Dinamalar

தவான் 1000 ரன்கள் ,  
 

தவான் 1000 ரன்கள்

கடந்த 2013 முதல் நடந்த ஐ.சி.சி., (50 ஓவர்) தொடர்களில் 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் இந்தியாவின் ஷிகர் தவான். இவர், கடந்த 2013ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி (363 ரன், 5 போட்டி), 2015ல் நடந்த 50 ஓவர் உலக கோப்பை (412 ரன், 8 போட்டி), தற்போது நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி (271 ரன், 3 போட்டி) என 1046 ரன்கள் குவித்துள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் இலங்கையின் சங்ககரா (2013ல் 222 2015ல் 541 = 763 ரன்), இந்தியாவின் ரோகித் சர்மா (2013ல் 177 2015ல் 330 2017ல் 181 = 688 ரன்) உள்ளனர்.

* தவிர, ஐ.சி.சி., (50 ஓவர்) தொடர்களில் அதிக சராசரி வைத்துள்ள வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் தவான் முதலிடம் பிடித்தார். இதுவரை 16 போட்டியில் 1046 ரன்கள் குவித்துள்ள தவானின் சராசரி 69.73. அடுத்த இடத்தில் பாகிஸ்தானின் சயீத் அன்வர் (25 போட்டி, 1204 ரன்கள், 63.36 சராசரி) உள்ளார்.

நழுவிய சதம்

சர்வதேச ஒருநாள் போட்டியில், இந்தியாவுக்கு எதிராக 5 முறை சதமடித்துள்ள தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக், ஒரு முறை கூட அரைசதத்துடன் திரும்பியதில்லை. நேற்று, முதன்முறையாக 53 ரன்னில் அவுட்டானார்.

அசத்தல் 'பீல்டிங்'

இத்தொடரில் 'பீல்டிங்கில்' அசத்தி வரும் இந்தியா, அதிகபட்சமாக 6 'ரன்-அவுட்' (3 தென் ஆப்ரிக்கா 2 இலங்கை 1 பாகிஸ்தான்) செய்துள்ளது. வேறு எந்த ஒரு அணியும் இரண்டு முறைக்கு மேல் 'ரன்-அவுட்' செய்ததில்லை.

'மிடில்-ஆர்டர்' சொதப்பல்

தென் ஆப்ரிக்க அணி, 29 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 51 ரன்கள் எடுப்பதற்குள், மீதமிருந்த 8 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 191 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.

23.3 'மெய்டன்' ஓவர்

இந்திய பவுலர்கள் வீசிய 44.3 ஓவரில், 141 பந்தில் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் ஒரு ரன் கூட எடுக்கவில்லை ('டாட் பால்'). இது, 23.3 'மெய்டன்' ஓவர்களுக்கு சமம்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வித்தியாசத்தில் உலக சாதனை

வித்தியாசத்தில் உலக சாதனை

ஜூன் 18,2017 இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, ஐ.சி.சி., தொடரின் பைனலில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்த அணி என்ற சாதனை படைத்தது. ...
கோஹ்லி 8000 ரன்கள்

கோஹ்லி 8000 ரன்கள்

ஜூன் 15,2017 இந்திய கேப்டன் கோஹ்லி, தனது 88வது ரன்னை கடந்த போது, சர்வதேச ஒருநாள் போட்டியில் 8000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர், 183 போட்டியில் (175 இன்னிங்ஸ்) 27 சதம், 42 ...
கங்குலியை முந்தினார் தவான்

கங்குலியை முந்தினார் தவான்

ஜூன் 15,2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் கங்குலியை (665 ரன்) முந்தி, முதலிடம் பிடித்தார் ஷிகர் தவான். இவர், இதுவரை 9 போட்டியில் 680 ரன்கள் ...