Dinamalar

புண்படுமே...மனம் புண்படுமே! * இது கோஹ்லி ‘பார்முலா’ ,  
 

புண்படுமே...மனம் புண்படுமே! * இது கோஹ்லி ‘பார்முலா’

லண்டன்: ''கேப்டனாக நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமானால் சில நேரங்களில் சக வீரர்களின் மனம் புண்படும் வகையில் பேச நேரிடும்,''என, விராத் கோஹ்லி தெரிவித்தார்.

இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வென்ற இந்தியா, இலங்கைக்கு எதிராக தோல்வி அடைந்தது. இதனால் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

முதலில் 'பேட்டிங்' செய்த தென் ஆப்ரிக்கா, 44.3 ஓவரில் 191 ரன்னுக்கு சுருண்டது. சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தவான் (78), கேப்டன் கோஹ்லி (76*) கைகொடுக்க, 38 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்திய அணி 5வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறியது: பொதுவாக ஒரு அணியின் கேப்டன் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். சக வீரர்களின் மனம் புண்படும் என்று தெரிந்தால் கூட, அணியின் நலன் கருதி கடுமையாக பேசியாக வேண்டும். இதனை நான் முழுமையாக நம்புகிறேன். நான் உட்பட, அணி வீரர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். தவறுகளை ஏற்றுக் கொண்டு, அதனை திருத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இதற்காகத்தான், கோடிக்கணக்கான மக்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறோம். நாட்டுக்காக இதனை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

ஒரே தவறை திரும்பத் திரும்ப செய்ய முடியாது. இது, இரண்டு அல்லது மூன்று வீரர்களுக்காக மட்டும் கூறவில்லை. அணியில் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் பொருந்தும். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கிடைத்த வெற்றி, அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்தது.

ஒரு அணியின் கேப்டன், சகவீரர்களின் தவறை கண்டறிந்து அவர்களிடம் தெரிவிக்கும் போது, எப்படி பேச வேண்டும், அவர்களை எப்படி அணுக வேண்டும், அவர்களிடம் எவ்வாறு ஆலோசிக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அனைவரும் சர்வதேச போட்டியில் விளையாடுபவர்கள். நெருக்கடியான நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். ஒருசில விஷயங்களை மட்டும் தெளிவுபடுத்தி ஊக்கப்படுத்தினால் போதும்.

கேப்டன் என்ற முறையில், நான் அமைதியாக இருக்கிறேன், எனக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை என கூறமாட்டேன். இலங்கைக்கு எதிரான தோல்வியால் வந்த நெருக்கடியின் போது, சகவீரர்கள் ஒத்துழைப்பு தந்ததால், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றிப் பாதைக்கு திரும்ப முடிந்தது.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக பவுலர்கள் வெற்றி தேடித்தந்தனர். இப்போட்டிக்கான திட்டங்களை சரியாக செயல்படுத்தினர். இதுபோன்ற சிறப்பான பந்துவீச்சு அடுத்து வரும் போட்டிகளிலும் தொடரும் என நம்புகிறேன்.

இவ்வாறு கோஹ்லி கூறினார்.



ஏமாற்றம்

தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் கூறுகையில், ''சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது ஏமாற்றம். கேப்டன் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை. ஏனெனில் நான் சிறந்த கேப்டன். வரும் 2019ல் தென் ஆப்ரிக்காவுக்கு உலக கோப்பை வென்று தருவதே இலக்கு,'' என்றார்.



டுபிளசி ஒப்புதல்

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், டேவிட் மில்லர் 'ரன்-அவுட்' ஆனார்கள். இது போட்டியில் திருப்பம் ஏற்படுத்தியது. இந்த இரண்டு விக்கெட்டுகளுக்கும், மறுமுனையில் இருந்த டுபிளசி தான் காரணம். இதுகுறித்து டுபிளசி கூறுகையில், ''இந்தியாவுக்கு எதிராக டிவிலியர்ஸ், டேவிட் மில்லர் 'ரன்-அவுட்' ஆனது, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் என நம்புகிறேன்,'' என்றார்.



பும்ரா மகிழ்ச்சி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 'டெத்' ஓவர்களில் அசத்திய இந்தியாவின் பும்ரா, ஆட்டநாயகன் விருது வென்றார். இதுகுறித்து பும்ரா கூறுகையில், ''என் மீது நம்பிக்கை வைத்துள்ள கேப்டன் கோஹ்லி, நான் விரும்பும் படி பந்துவீச அனுமதிக்கிறார். இதனால் நெருக்கடியின்றி பவுலிங் செய்ய முடிகிறது. இந்த சுதந்திரம், என்னைப் போன்ற இளம் பவுலர்கள் சிறப்பாக செயல்பட ஊக்கமாக அமைகிறது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஆட்டநாயகன் விருது வென்றது மகிழ்ச்சி. இதற்கு சக பவுலர்களின் ஒத்துழைப்பும் காரணம்,'' என்றார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
‘சாரி’ கேட்ட டிவிலியர்ஸ்

‘சாரி’ கேட்ட டிவிலியர்ஸ்

ஜூன் 14,2017 பர்மிங்காம்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியதால், ரசிகர்களிடம் தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் மன்னிப்பு கேட்டார். இங்கிலாந்து மற்றும் ...
 பைனலில் மோதுவது யார் * கோஹ்லி விருப்பம் என்ன

பைனலில் மோதுவது யார் * கோஹ்லி விருப்பம் என்ன

ஜூன் 13,2017 லண்டன்: 'சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோத வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புகின்றனர்,'' என, கேப்டன் கோஹ்லி ...
 ‘ராஜாதி ராஜன்’ இந்த யுவராஜ் * கேப்டன் கோஹ்லி புகழாரம்

‘ராஜாதி ராஜன்’ இந்த யுவராஜ் * கேப்டன் கோஹ்லி புகழாரம்

ஜூன் 05,2017 பர்மிங்காம்: ''பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரன் மழை பொழிந்த யுவராஜ் சிங், ஆட்டத்தின் போக்கை மாற்றினார்,'' என, கேப்டன் விராத் கோஹ்லி ...