Dinamalar

மறக்க முடியாத சென்னை: உற்சாகத்தில் முரளி விஜய் ,  
 

மறக்க முடியாத சென்னை: உற்சாகத்தில் முரளி விஜய்

சென்னை: ''ஐ.பி.எல்., தொடரில், சொந்த வீடான சென்னை அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி தருகிறது,'' என, முரளி விஜய் தெரிவித்தார்.

ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடரின் 11வது சீசன் வரும் ஏப்., 7ல் மும்பையில் துவங்குகிறது. இரு ஆண்டு தடைக்குப் பின், தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கும் சென்னை அணி, முதல் போட்டியில் மும்பையை அதன் சொந்தமண்ணில் சந்திக்கவுள்ளது.

இதனிடையே, சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், முரளி விஜய் கூறியது:

வீரர்கள் ஏலத்தில் முதல் நாள் யாரும் என்னை வாங்கவில்லை. இதையடுத்து, பலர் என்னை தொடர்பு கொண்டு விசாரித்தனர். நல்லவேளையாக இரண்டாவது நாளில், சென்னை அணியால் தேர்வு செய்யப்பட்டேன். 2009-13க்குப் பின், மீண்டும் இங்கு வந்தது, எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. உண்மையில் இது என் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

'டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்க தயாராக உள்ளேன். வரும் தொடரில் நன்கு திறமை வெளிப்படுத்தி, நமது அணியை வெற்றி பெறச் செய்வது, கூடுதல் உற்சாகம் தரும்.

மறக்க முடியுமா

சென்னை அணியுடன், எனக்கு மறக்க முடியாத பல நினைவுகள் உள்ளன. மும்பை அணியை அதன் சொந்தமண்ணில் வீழ்த்தியது என்றும் நினைவில் நிற்கும். இதுபோன்று, இந்த ஆண்டும் பல நினைவுகளை ஏற்படுத்த விரும்புகிறேன். இதனால், மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியை பெரிதும், எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

எங்கள் நிர்வாகத்தின் செயல்கள் ஒவ்வொன்றும், வீரர்கள் மற்றும் அணியின் நலனுக்காகவே இருக்கும். உள்ளூர், அன்னிய வீரர்களை ஒருங்கிணைந்து, சிறப்பாக செயல்படுவர். இதை இந்த ஆண்டும் தொடர விரும்புகிறோம்.

ஒப்பிட முடியாது

சொந்தமண்ணில் நமது சென்னை அணிக்காக விளையாடவுள்ளது பெருமையாக உள்ளது. சென்னை அணியை மற்ற அணிகளுடன் ஒப்பிடுவது மிகவும் கடினம். ஏனெனில், இங்கு உள்ளூர், அன்னிய வீரர்கள் இணைந்து ஒரு குடும்பத்தினர் போல செயல்படுவர். இது போன்ற அனுபவங்களை மற்ற அணிகளில் கண்டது இல்லை. இம்முறையும் இணைந்து சாதிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு முரளி விஜய் கூறினார்.

தாய் வீடு

'ஆல் ரவுண்டர்' பிராவோ கூறுகையில்,'' ஏலத்தின் போது ஆஸ்திரேலியாவில் இருந்தேன். கடந்த இரு ஆண்டுகளாக சென்னை அணி இல்லாத நிலையில், மீண்டும் நமது அணியில் இடம் பெற வேண்டும் என, பிரார்த்தனை செய்தேன். ஒருவழியாக சென்னைக்கு தேர்வானது, தாய் வீட்டுக்கு வந்தது போல உள்ளது. உலகின் சிறந்த கேப்டன் தோனி, சென்னையை வழி நடத்துகிறார். வாட்சன், ஜடேஜா என, பல 'சீனியர்கள்' அணியில் இருப்பதால், எனக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை, '' என்றார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
நெஞ்சம் எல்லாம் தோனி

நெஞ்சம் எல்லாம் தோனி

ஏப்ரல் 18,2018 கவாஸ்கர்: ஐ.பி.எல்., போட்டிகளில் அதிரடி துவக்கம் கிடைத்து விட்டால், 200 ரன்களை எளிதாக எட்ட முடிகிறது. பின் 'மெகா' இலக்கை சேஸ் செய்யும் அணிகளுக்கு தான் திண்டாட்டம். ...
மனம் தளராத தோனி

மனம் தளராத தோனி

ஏப்ரல் 18,2018 பொதுவாக 30 பந்தில் 76 ரன்கள் எடுப்பது, 'டுவென்டி-20' போட்டியிலும் அதிசயம் தான். இது முடியாத விஷயம் எனத் தெரிந்தாலும், 'முயன்றால் முடியாதது இல்லை' என்ற பழமொழிக்கு ஏற்ப, ...
கவனம் கவர வாய்ப்பு

கவனம் கவர வாய்ப்பு

ஏப்ரல் 18,2018 சஞ்சு சாம்சன் 'ஸ்பெஷல்' திறமை படைத்த இளம் வீரர். தான் ஒரு விக்கெட் கீப்பர் என்பது மட்டுமன்றி, பேட்டிங்கிலும் சாதித்து, தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார். ...