Dinamalar

கங்குலியிடம் தோற்ற வார்ன் ,  
 

 கங்குலியிடம் தோற்ற வார்ன்

லண்டன்: கங்குலியிடம் பந்தயத்தில் தோற்ற வார்ன், ஒருநாள் முழுவதும் இங்கிலாந்து அணியின் 'ஜெர்சியை' அணியவுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா வென்றால் அரையிறுதிக்கு செல்லும் நிலை இருந்தது.

இப்போட்டி குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி. ஆஸ்திரேலிய 'சுழல்' ஜாம்பவான் வார்ன் இடையே 'பெட்டிங்' நடந்தது. ஆஸ்திரேலியா தோற்கும் என, கங்குலியும், இல்கிலாந்து தோற்கும் என, வார்னும் பந்தயம் கட்டினர்.

தோற்பவர், மற்றவருக்கு 'டின்னர்' வாங்கித் தரவேண்டும், தவிர, எதிரணியின் 'ஜெர்சியை' நாள் முழுவதும் அணிய வேண்டும் என்பது விதி. பின் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேற, கங்குலியின் கணிப்பு சரியானது.

இதனால், ஒருநாள் முழுவதும் இங்கிலாந்து அணியின் 'ஜெர்சி' அணியவுள்ளார் வார்ன். இதுகுறித்து அவர் வெ ளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில்,' பந்தயத்தில் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள். தற்போது இங்கிலாந்து அணியின் 'ஜெர்சியை' தேடிக் கொண்டுள்ளேன். நாள் முழுவதும் அணிய வேண்டும் அல்லவா,' என, தெரிவித்துள்ளார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
ஹாக்கி மைதானத்தில் கிரிக்கெட்

ஹாக்கி மைதானத்தில் கிரிக்கெட்

ஜூன் 17,2017 புதுடில்லி: டில்லி தயான்சந்த் ஹாக்கி மைதானத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி பைனல் ராட்சத ஸ்கிரீனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ...
கங்குலியின் காரை தாக்கிய பாக்., ரசிகர்கள்

கங்குலியின் காரை தாக்கிய பாக்., ரசிகர்கள்

ஜூன் 17,2017 லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் பைனலுக்கு முன்னேறிய போது, இந்திய வீரர் கங்குலியின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்திய விஷயம் தற்போது ...
இங்கிலாந்து ‘ஜெர்சியுடன்’ வார்ன்

இங்கிலாந்து ‘ஜெர்சியுடன்’ வார்ன்

ஜூன் 15,2017 லண்டன்: கங்குலியிடம் பந்தயத்தில் தோற்ற வார்ன், ஒருநாள் முழுவதும் இங்கிலாந்து அணியின் 'ஜெர்சி' அணிந்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து, ...