Dinamalar

யுவராஜ் சிங் ‘300’ ,  
 

 யுவராஜ் சிங் ‘300’

லண்டன்: யுவராஜ் சிங் 300வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார்.

இந்திய அணி வீரர் யுவராஜ் சிங், 35. கடந்த 2000ல் நடந்த ஐ.சி.சி., 'நாக் அவுட்' தொடரில் (சாம்பியன்ஸ் டிராபி), கென்யாவுக்கு எதிராக அறிமுகம் ஆனார். இத்தொடரில் இந்திய அணி பைனலுக்கு சென்றது. தொடர்ந்து 2003ல் நடந்த உலக கோப்பை, 2002 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் யுவராஜ் இடம் பெற்ற இந்திய அணி பைனலுக்கு சென்றது.

2007ல் 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் கோப்பை வெல்ல கைகொடுத்தார். 2011ல் 'ஆல் ரவுண்டராக' அசத்திய இவர், 'தொடர் நாயகன்' ஆக (362 ரன், 15 விக்.,), இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பை வென்றது.

தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அரைசதம் அடித்து உதவினார். இதனிடையே, நாளை வங்கதேசத்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டி, யுவராஜ் சிங்கின் 300வது ஒருநாள் போட்டியாக அமைகிறது.

ஐந்தாவது வீரர்:

இந்திய அளவில் சச்சின் (463 போட்டி), டிராவிட் (340), அசார் (334), கங்குலியை (311) அடுத்து, இந்த மைல்கல்லை எட்டும் ஐந்தாவது வீரர் என்ற பெருமை பெறுகிறார் யுவராஜ் சிங். ஒட்டுமொத்த அளவில் 19வது வீரராகிறார். இவருக்கு அடுத்து தோனி (289 போட்டி) உள்ளார். விரைவில் இவரும் 300 என்ற இலக்கை விரைவில் எட்டுவார் எனத் தெரிகிறது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

ஜூன் 19,2017 லண்டன்: இப்படி ஒரு 'மெகா' தோல்வியை இந்திய ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவர்களது இடிந்து போன இதயங்களை ஓவல் மைதான காட்சிகள் படம் பிடித்து காட்டின. தோல்வி ...
எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

ஜூன் 18,2017 ஓவல்: சாம்பியன்ஸ் டிராபி பைனல் இந்திய அணிக்கு மிக மோசமானதாக அமைந்தது. 'டாஸ்' வென்று தவறாக பவுலிங் தேர்வு செய்தது முதல் கடைசி வரை எதுவுமே சரியாக அமையவில்லை. ...
அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

ஜூன் 18,2017 பைனல் போன்ற பதட்டமான போட்டிகளில் 'டாஸ்' வென்று 'பேட்' செய்வது தான் பாதுகாப்பானது. இதனை 2003ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த உலக கோப்பை பைனலில் அப்போதைய இந்திய கேப்டன் ...