப் கான் வீசிய 38.4வது ஓவரில் யுவராஜ் சிங் துாக்கி அடித்த பந்தை ஹசன் அலி நழுவவிட்டார். அப்போது 8 ரன்கள் மட்டும் எடுத்திருந்த யுவராஜ், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அரைசதம் கடந்தார். இதேபோல வகாப் ரியாஸ் வீசிய 43.6வது ஓவரில் கோஹ்லி கொடுத்த 'கேட்ச்' வாய்ப்பை பகார் ஜமான் கோட்டைவிட்டார்.

87

பவுலிங்கில் ஏமாற்றிய பாகிஸ்தானின் வகாப் ரியாஸ், 8.4 ஓவரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் 87 ரன்கள் வழங்கினார். இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் வழங்கிய பவுலரானார். இதற்கு முன், ஜிம்பாப்வே அணியின் பன்யாங்கரா (86 ரன், எதிர்-இங்கிலாந்து, 2004) ரன் வள்ளலாக இருந்தார். இவர்களை அடுத்து, இலங்கையின் மலிங்கா (85 ரன், எதிர்-நியூசிலாந்து, 2009), தென் ஆப்ரிக்காவின் டிசாட்சொபே (83 ரன், எதிர்-இந்தியா, 2013) உள்ளனர்.

'டாப்-ஆர்டர்' அசத்தல்

இந்திய அணியின் 'டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்களான ரோகித் (91), தவான் (68), கோஹ்லி (81*), யுவராஜ் (53) அரைசதம் கடந்தனர். இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில், மூன்றாவது முறையாக இந்திய அணியின் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் அரைசதம் கடந்த சம்பவம் அரங்கேறியது. இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு முறை (2006ல் இந்துார், 2007ல் லீட்ஸ்) இச்சம்பவம் நிகழ்ந்தது.

13-2

ஐ.சி.சி., நடத்தும் 50 ஓவர் உலக கோப்பை (6 போட்டி), 'டுவென்டி-20' உலக கோப்பை (5 போட்டி) தொடர்களில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 100 சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் 3 போட்டியில் ஒரே ஒரு வெற்றி மட்டும் பெற்றிருந்தது. நேற்று, அசத்தலாக ஆடிய இந்தியா, சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக 2வது வெற்றியை பெற்றது. இதன்மூலம் ஐ.சி.சி., நடத்தும் மிகப் பெரிய தொடர்களில் விளையாடிய 15 போட்டியில் இந்தியா 13, பாகிஸ்தான் 2ல் வெற்றி பெற்றன.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வித்தியாசத்தில் உலக சாதனை

வித்தியாசத்தில் உலக சாதனை

ஜூன் 18,2017 இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, ஐ.சி.சி., தொடரின் பைனலில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்த அணி என்ற சாதனை படைத்தது. ...
கோஹ்லி 8000 ரன்கள்

கோஹ்லி 8000 ரன்கள்

ஜூன் 15,2017 இந்திய கேப்டன் கோஹ்லி, தனது 88வது ரன்னை கடந்த போது, சர்வதேச ஒருநாள் போட்டியில் 8000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர், 183 போட்டியில் (175 இன்னிங்ஸ்) 27 சதம், 42 ...
கங்குலியை முந்தினார் தவான்

கங்குலியை முந்தினார் தவான்

ஜூன் 15,2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் கங்குலியை (665 ரன்) முந்தி, முதலிடம் பிடித்தார் ஷிகர் தவான். இவர், இதுவரை 9 போட்டியில் 680 ரன்கள் ...