Dinamalar

எந்த அணிக்கு ‘பிளே–ஆப்’ வாய்ப்பு: டில்லியால் மாறியது கணிப்பு ,  
 

எந்த அணிக்கு ‘பிளே–ஆப்’ வாய்ப்பு: டில்லியால் மாறியது கணிப்பு

டில்லி: ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணி, ஐதராபாத்தை வீழ்த்தியதை அடுத்து, 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழையும் அணிகளின் மீதான கணிப்பும் மாறியுள்ளது.

இந்தியாவில் 10வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. நேற்று முன்தினம் டில்லியில் நடந்த லீக் போட்டியில் டில்லி, ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 185 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை துரத்திய டில்லி அணி தோல்வி அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக, கேப்டன் கருண் நாயர் (39) , கோரி ஆண்டர்சன் (41*) கைகொடுக்க வெற்றி பெற்றது. தொடர்ந்து 5 தோல்விக்குப்பின் முதல் வெற்றியை எட்டிப்பிடித்தது. இதன் மூலம், ஐதராபாத் அணியின் 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முந்திய மும்பை: புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் 'பிளே-ஆப்' சுற்றில் விளையாடும். இதன்படி, 16 புள்ளிகள் பெற்றுள்ள மும்பை அணி முதல் அணியாக முன்னேறிவிட்டது. கோல்கட்டா (14 புள்ளி), புனே (14) அணிகளின் வாய்ப்பும் கிட்டத்தட்ட உறுதி தான். நான்காவது இடங்களை பிடிக்கத்தான் போட்டி நிலவுகிறது. ஒருவேளை, டில்லி அணியை ஐதராபாத் (13) வீழ்த்தி இருந்தால் 15 புள்ளியுடன் மூன்றாவது இடத்தை உறுதி செய்திருக்கலாம். இதில் வீழ்ந்து இருப்பதால், இனி ஐதராபாத் மீதமுள்ள 3 போட்டிகளில் குறைந்தது 2ல் வெல்ல வேண்டும். இதற்கு எதிர்மாறாக நடந்தால் 15 புள்ளி மட்டுமே பெறும்.

இது தவிர, மற்ற அணிகளின் வாய்ப்பு:

* டில்லி அணி (6) தனது மீதமுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 16 புள்ளியுடன் அடுத்த சுற்றுக்குள் நுழையலாம்.

* பஞ்சாப் அணியை (8) பொறுத்தவரை மீதமுள்ள 5 போட்டிகளில் 4ல் வெல்ல வேண்டும்.

* குஜராத் அணியின் (6) வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. ஒருவேளை, மீதமுள்ள 4 போட்டிகளிலும் வாகை சூடினால் அதிசயம் நிகழலாம்.

* பெங்களூரு அணி ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்டது.

அதிகரித்த விறுவிறுப்பு: இப்படி எந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் என்ற கணிப்பை, சமீபத்திய டில்லி வெற்றி மாற்றி உள்ளது. இதனால், எதிர் வரும் போட்டிகளின் முடிவும் முக்கியமானதாக மாறிவிட்டது. தொடரின் விறுவிறுப்பும் அதிகரித்துவிட்டது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மும்பைக்கு பிரார்த்திக்கும் நீட்டா அம்பானி

மும்பைக்கு பிரார்த்திக்கும் நீட்டா அம்பானி

மே 14,2018 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யும் சக உரிமையாளர் நீட்டா அம்பானியின் 'வீடியோ' வைரலாகி வருகிறது. மும்பை அணி சக உரிமையாளர் ...
ஒரே ஒரு ‘செல்பி’ சார்...

ஒரே ஒரு ‘செல்பி’ சார்...

மே 12,2018 புதுடில்லி: பெங்களூரு அணி பேட்டிங்கின் போது, மைதானத்தில் புகுந்த ரசிகர் ஒருவர், கோஹ்லியுடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தார். ஐ.பி.எல்., தொடரின் 11வது சீசன் தற்போது ...
வருகிறது பெண்கள் ஐ.பி.எல்.,

வருகிறது பெண்கள் ஐ.பி.எல்.,

மே 12,2018 மும்பை: 'பிளே ஆப்' சுற்றுக்கு முன், ஐ.பி.எல்., லெவன், பி.சி.சி.ஐ., லெவன் அணிகள் பங்கேற்கும் பெண்கள் 'டுவென்டி-20' கண்காட்சி போட்டி நடக்கவுள்ளது. ஐ.பி.எல்., தொடரின் 11வது ...