Dinamalar

'ஹாட்ரிக்' சாதனை ,  
 

'ஹாட்ரிக்' சாதனை

ஐ.பி.எல்., அரங்கில், இதுவரை 14 முறை 'ஹாட்ரிக்' சாதனை படைக்கப்பட்டுள்ளன. இதில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக மூன்று முறை இச்சாதனை படைத்தார். யுவராஜ் சிங் 2, பாலாஜி, நிடினி, ரோகித் சர்மா, பிரவீண் குமார், அஜித் சண்டிலா, சுனில் நரைன், பிரவீண் தாம்பே, ஷேன் வாட்சன், அக்சர் படேல் தலா ஒரு முறை இச்சாதனை நிகழ்த்தினர்.

தொடர் நாயகன்

ஐ.பி.எல்., அரங்கில் அதிகமுறை சிறந்த வீரருக்கான தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் வாட்சன் முன்னிலை வகிக்கிறார். இவர், கடந்த 2008, 2013ல் இவ்விருதை வென்றார். கில்கிறிஸ்ட் (2009), சச்சின் (2010), கெய்ல் (2011), சுனில் நரைன் (2012), மேக்ஸ்வெல் (2014), ஆன்ட்ரி ரசல் (2015), விராத் கோஹ்லி (2016) ஆகியோர் தலா ஒரு முறை இவ்விருதை கைப்பற்றினர்.

பைனல் 'ஹீரோ'

யூசுப் பதான் (2008), கும்ளே (2009), ரெய்னா (2010), முரளி விஜய் (2011), மன்விந்தர் பிஸ்லா (2012), போலார்டு (2013), மணிஷ் பாண்டே (2014), ரோகித் சர்மா (2015), பென் கட்டிங் (2016) ஆகியோர் ஐ.பி.எல்., தொடரின் பைனலில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருது வென்றனர்.

'டை'

ஐ.பி.எல்., அரங்கில் இதுவரை 5 போட்டிகள் 'டை' ஆனது. கடந்த 2009ல் கேப்டவுனில் நடந்த கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டி முதன்முறையாக 'டை-' ஆனது. பின், 'சூப்பர் ஓவர்' முறையில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

மோசமான துவக்கம்

ஐ.பி.எல்., தொடரில், ஒரு இன்னிங்சில், ஒரு அணியின் துவக்க வீரர்கள் இருவரும் 'டக்-அவுட்டான' சோகம் 7 முறை அரங்கேறியுள்ளது. முதன்முறையாக கடந்த 2008ல் ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் துவக்க வீரர்களான பார்த்திவ் படேல், ஸ்டீபன் பிளமிங் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டாகினர். கடைசியாக, 2014ல் துபாயில் நடந்த டில்லி அணிக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணியின் காலிஸ், காம்பிர் ஜோடி 'டக்-அவுட்டாகி' ஏமாற்றியது.

'ரன் வள்ளல்'

ஒரு இன்னிங்சில் அதிக ரன்களை வழங்கிய பவுலர்கள் பட்டியலில் ஐதராபாத் அணியின் இஷாந்த் சர்மா முன்னிலை வகி்க்கிறார். இவர், கடந்த 2013ல் நடந்த சென்னைக்கு எதிரான போட்டியில் 4 ஓவரில் ஒரு விக்கெட் கூட வீ்ழ்த்தாமல் 66 ரன்கள் வழங்கினார். டில்லியின் உமேஷ் யாதவ் (65 ரன், எதிர்-பெங்களூரு, 2013), பஞ்சாப் அணியின் சந்தீப் சர்மா (65, எதிர்-ஐதராபாத், 2014 ), புனே அணியின் அசோக் டிண்டா (63, எதிர்-மும்பை, 2013), டில்லியின் வருண் ஆரோன் (63, எதிர்-சென்னை, 2012) ஆகியோரும் ரன் வள்ளல்களாக திகழ்ந்தனர்.

ரசல் 'சரவெடி'

ஐ.பி.எல்., தொடரில் அதிக 'ஸ்டிரைக் ரேட்' வைத்துள்ள பேட்ஸ்மேன்கள் வரிசையில் டில்லி, கோல்கட்டா அணிகளுக்காக விளையாடிய ஆன்ட்ரி ரசல் முன்னிலையில் உள்ளார். இவரது 'ஸ்டிரைக்ரேட்' 173.41. இவரை அடுத்து கிறிஸ் மோரிஸ் (166.66), மேக்ஸ்வெல் (161.61), சேவக் (155.44) ஆகியோர் அதிக 'ஸ்டிரைக்ரேட்' வைத்துள்ளனர்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மலிங்கா அசத்தல்

மலிங்கா அசத்தல்

ஏப்ரல் 05,2017 ஐ.பி.எல்., தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில், மும்பை அணியின் லசித் மலிங்கா முன்னிலை வகிக்கிறார். இவர், 98 போட்டியில் 143 விக்கெட் வீழ்த்தினார். இவரை ...
இதுவரை சாம்பியன்கள்

இதுவரை சாம்பியன்கள்

ஏப்ரல் 05,2017 ஐ.பி.எல்., அரங்கில், சென்னை (2010, 2011), கோல்கட்டா (2012, 2014), மும்பை (2013, 2015) அணிகள் அதிகபட்சமாக தலா 2 முறை கோப்பை வென்றன. ராஜஸ்தான் (2008), டெக்கான் (2009), ஐதராபாத் (2016) அணிகள் தலா ஒரு முறை ...
சபாஷ் கேப்டன்

சபாஷ் கேப்டன்

ஏப்ரல் 05,2017 ஐ.பி.எல்., அரங்கில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த பெருமையை சென்னை, புனே அணிகளுக்காக விளையாடிய தோனி தன்வசப்படுத்தியுள்ளார். இவர், 143 போட்டிக்கு (83 வெற்றி, 59 தோல்வி, ...