Dinamalar

பயமின்றி ‘பாயும் புலி’ பும்ரா! ,  
 

பயமின்றி ‘பாயும் புலி’ பும்ரா!

ராஜ்கோட்: ஐ.பி.எல்., தொடரின் 'ஹீரோ'வாக மாறியுள்ளார் பும்ரா. பரபரப்பான சூப்பர் ஓவரை' பதட்டப்படாமல் வீசிய இவர், மும்பை அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

இந்தியாவில் 10வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் மும்பை, குஜராத் அணிகள் மோதின. முதலில் விளையாடிய குஜராத் அணி 153 ரன்கள் எடுத்தது. மும்பை அணியும் இதே (153) 'ஸ்கோரை' எடுக்க போட்டி 'டை' ஆனது, பின், நடந்த 'சூப்பர் ஓவரில்' மும்பை அணி 11 ரன்கள் எடுக்க, குஜராத் 12 ரன்களை விரட்டியது.

இதில் 'யார்க்கர்' புகழ் பும்ரா பந்துவீசினார். முதல் பந்து'நோ பால்', அடுத்து 'வைடு' என தடுமாறினார். பின் பாயும் புலி போல இலக்கு நோக்கி துல்லியமாக வீசினார். எதிரணியின் மெக்கலம், பின்ச் திணறினர். முடிவில், 6 ரன்கள் மட்டும் எடுத்த குஜராத் வீழ்ந்தது.

இது குறித்து பும்ரா கூறியது:

மும்பை அணியின் சக வீரர் மலிங்காவுடன் சேர்ந்து 'யார்க்கர்' முறையில் பந்துவீசி பயிற்சி மேற்கொள்வேன். தவிர, கடைசி கட்ட ஓவர்களில் துல்லியமாக பந்துவீசுவது குறித்து கூடுதல் கவனம் செலுத்துவேன்.

குஜராத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், முதல் முறையாக சூப்பர் ஓவரில் பவுலிங் செய்தது பதட்டமாக இருந்தது. கேப்டன் ரோகித்,' இதை சாதாரண ஓவரைப்போல நினைத்துக்கொள். எவ்வித நெருக்கடியையும் உணர வேண்டாம்,' என, அறிவுறுத்தினார். எதிர்மறையான எண்ணங்களுக்கு இடம் தராமல், எங்களின் திட்டத்தை செயல்படுத்தினேன். முடிவில், வெற்றி கிடைத்தது மகிழ்ச்சி.

கடைசி சில ஓவர்களில் எங்கள் வீரர்கள் அடுத்தடுத்து சிக்கினர். இது, கிரிக்கெட்டில் சகஜம்தான். எதிர் வரும் போட்டியில் 'பேட்டிங்கில்' எழுச்சி பெறுவோம் என நம்புகிறேன்.

இவ்வாறு பும்ரா கூறினார்.

பிறந்த நாள் பரிசு

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,'' குஜராத் அணிக்கு எதிரான வெற்றி எனக்கு சிறந்த பிறந்தநாள் பரிசாக அமைந்தது. 'சூப்பர் ஓவரில்' முதல் முறையாக விளையாடியது வித்தியாசமாக இருந்தது,'' என்றார்.

ரெய்னா புகழாரம்

குஜராத் கேப்டன் ரெய்னா கூறுகையில்,'' மும்பை வீரர் பும்ரா அசத்தலாக பந்துவீசினார். இவரின் ரிவர்ஸ் 'சுவிங்' மற்றும் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை,'' என்றார்.

7வது 'டை'

ஐ.பி.எல்., அரங்கில் மொத்தம் 7 போட்டிகள் 'டை' ஆனது. பின் சூப்பர் ஓவரில் முடிவு எட்டப்பட்டது. 2009, 2010ல் தலா 1, 2013ல் 2, பின் 2014, 2015, , 2017ல் தலா ஒரு போட்டிகள் சூப்பர் ஓவருக்கு சென்றன.

ஆன்ட்ரூ விலகல்

ரெய்னா வீசிய 11வது ஓவரின் முதல் பந்தை மும்பையின் பார்த்திவ் பவுண்டரிக்கு விரட்டினார். இதை தடுக்க முற்பட்ட குஜராத் வீரர் ஆன்ட்ரூ டையின் (ஆஸி.,) இடது தோள்பகுதியில் காயம் ஏற்பட்டது இதனால், விரைவில் ஆஸ்திரேலியா திரும்புகிறார். இத்தொடரில் 'ஹாட்ரிக்' சாதனை நிகழ்த்திய இவர்,மீதமுள்ள ஐ.பி.எல்., போட்டிகளிலிருந்து விலகுகிறார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மும்பை தோல்வி: பிரித்தி ஜிந்தா மகிழ்ச்சி

மும்பை தோல்வி: பிரித்தி ஜிந்தா மகிழ்ச்சி

மே 21,2018 புனே: 'மும்பை அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு செல்லாதது மகிழ்ச்சி,' என பிரித்தி ஜிந்தா தெரிவித்ததாக 'வீடியோ வெளியானது. ஐ.பி.எல்., 11வது சீசனில் நடப்பு சாம்பியன் மும்பை அணி ...
வரம் தந்த வார்ன்: குல்தீப் பெருமிதம்

வரம் தந்த வார்ன்: குல்தீப் பெருமிதம்

மே 16,2018 கோல்கட்டா: ''ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் வார்னை, 'ரோல் மாடலாக' வைத்துள்ளேன். இவர் போட்டியை நேரடியாக பார்த்ததால் கிடைத்த ஊக்கம்தான் ராஜஸ்தானுக்கு ...
அசராத அம்பதி ராயுடு: கேப்டன் தோனி பாராட்டு

அசராத அம்பதி ராயுடு: கேப்டன் தோனி பாராட்டு

மே 14,2018 புனே: ''வேகம், சுழல் என எவ்வித பந்துவீச்சையும் கண்டு அசராமல் ரன் சேர்க்கும் தகுதி அம்பதி ராயுடுவுக்கு உள்ளது,'' என, சென்னை அணி கேப்டன் தோனி, புகழாரம் ...