Dinamalar

வாழ்த்து மழையில் இந்தியா ,  
 

வாழ்த்து மழையில் இந்தியா

பர்மிங்காம்: சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு முன்னேறிய இந்திய அணிக்கு 'டுவிட்டரில்' வாழ்த்து மழை குவிகிறது.

இங்கிலாந்தில், 8வது ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பர்மிங்காமில் நடந்த அரையிறுதியில் இந்திய அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி, 4வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. இதற்கு சச்சின், சேவக் உள்ளிட்ட முன்னாள் இந்திய வீரர்கள் சிலர், தங்களது 'டுவிட்டர்' சமூகவலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சச்சின்: சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது, பெருமையாக உள்ளது. கேப்டன் கோஹ்லி, ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தினர். பாகிஸ்தானுக்கு எதிரான பைனலில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்.

சேவக்: சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு முன்னேறியது, இந்திய வீரர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலன்.

ஹர்பஜன் சிங்: பச்சை நிற ஜெர்சி அணிந்த அணிகளுக்கு எதிராக (பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம்) 'ஹாட்ரிக்' வெற்றி கண்ட இந்தியா, பைனலுக்கு முன்னேறியது. இந்த வெற்றிநடை ஓவல் மைதானத்திலும் தொடரும் என நம்புகிறேன்.

முகமது கைப்: பத்து ஆண்டுகளுக்கு முன், 'டுவென்டி-20' உலக கோப்பை பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. தற்போது மீண்டும் இவ்விரு அணிகள் ஐ.சி.சி., தொடரின் பைனலில் மோத இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

லட்சுமண்: இது வெற்றியல்ல, வரலாறு. இந்திய வீரர்களின் செயல்பாடு மெய்சிலிர்க்க வைத்தது. பைனலில் அசத்த வாழ்த்துகிறேன்.

ஷிகர் தவான்: தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது மகிழ்ச்சி. வரும் 18ம் தேதி வரை என்னால் காத்திருக்க முடியாது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

ஜூன் 19,2017 லண்டன்: இப்படி ஒரு 'மெகா' தோல்வியை இந்திய ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவர்களது இடிந்து போன இதயங்களை ஓவல் மைதான காட்சிகள் படம் பிடித்து காட்டின. தோல்வி ...
எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

ஜூன் 18,2017 ஓவல்: சாம்பியன்ஸ் டிராபி பைனல் இந்திய அணிக்கு மிக மோசமானதாக அமைந்தது. 'டாஸ்' வென்று தவறாக பவுலிங் தேர்வு செய்தது முதல் கடைசி வரை எதுவுமே சரியாக அமையவில்லை. ...
அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

ஜூன் 18,2017 பைனல் போன்ற பதட்டமான போட்டிகளில் 'டாஸ்' வென்று 'பேட்' செய்வது தான் பாதுகாப்பானது. இதனை 2003ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த உலக கோப்பை பைனலில் அப்போதைய இந்திய கேப்டன் ...