Dinamalar

சூப்பர் ஜோடி ,  
 

சூப்பர் ஜோடி

இந்தியா, இலங்கை அணிகள் மோதிய ஒருநாள் போட்டிகளில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி வரிசையில் இந்தியாவின் கங்குலி, டிராவிட் ஜோடி முன்னிலை வகிக்கிறது. கடந்த 1999ல் டான்டனில் நடந்த போட்டியில் கங்குலி, டிராவிட் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 318 ரன்கள் சேர்த்தது.

அடுத்த இரண்டு இடங்களிலும் இந்தியாவின் கங்குலி - சச்சின் (252 ரன், முதல் விக்கெட், 1998, இடம்:கொழும்பு), கங்குலி - டிராவிட் (236 ரன், 2வது விக்கெட், 1999, இடம்: நாக்பூர்) ஜோடிகள் உள்ளன.

இலங்கை சார்பில் அட்டபட்டு, மகிளா ஜெயவர்தனா ஜோடி (226 ரன், 3வது விக்கெட், 2000, இடம்: சார்ஜா) இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்தது.

150

இந்தியா, இலங்கை அணிகள் இன்று 150வது முறையாக ஒருநாள் போட்டியில் மோதுகின்றன. முன்னதாக விளையாடிய 149 போட்டிகளில் இந்தியா 83, இலங்கை 54ல் வென்றன. ஒரு போட்டி 'டை' ஆனது. 11 போட்டிகளுக்கு முடிவு இல்லை.

414

கடந்த 2009ல் ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் முதலில் 'பேட்டிங்' செய்த இந்தியா, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 414 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில், இலங்கைக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

இப்போட்டியில், 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 411 ரன்கள் எடுத்த இலங்கை அணி, இந்தியாவுக்கு எதிராக தனது சிறந்த ஸ்கோரை பெற்றது.

54

சார்ஜாவில், 2000ம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணி 54 ரன்னுக்கு சுருண்டது. இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில், இலங்கைக்கு எதிராக தனது குறைந்த பட்ச ஸ்கோரை பெற்றது.

* கடந்த 1984ல் சார்ஜாவில் நடந்த போட்டியில் 96 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டான' இலங்கை அணி, இந்தியாவுக்கு எதிராக தனது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. இதேபோல, 2013ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 96 ரன்னுக்கு மீண்டும் சுருண்டது.

74

இந்தியா, இலங்கை அணிகள் மோதிய ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் இலங்கையின் முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். இவர், 63 போட்டியில் 74 விக்கெட் சாய்த்துள்ளார்.

* தற்போதுள்ள பவுலர்களில் இலங்கையின் மலிங்கா, 33 போட்டியில் 38 விக்கெட், இந்தியாவின் அஷ்வின் 20 போட்டியில் 32 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

7

ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் இலங்கையின் முரளிதரன் முன்னிலை வகிக்கிறார். இவர், 2000ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 10 ஓவரில் 30 ரன்கள் வழங்கி, 7 விக்கெட் கைப்பற்றினார்.

இந்தியா சார்பில், ஆஷிஸ் நெஹ்ரா (6 விக்கெட், 10 ஓவர், 2005, இடம்: கொழும்பு), இலங்கைக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

78

இவ்விரு அணிகள் மோதிய ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர் பட்டியலில் இந்தியாவின் தோனி முன்னிலை வகிக்கிறார். இவர், 57 போட்டியில் 59 'கேட்ச்', 19 'ஸ்டெம்பிங்' என மொத்தம் 78 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார்.

இலங்கை சார்பில் சங்ககரா (76 போட்டி, 75 விக்கெட் வீழ்ச்சி, 65 'கேட்ச், 10 'ஸ்டெம்பிங்') உள்ளார்.

அசத்தல் பீல்டர்

இவ்விரு அணிகள் மோதிய ஒருநாள் போட்டிகளில் அதிக 'கேட்ச்' செய்த பீல்டர்கள் வரிசையில் இலங்கையின் மகிளா ஜெயவர்தனா (38 'கேட்ச்'), இந்தியாவின் சச்சின் (30), ரெய்னா (25) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

அனுபவம் அதிகம்

இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் ஜெயசூர்யா (89 போட்டி), மகிளா ஜெயவர்தனா (87) அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளனர். இலங்கைக்கு எதிராக இந்தியாவின் சச்சின் (84 போட்டி), தோனி (57), ரெய்னா (55), சேவக் (55), யுவராஜ் சிங் (54) அதிக போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

வெற்றிக் கேப்டன்

இவ்விரு அணிகள் மோதிய ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன்கள் பட்டியலில் இந்தியாவின் தோனி முன்னிலை வகிக்கிறார். இவர், 41 போட்டியில் 25 வெற்றி பெற்றுத் தந்துள்ளார்.

