Dinamalar

‘ஹாட்ரிக்’ தருணம்: உனத்கட் உற்சாகம் ,  
 

‘ஹாட்ரிக்’ தருணம்: உனத்கட் உற்சாகம்

ஐதராபாத்: ''மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கடைசி கட்ட ஓவரை கட்டுக்கோப்பாக வீசினேன். இந்த நம்பிக்கைதான் 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்த கைகொடுத்தது,'' என, புனே வீரர் உனத்கட் தெரிவித்தார்.

இந்தியாவில் 10வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் புனே, ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் விளையாடிய புனே அணி 148 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய ஐதராபாத் அணி உனத்கட் 'வேகத்தில்' சிதறியது. எதிரணிக்கு கடைசி ஓவரில் 13 ரன் தேவை என்ற நிலையில், இவர் கட்டுக்கோப்பாக வீசினார். மூன்று, நான்கு, ஐந்தாவது பந்தில் விக்கெட் வீழ்த்தி 'ஹாட்ரிக்' சாதனை நிகழ்த்தி வெற்றிக்கு கைகொடுத்தார்.

இது குறித்து உனத்கட் கூறியது: கடந்த மாதம் மும்பைக்கு எதிரான லீக் போட்டியில் கடைசி ஓவரை நான்தான் வீசினேன். அதில் இரு விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு உதவினேன். இது சாதகமாக அமைந்ததால், எனது திறமை மீது நம்பிக்கை ஏற்பட்டது. இதுதான், ஐதராபாத்துக்கு எதிராகவும் சாதிக்க கைகொடுத்தது. இந்த வெற்றி புள்ளிப்பட்டியலில் முன்னேறவும் உதவியது மகிழ்ச்சி. கோல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் கடைசி கட்டத்தில் (19வது ஓவர்) 21 ரன்கள் வழங்கினேன். இந்த நிலையில், 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தியது 'ஸ்பெஷலான' தருணமாக அமைந்தது. இவ்வாறு உனத்கட் தெரிவித்தார்.

3வது வீரர்

ஐ.பி.எல்., வரலாற்றில் ஒரு ஓவரில் ஒரு ரன் கூட வழங்காமல் மூன்று விக்கெட் வீழ்த்திய 3வது பவுலர் என்ற பெருமை பெற்றார் உனத்கட். இதற்கு முன், மலிங்கா (மும்பை), பத்ரீ (பெங்களூரு) இந்த சாதனையை எட்டி இருந்தனர்.

முதலிடம்

ஐதராபாத்துக்கு எதிராக அசத்திய உனத்கட், ஐ.பி.எல்., அரங்கில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தை பால்க்னருடன் (குஜராத்) பகிர்ந்து கொண்டார். இவர் ஏற்கனவே பெங்களூரு சார்பில் (எதிர்- டில்லி, 2013) இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். இருவரும் இதுவரை இரண்டு முறை 5 விக்கெட் வீழ்த்தி உள்ளனர்.

100வது விக்கெட்

ஐதராபாத் வீரர் புவனேஷ்வரை வீழ்த்திய உனத்கட், 'டுவென்டி-20' அரங்கில் தனது 100வது விக்கெட்டை எட்டினார். இதுவரை 78 போட்டியில் 100 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு! *இது ரோகித் ‘பார்முலா’

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு! *இது ரோகித் ‘பார்முலா’

மே 22,2017 ஐதராபாத்: ''ஒரு அணியாக இணைந்து போராடியதால், பத்தாவது ஐ.பி.எல்., தொடரில் கோப்பை வெல்ல முடிந்தது,'' என, மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறினார். இந்தியாவில், 10வது ...
சபாஷ் வாஷிங்டன் சுந்தர்: புதிய‘சுழல் புயலாக’அவதாரம்

சபாஷ் வாஷிங்டன் சுந்தர்: புதிய‘சுழல் புயலாக’அவதாரம்

மே 17,2017 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் 'சுழல்' ஜாலம் காட்டுகிறார் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர். 'பவர்-பிளே' ஓவர்களில் அசத்தும் இவர், புனே அணியை பைனலுக்கு அழைத்துச் ...
எனது சிறந்த இன்னிங்ஸ்: மகிழ்ச்சியில் ஸ்ரேயாஸ்

எனது சிறந்த இன்னிங்ஸ்: மகிழ்ச்சியில் ஸ்ரேயாஸ்

மே 11,2017 கான்பூர்: ''குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 96 ரன்கள் குவித்தது மகிழ்ச்சி. ஐ.பி.எல்., தொடரில் எனது சிறந்த இன்னிங்சாக இது அமைந்தது,'' என, டில்லி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ...