Dinamalar

கங்குலி சாதனை சமன் ,  
 

கங்குலி சாதனை சமன்

இலங்கைக்கு எதிராக அபாரமாக ஆடிய இந்தியாவின் ஷிகர் தவான் சதமடித்தார். இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி அரங்கில், அதிக சதமடித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சவுரவ் கங்குலி, தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், வெஸ்ட் இண்டீசின் கெய்ல் ஆகியோருடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். இவர்கள் நால்வரும் தலா 3 சதமடித்துள்ளனர்.

இவர்களை தொடர்ந்து பாகிஸ்தானின் அன்வர், இலங்கையின் உபுல் தரங்கா, இங்கிலாந்தின் டிரஸ்கோத்திக், ஆஸ்திரேலியாவின் வாட்சன் தலா 2 சதமடித்துள்ளனர்.

புதிய சாதனை

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு, அதிகமுறை அரைசதம் அடித்த ஜோடி வரிசையில், இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் முதலிடம் பிடித்தனர்.

இதுவரை 127, 101, 58, 77, 19, 136 மற்றும் 138 என, ஆறு முறை அரைசதத்துக்கு மேல் அடித்தனர். இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் கெய்ல், சந்தர்பால் ஜோடி, ஐந்து முறை அரைசதத்துக்கு மேல் எடுத்துள்ளனர்.





4

இலங்கை அணிக்கு எதிராக டீன் ஜோன்ஸ் (ஆஸி.,), இந்தியாவின் சித்து, அசார், சயீத் அன்வருக்கு (பாக்.,) அடுத்து, 94, 113, 79, 91 மற்றும் 125 என, தொடர்ந்து 5 போட்டிகளில் 50 ரன்னுக்கும் மேல் எடுத்த வீரர் ஆனார் இந்தியாவின் தவான்.

556

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிவேகமாக 500 ரன்கள் எட்டிய முதல் வீரர் ஆனார் இந்தியாவின் ஷிகர் தவான். கடந்த 2013 தொடரில் 363 ரன், தற்போது 193 ரன் என, மொத்தம் 7 போட்டியில் 556 ரன்கள் எடுத்தார். இதற்கு முன் கங்குலி 8 போட்டியில் 500க்கும் மேல் ரன்கள் எடுத்திருந்தார்.

இது அதிகம்

ஒருநாள் போட்டியில் தவான், அதிக நேரம் அதாவது 44.1 வது ஓவர் வரை நேற்று பேட்டிங் செய்தார். 2015 உலக கோப்பை போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக இதற்கு முன், 43.4 ஓவர்கள் வரை பேட்டிங் செய்தார்.

1







ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி, சிட்னி (123, எதிர்-ஆஸி.,), பர்மிங்காம் (136, எதிர்-பாக்.,) போட்டியை அடுத்து நேற்றும் முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து மூன்று முறை 100 மற்றும் அதற்கும் மேல் ரன்கள் சேர்த்த முதல் இந்திய ஜோடி என்ற பெருமை இவர்களுக்கு கிடைத்தது.

* தவிர, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 127, 101, 136 மற்றும் 138 என, 4வது முறையாக, இந்த ஜோடி 100 ரன்னுக்கும் மேல் சேர்த்தது.

* ஒட்டுமொத்த ஒருநாள் அரங்கில் இந்த ஜோடி 10வது முறையாக இந்த மைல் கல்லை எட்டியது.

23



கடந்த 2010ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கோஹ்லி 'டக்' அவுட்டானார். இதன் பின் 23வது போட்டியில் இந்த அணிக்கு எதிராக கோஹ்லி 'டக்' அவுட் ஆகினார்.

92

கடந்த 1998க்குப் பின், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஜெயவர்தனா, சங்ககரா, தில்ஷன் என, மூன்று முக்கிய வீரர்கள் இல்லாமல், இலங்கை அணி பங்கேற்றது.

இடைப்பட்ட இந்த 19 ஆண்டில் நடந்த 92 போட்டிகளில், மூன்று பேரில் யாராவது ஒருவர் எப்படியும் அணியில் இடம் பெற்றிருப்பர்.

1000

ஓவல் போட்டியில் 35 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா, இலங்கைக்கு எதிராக ஒருநாள் அரங்கில் 1000 ரன்கள் எடுத்த வீரர் ஆனார். தவிர, இலங்கைக்கு எதிராக இந்த இலக்கை எட்டிய 11வது இந்திய வீரர் ஆனார் ரோகித். இதுவரை 37 போட்டியில் 1043 ரன் எடுத்துள்ளார்.

முதல் மூன்று இடங்களில் சச்சின் (84 போட்டி, 3113 ரன்), தோனி (58ல், 2086 ரன்), கோஹ்லி (41ல், 1856 ரன்) உள்ளனர்.

தோனி ரன்மழை

இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி. ஒருநாள் அரங்கில் 288 போட்டிகளில் 9338 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இலங்கைக்கு எதிராக மட்டும் 2149 ரன்கள் (58 போட்டி) எடுத்தார். அதாவது, தோனியின் ஒட்டுமொத்த ரன்களில் 22.5 சதவீதம் இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்டது.

நேற்றும் இன்று சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியிலும் அசத்திய இவர், ஒருநாள் அரங்கில் 62வது அரைசதம் அடித்தார். தவிர, இலங்கைக்கு எதிராக 19வது அரைசதமாக இது அமைந்தது.

*தவிர, இலங்கை அணிக்கு எதிராக அதிக அரைசதம் அடித்த வீரர்களில் தோனி (17) ஐந்தாவது இடம் பிடித்தார்.

முதல் நான்கு இடங்களில் சச்சின் (25, இந்தியா), சயீத் அன்வர் (20, பாக்.,), இன்சமாம் (19, பாக்.,), அசார் (18, இந்தியா) உள்ளனர்.

எல்லாம் '300'

கடைசியாக இந்திய அணி பங்கேற்ற ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், 300 ரன்னுக்கும் மேல் எடுத்தது. அதாவது இந்த ஆண்டில் விளையாடிய 5 போட்டிகளில் 356/7, 381/6, 316/9, 319/3 தற்போது 321/6 என, ரன்கள் குவித்தது.

கபுகேதரா விலகல்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் 'டக்-அவுட்டான' இலங்கை அணியின் சமரா கபுகேதரா, சமீபத்தில் 'பீல்டிங்' பயிற்சியின் போது முழங்காலில் காயமடைந்தார். இதனையடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக இடதுகை பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

150

இந்தியா, இலங்கை அணிகள் 150வது முறையாக ஒருநாள் போட்டியில் மோதின. இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில், 150 போட்டிகளில் மோதிய முதல் அணிகள் என்ற பெருமை பெற்றன. அடுத்த இரண்டு இடங்களில் இலங்கை - பாகிஸ்தான் (147 போட்டி), ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் (139 போட்டி) அணிகள் உள்ளன.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வித்தியாசத்தில் உலக சாதனை

வித்தியாசத்தில் உலக சாதனை

ஜூன் 18,2017 இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, ஐ.சி.சி., தொடரின் பைனலில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்த அணி என்ற சாதனை படைத்தது. ...
கோஹ்லி 8000 ரன்கள்

கோஹ்லி 8000 ரன்கள்

ஜூன் 15,2017 இந்திய கேப்டன் கோஹ்லி, தனது 88வது ரன்னை கடந்த போது, சர்வதேச ஒருநாள் போட்டியில் 8000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர், 183 போட்டியில் (175 இன்னிங்ஸ்) 27 சதம், 42 ...
கங்குலியை முந்தினார் தவான்

கங்குலியை முந்தினார் தவான்

ஜூன் 15,2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் கங்குலியை (665 ரன்) முந்தி, முதலிடம் பிடித்தார் ஷிகர் தவான். இவர், இதுவரை 9 போட்டியில் 680 ரன்கள் ...