சபாஷ் சச்சின்

இந்தியா, இலங்கை அணிகள் மோதிய ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர் 84 போட்டியில் 8 சதம், 17 அரைசதம் உட்பட 3113 ரன்கள் எடுத்துள்ளார்.

264

இலங்கைக்கு எதிராக எப்போதும் அசத்துவார் இந்தியாவின் ரோகித் சர்மா. கடந்த 2014ல் கோல்கட்டா, ஈடன் கார்டனில் நடந்த போட்டியில் 264 ரன்கள் விளாசினார். இதன்மூலம் ஒருநாள போட்டி வரலாற்றில், ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்து சாதனை படைத்தார். இவர் இன்று 'பேட்' மூலம் ஓங்கி 'அடித்தால்', இலங்கை பவுலர்கள் ஓடி ஔிவது நிச்சயம்.

* சார்ஜாவில், 2000ம் ஆண்டு நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கையின் ஜெயசூர்யா, அதிகபட்சமாக 189 ரன்கள் எடுத்தார்.

* கடந்த 2005ல் ஜெய்ப்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனி 183 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார்.

சதங்களின் நாயகன்

இந்தியா, இலங்கை அணிகள் மோதிய போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர், 84 போட்டியில் 8 சதமடித்துள்ளார். இவரை அடுத்து இலங்கையின் ஜெயசூர்யா 7 சதம் அடித்துள்ளார். இந்தியாவின் காம்பிர், விராத் கோஹ்லி, இலங்கையின் சங்ககரா தலா 6 சதமடித்துள்ளனர்.

'டக்-அவுட்' சோகம்

இவ்விரு அணிகள் மோதிய ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 'டக்-அவுட்' ஆன பேட்ஸ்மேன்கள் பட்டியிலில் இலங்கையின் ஜெயசூர்யா முன்னிலை வகிக்கிறார். இவர், 89 போட்டியில் 7 முறை ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் அவுட்டாகியுள்ளார்.

நான்காவது முறை

சாம்பியன்ஸ் டிராபி அரங்கில், இந்தியா, இலங்கை அணிகள் இன்று நான்காவது முறையாக மோதவுள்ளன. முன்னதாக மோதிய 3 போட்டியில் இந்தியா (2013) ஒன்றில் வென்றது. இரண்டு போட்டிகளுக்கு (2002) முடிவு இல்லை.

* கடந்த 2002ல் கொழும்புவில், இவ்விரு அணிகள் மோதிய பைனல் (செப். 29), மழையால் தடைபட்டது. பின், 'ரிசர்வ் டே'யில் (செப். 30) பைனல் நடத்தப்பட்டது. மீண்டும் மழை குறுக்கிட, போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து வழங்கப்பட்டது.

* கடந்த 2013ல் இங்கிலாந்தின் கார்டிப் நகரில் இவ்விரு அணிகள் மோதிய அரையிறுதியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணி, 35 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வித்தியாசத்தில் உலக சாதனை

வித்தியாசத்தில் உலக சாதனை

ஜூன் 18,2017 இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, ஐ.சி.சி., தொடரின் பைனலில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்த அணி என்ற சாதனை படைத்தது. ...
கோஹ்லி 8000 ரன்கள்

கோஹ்லி 8000 ரன்கள்

ஜூன் 15,2017 இந்திய கேப்டன் கோஹ்லி, தனது 88வது ரன்னை கடந்த போது, சர்வதேச ஒருநாள் போட்டியில் 8000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர், 183 போட்டியில் (175 இன்னிங்ஸ்) 27 சதம், 42 ...
கங்குலியை முந்தினார் தவான்

கங்குலியை முந்தினார் தவான்

ஜூன் 15,2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் கங்குலியை (665 ரன்) முந்தி, முதலிடம் பிடித்தார் ஷிகர் தவான். இவர், இதுவரை 9 போட்டியில் 680 ரன்கள் ...