Dinamalar

ஹாக்கி மைதானத்தில் கிரிக்கெட் ,  
 

ஹாக்கி மைதானத்தில் கிரிக்கெட்

புதுடில்லி: டில்லி தயான்சந்த் ஹாக்கி மைதானத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி பைனல் ராட்சத ஸ்கிரீனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இங்கிலாந்தின் லண்டன், ஓவல் மைதானத்தில் இன்று நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மதியம் 3:00 மணிக்கு போட்டி துவங்குகிறது. இந்த இடத்துக்கு அருகில் உள்ள மைதானத்தில், உலக ஹாக்கி லீக் அரையிறுதி, லீக் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இப்போட்டி மாலை 6:30 மணிக்கு துவங்குகிறது. இந்நிலையில் அரசு சார்பில், தேசிய விளையாட்டான ஹாக்கியை புறக்கணித்து விட்டு, கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை தரவுள்ளனர்.

அதுவும், இந்திய 'ஜாம்பவான்' தயான்சந்த் பெயரிலான ஹாக்கி மைதானத்தில், ராட்சத 'ஸ்கிரீனில்' சாம்பியன்ஸ் டிராபி பைனல் நேரடி ஒ ளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஹாக்கிக்கு தரப்படவில்லை என, பலரும் வருத்தம் தெரிவித்தனர்.

இதுகுறித்து தயான்சந்த் மகன் அசோக் குமார் கூறுகையில்,'' எனது அப்பா பெயரிலான இம்மைதானத்தில், கிரிக்கெட்டை ஒ ளிபரப்புகின்றனர். அரசு ஹாக்கிக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறது என, இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஏதை ஏற்றுக் கொள்ள முடியாது,'' என்றார்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
கங்குலியின் காரை தாக்கிய பாக்., ரசிகர்கள்

கங்குலியின் காரை தாக்கிய பாக்., ரசிகர்கள்

ஜூன் 17,2017 லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் பைனலுக்கு முன்னேறிய போது, இந்திய வீரர் கங்குலியின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்திய விஷயம் தற்போது ...
இங்கிலாந்து ‘ஜெர்சியுடன்’ வார்ன்

இங்கிலாந்து ‘ஜெர்சியுடன்’ வார்ன்

ஜூன் 15,2017 லண்டன்: கங்குலியிடம் பந்தயத்தில் தோற்ற வார்ன், ஒருநாள் முழுவதும் இங்கிலாந்து அணியின் 'ஜெர்சி' அணிந்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து, ...
 கங்குலியிடம் தோற்ற வார்ன்

கங்குலியிடம் தோற்ற வார்ன்

ஜூன் 13,2017 லண்டன்: கங்குலியிடம் பந்தயத்தில் தோற்ற வார்ன், ஒருநாள் முழுவதும் இங்கிலாந்து அணியின் 'ஜெர்சியை' அணியவுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் ...