Dinamalar

சபாஷ் கேப்டன் சர்பராஸ்! *அரையிறுதியில் பாகிஸ்தான் அணி * கோட்டைவிட்டது இலங்கை ,  
 

 சபாஷ் கேப்டன் சர்பராஸ்! *அரையிறுதியில் பாகிஸ்தான் அணி * கோட்டைவிட்டது இலங்கை

கார்டிப்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியது. மனம் தளராமல் போராடிய கேப்டன் சர்பராஸ் அகமது, அரைசதம் கடந்து வெற்றிக்கு கைகொடுத்தார். சுலப 'கேட்ச்' வாய்ப்புகளை கோட்டை விட்ட இலங்கை அணி, தொடரில் இருந்து வெளியேறியது.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி ('மினி' உலக கோப்பை) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, வங்கதேச அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.

நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் ('பி' பிரிவு) பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் கான், பீல்டிங் தேர்வு செய்தார்.

டிக்வெல்லா ஆறுதல்:

இலங்கை அணிக்கு டிக்வெல்லா, குணதிலகா (13) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. மெண்டிஸ் (27), சண்டிமால் (0) ஏமாற்ற, கேப்டன் மாத்யூசை (39), முகமது ஆமிர் போல்டாக்கினார். டிசில்வா, திசரா பெரேரா தலா 1 ரன் எடுத்தனர்.

அரைசதம் அடித்த டிக்வெல்லா (73), முகமது ஆமிரிடம் வீழ்ந்தார். பின் வரிசையில் லக்மல் (26), குணரத்னே (27) சற்று உதவினர். இலங்கை அணி 49.2 ஓவரில் 236 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் ஜுனைடு கான் 3, ஹசன் அலி 3, முகமது ஆமிர் 2, பகிம் அஷ்ரப் 2 விக்கெட் கைப்பற்றினர்.

'சூப்பர்' துவக்கம்:

எளிய இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணிக்கு அசார் அலி, பகர் ஜமான் ஜோடி 'சூப்பர்' துவக்கம் கொடுத்தது. மலிங்கா ஓவரில் 3 பவுண்டரி அடித்த ஜமான், பெரேரா பந்தில் அடித்த சிக்சர், மைதானத்துக்கு வெளியே சென்றது.

குணரத்னே பந்தில் பவுண்டரி அடித்த ஜமான், 34 வது பந்தில், தனது முதல் அரைசதம் எட்டினார். இவர் 50 ரன்னுக்கு அவுட்டானார். பாபர் (10), ஹபீஸ் (1) அணியை கைவிட்டனர். அசார் அலி 34 ரன் எடுத்தார். சோயப் மாலிக் (11), இமாத் வாசிம் (4), அஷ்ரப் (15) அடுத்தடுத்து அவுட்டாக, பாகிஸ்தான் 162/7 என, திணறியது.

பறிபோன வாய்ப்பு:

பின் சர்பராஸ், ஆமிர் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பினர். 38, 40 ரன்னில் சர்பராஸ் கொடுத்த 'கேட்ச்சை' பெரேரா, குணதிலகா கோட்டைவிட, இலங்கை அணியின் வெற்றியும் கை நழுவியது.

சர்பராஸ் அரைசதம் அடிக்க, பாகிஸ்தான் அணி 44.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 8வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த சர்பராஸ் (61), ஆமிர் (28) ஜோடி அவுட்டாகாமல் இருந்தது.



இங்கிலாந்துடன் மோதல்

நாளை நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

* வரும் 15ல் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

ஜூன் 19,2017 லண்டன்: இப்படி ஒரு 'மெகா' தோல்வியை இந்திய ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவர்களது இடிந்து போன இதயங்களை ஓவல் மைதான காட்சிகள் படம் பிடித்து காட்டின. தோல்வி ...
எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

ஜூன் 18,2017 ஓவல்: சாம்பியன்ஸ் டிராபி பைனல் இந்திய அணிக்கு மிக மோசமானதாக அமைந்தது. 'டாஸ்' வென்று தவறாக பவுலிங் தேர்வு செய்தது முதல் கடைசி வரை எதுவுமே சரியாக அமையவில்லை. ...
அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

ஜூன் 18,2017 பைனல் போன்ற பதட்டமான போட்டிகளில் 'டாஸ்' வென்று 'பேட்' செய்வது தான் பாதுகாப்பானது. இதனை 2003ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த உலக கோப்பை பைனலில் அப்போதைய இந்திய கேப்டன் ...