Dinamalar

எந்த ‘ஸ்டைல்’ சிறந்தது: சேவக் சொல்றத கேளுங்க ,  
 

எந்த ‘ஸ்டைல்’ சிறந்தது: சேவக் சொல்றத கேளுங்க

''எனது ஆட்டத்தை வீரர்கள் அப்படியே பின்பற்ற வேண்டாம். தங்களுக்கு என தனித்துவமான 'ஸ்டைலை' உருவாக்கி விளையாட வேண்டும்,'' என, பஞ்சாப் அணி பயிற்சியாளர் சேவக் தெரிவித்தார்.

ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணி பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் சேவக் உள்ளார். அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற இவர், டெஸ்ட் போட்டியை கூட விறுவிறுப்பாக்கினார். இவரைப்போல விளையாட இளம் வீரர்களும் விரும்புகின்றனர்.

இது குறித்து சேவக் கூறியது:

அனுபவ வீரர்களிடமிருந்து இளம் நட்சத்திரங்கள் சிலவற்றை கற்றுக்கொள்ளலாம். இதற்காக, இவரின் ஆட்டத்தை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு வீரரும் தனித்துவமாக செயல்பட வேண்டும். துவக்க காலத்தில், நானும், சச்சினைப்போல விளையாடத்தான் விருப்பப்பட்டேன். பின், இவரைப்போல ஆட முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். எனக்கு என தனி 'ஸ்டைலை' உருவாக்கி விளையாடினேன். இதனால், என்னைப்போலவோ அல்லது வேறு யாருடைய வழியையும் பின்பற்ற வேண்டாம்.

உதவியாக அமையும்:

நமது நாட்டில், ஒவ்வொருவரும் அறிவுரையை தாராளமாக வழங்குவர். இதில் தேவையான விஷயத்தை மட்டும் வீரர்கள் எடுத்துக்கொள்ளலாம். மனதளவில் எப்போதும் உறுதியாக இருக்க வேண்டும். இது, தன்னம்பிக்கையுடன் விளையாட உதவியாக அமையும். பயிற்சியாளர் என்ற முறையில் 'டிரசிங் ரூமில்'வீரர்களுக்கு இடையே நல்ல புரிதலை உருவாக்குவேன். இது, சிறப்பான ஆட்டத்திற்கும் கைகொடுக்கும். இவ்வாறு சேவக் கூறினார்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு! *இது ரோகித் ‘பார்முலா’

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு! *இது ரோகித் ‘பார்முலா’

மே 22,2017 ஐதராபாத்: ''ஒரு அணியாக இணைந்து போராடியதால், பத்தாவது ஐ.பி.எல்., தொடரில் கோப்பை வெல்ல முடிந்தது,'' என, மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறினார். இந்தியாவில், 10வது ...
சபாஷ் வாஷிங்டன் சுந்தர்: புதிய‘சுழல் புயலாக’அவதாரம்

சபாஷ் வாஷிங்டன் சுந்தர்: புதிய‘சுழல் புயலாக’அவதாரம்

மே 17,2017 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் 'சுழல்' ஜாலம் காட்டுகிறார் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர். 'பவர்-பிளே' ஓவர்களில் அசத்தும் இவர், புனே அணியை பைனலுக்கு அழைத்துச் ...
எனது சிறந்த இன்னிங்ஸ்: மகிழ்ச்சியில் ஸ்ரேயாஸ்

எனது சிறந்த இன்னிங்ஸ்: மகிழ்ச்சியில் ஸ்ரேயாஸ்

மே 11,2017 கான்பூர்: ''குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 96 ரன்கள் குவித்தது மகிழ்ச்சி. ஐ.பி.எல்., தொடரில் எனது சிறந்த இன்னிங்சாக இது அமைந்தது,'' என, டில்லி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ...