Dinamalar

கெய்ல் 'புயல்' ,  
 

கெய்ல் 'புயல்'

கடந்த 2013ல் புனே அணிக்கு எதிராக பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல், 175 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., தொடரில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அடுத்த இரண்டு இடங்களில் கோல்கட்டாவுக்காக விளையாடிய பிரண்டன் மெக்கலம் (158* ரன், எதிர்-பெங்களூரு, 2008, இடம்-பெங்களூரு), பெங்களூருவின் டிவிலியர்ஸ் (133* ரன், எதிர்-மும்பை, 2015, இடம்-மும்பை) உள்ளனர்.

சிக்சர் மன்னர்கள்

ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் முன்னிலை வகிக்கிறார். இவர், 92 போட்டியில் 251 சிக்சர் அடித்துள்ளார். இவரை அடுத்து மும்பையின் ரோகித் சர்மா (163 சிக்சர்), குஜராத் அணியின் ரெய்னா (160), பெங்களூருவின் கோஹ்லி (148) ஆகியோர் அதிக சிக்சர் விளாசினர்.

சதங்களின் நாயகன்

பிரிமியர் தொடரில் இதுவரை 42 சதமடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ல் பெங்களூருவுக்கு எதிராக கோல்கட்டாவின் பிரண்டன் மெக்கலம் (158*) முதல் சதத்தை பதிவு செய்தார். * அதிகபட்சமாக பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் 5, கோஹ்லி 4, டிவிலியர்ஸ் 3 சதம் அடித்துள்ளனர்.

* பிரண்டன் மெக்கலம், கில்கிறிஸ்ட், டேவிட் வார்னர், சேவக், வாட்சன், முரளி விஜய் தலா 2 சதம் அடித்தனர்.

* மைக்கேல் ஹசி, சைமண்ட்ஸ், ஜெயசூர்யா, ஷான் மார்ஷ், மணிஷ் பாண்டே, யூசுப் பதான், மகிளா ஜெயவர்தனா, பால் வால்தாட்டி, சச்சின், ரகானே, கெவின் பீட்டர்சன், ரோகித் சர்மா, ரெய்னா, டேவிட் மில்லர், சிம்மன்ஸ், சகா, குயின்டன் டி காக், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்துள்ளனர்.

கெய்ல் 'புயல்'

ஐ.பி.எல்., அரங்கில், அதிவேக சதமடித்த வீரர்கள் வரிசையில் பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். இவர், 2013ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 30 பந்தில் சதமடித்தார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
'ஹாட்ரிக்' சாதனை

'ஹாட்ரிக்' சாதனை

ஏப்ரல் 05,2017 ஐ.பி.எல்., அரங்கில், இதுவரை 14 முறை 'ஹாட்ரிக்' சாதனை படைக்கப்பட்டுள்ளன. இதில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக மூன்று முறை இச்சாதனை படைத்தார். யுவராஜ் சிங் 2, பாலாஜி, நிடினி, ...
மலிங்கா அசத்தல்

மலிங்கா அசத்தல்

ஏப்ரல் 05,2017 ஐ.பி.எல்., தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில், மும்பை அணியின் லசித் மலிங்கா முன்னிலை வகிக்கிறார். இவர், 98 போட்டியில் 143 விக்கெட் வீழ்த்தினார். இவரை ...
இதுவரை சாம்பியன்கள்

இதுவரை சாம்பியன்கள்

ஏப்ரல் 05,2017 ஐ.பி.எல்., அரங்கில், சென்னை (2010, 2011), கோல்கட்டா (2012, 2014), மும்பை (2013, 2015) அணிகள் அதிகபட்சமாக தலா 2 முறை கோப்பை வென்றன. ராஜஸ்தான் (2008), டெக்கான் (2009), ஐதராபாத் (2016) அணிகள் தலா ஒரு முறை ...