Dinamalar

இதுவரை சாம்பியன்கள் ,  
 

இதுவரை சாம்பியன்கள்

ஐ.பி.எல்., அரங்கில், சென்னை (2010, 2011), கோல்கட்டா (2012, 2014), மும்பை (2013, 2015) அணிகள் அதிகபட்சமாக தலா 2 முறை கோப்பை வென்றன. ராஜஸ்தான் (2008), டெக்கான் (2009), ஐதராபாத் (2016) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

மும்பை ஆதிக்கம்

ஐ.பி.எல்., தொடரில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில், மும்பை அணி முன்னிலை வகிக்கிறது. இதுவரை 140 போட்டிகளில் 80 வெற்றி, 60 தோல்வியை பெற்றுள்ளது. இதனையடுத்து பெங்களூரு (140 போட்டி, 69 வெற்றி, 66 தோல்வி, 2 'டை', 3 முடிவு இல்லை), கோல்கட்டா (132 போட்டி, 61 வெற்றி, 71 தோல்வி, 2 'டை') அணிகள் உள்ளன.

* சென்னை (79 வெற்றி), ராஜஸ்தான் (61) அணிகளுக்கு 2 ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

* பல்வேறு காரணங்களுக்காக டெக்கான் (29 வெற்றி), புனே வாரியர்ஸ் (12), கொச்சி (6) அணிகள் நீக்கப்பட்டன.

263 ரன்கள்

ஐ.பி.எல்., தொடர் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த அணிகளுக்கான பட்டியலில் பெங்களூரு அணி முன்னிலை வகிக்கிறது. கடந்த 2013ல் பெங்களூருவில் நடந்த புனே அணிக்கு எதிரான லீக் போட்டியில் 263 ரன்கள் குவித்தது.

அடுத்த இரண்டு இடங்களில் பெங்களூரு (248 ரன், எதிர்-குஜராத், 2016, இடம்: பெங்களூரு), சென்னை (246 ரன், எதிர்-ராஜஸ்தான், 2010, இடம்: சென்னை மற்றும் 240 ரன், எதிர்-பஞ்சாப், 2008, இடம்: மொகாலி) அணிகள் உள்ளன.

58 ரன்கள்

கடந்த 2009ல் கேப்டவுனில் நடந்த பெங்களூருவுக்கு எதிரான லீக் போட்டியில் 58 ரன்னுக்கு சுருண்ட ராஜஸ்தான் அணி, ஐ.பி.எல்., தொடரில் ஒரு இன்னிங்சில் குறைந்த ஸ்கோரை பெற்ற அணிகள் வரிசையில் முதலிடத்தை பிடித்தது. அடுத்த இரண்டு இடங்களில் கோல்கட்டா (67 ரன், எதிர்-மும்பை, 2008, இடம்-மும்பை), பெங்களூரு (70 ரன், எதிர்-ராஜஸ்தான், 2014, இடம்-அபுதாபி) அணிகள் உள்ளன.

32 அரைசதம்

அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் முன்னிலை வகிக்கிறார். இவர், 100 போட்டியில் 32 அரைசதம் அடித்துள்ளார். இவரை அடுத்து கோல்கட்டா அணியின் காம்பிர் (31 அரைசதம்), மும்பையின் ரோகித் சர்மா (29), குஜராத் அணியின் ரெய்னா (28) உள்ளனர்.

'டக்-அவுட்' சோகம்

அதிக முறை 'டக்-அவுட்'டான வீரர்கள் வரிசையில், மும்பையின் ஹர்பஜன் சிங், கோல்கட்டாவின் காம்பிர் முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் இருவரும் தலா 12 முறை ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டாகினர்.

அடுத்த நான்கு இடங்களில் பியுஸ் சாவ்லா (11), மணிஷ் பாண்டே (11), அமித் மிஸ்ரா (10), பார்த்திவ் படேல் (10) உள்ளனர்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
'ஹாட்ரிக்' சாதனை

'ஹாட்ரிக்' சாதனை

ஏப்ரல் 05,2017 ஐ.பி.எல்., அரங்கில், இதுவரை 14 முறை 'ஹாட்ரிக்' சாதனை படைக்கப்பட்டுள்ளன. இதில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக மூன்று முறை இச்சாதனை படைத்தார். யுவராஜ் சிங் 2, பாலாஜி, நிடினி, ...
மலிங்கா அசத்தல்

மலிங்கா அசத்தல்

ஏப்ரல் 05,2017 ஐ.பி.எல்., தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில், மும்பை அணியின் லசித் மலிங்கா முன்னிலை வகிக்கிறார். இவர், 98 போட்டியில் 143 விக்கெட் வீழ்த்தினார். இவரை ...
சபாஷ் கேப்டன்

சபாஷ் கேப்டன்

ஏப்ரல் 05,2017 ஐ.பி.எல்., அரங்கில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த பெருமையை சென்னை, புனே அணிகளுக்காக விளையாடிய தோனி தன்வசப்படுத்தியுள்ளார். இவர், 143 போட்டிக்கு (83 வெற்றி, 59 தோல்வி, ...