Dinamalar

ராசியில்லாத ஆம்லா சதம் ,  
 

 ராசியில்லாத ஆம்லா சதம்

மொகாலியில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஆம்லா 104 ரன்கள் எடுக்க, பஞ்சாப் அணி 189 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய குஜராத் அணிக்கு டுவைன் ஸ்மித் (74) கைகொடுக்க, பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதற்கு முன், இந்துாரில் நடந்த போட்டியில் ஆம்லா, 60 பந்தில் 104 ரன்கள் எடுக்க, பஞ்சாப் அணி 198 ரன்கள் குவித்தது. பின் மும்பை அணிக்கு ஜாஸ் பட்லர் (77 ரன்), நிதிஷ் ராணா (62) கைகொடுக்க, பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது.

இதன்மூலம் ஆம்லா சதம் அடித்தால் பஞ்சாப் அணி தோற்கும் எ்ன்ற எண்ணம் உருவாகியுள்ளது.

ஏழு முறை:

ஐ.பி.எல்., வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் இதுவரை 7 முறை நிகழ்ந்துள்ளது. முதன்முறையாக 2008ல் நடந்தது. ராஜஸ்தானுக்கு எதிராக டெக்கான் அணியின் சைமண்ட்ஸ் 53 பந்தில் 117 ரன்கள் எடுத்தார். பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் கிரீம் ஸ்மித் (71), யூசுப் பதான் (61) அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.

அதன்பின், 2010ல் ராஜஸ்தானின் யூசுப் பதான் (100, எதிர்-மும்பை), 2011ல் மும்பையின் சச்சின் (100*, எதிர்-கொச்சி), 2014ல் பஞ்சாப் அணியின் விரிதிமன் சகா (115*, எதிர்-கோல்கட்டா), 2016ல் பெங்களூருவின் கோஹ்லி (100*, எதிர்-குஜராத்), இம்முறை பஞ்சாப் அணியின் ஆம்லா (104*, எதிர்-மும்பை மற்றும் 104, எதிர்-குஜராத்) ஆகியோர் சதமடித்த போதிலும், அவர்கள் சார்ந்திருந்த அணி தோல்வியை தழுவியது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
சாதித்துக் காட்டிய இளம் வீரர்கள்! * ஐ.பி.எல்., தொடரில் கண்டுபிடிப்பு

சாதித்துக் காட்டிய இளம் வீரர்கள்! * ஐ.பி.எல்., தொடரில் கண்டுபிடிப்பு

மே 22,2017 புதுடில்லி: பத்தாவது ஐ.பி.எல்., தொடரில் ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, பசில் தம்பி உள்ளிட்ட திறமையான இளம் வீரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். வரும் காலத்தில் இவர்கள், இந்திய ...
தோனி மாதிரி முடியுமா

தோனி மாதிரி முடியுமா

மே 22,2017 ஐதராபாத்: 'தோனி விட சிறந்தவர் ஸ்மித்' என, பேசிய புனே அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். ஐ.பி.எல்., சென்னை அணி கேப்டனாக இருந்தவர் ...
 ‘லக்கி’ சந்தீப் சர்மா

‘லக்கி’ சந்தீப் சர்மா

மே 06,2017 பெங்களூரு: கெய்ல், கோஹ்லி, டிவிலியர்ஸ் ஆகிய மூன்று நட்சத்திர வீரர்களையும் ஒரே போட்டியி்ல் அவுட்டாக்கிய உற்சாகத்தில் மிதக்கிறார் சந்தீப் சர்மா. பெங்களூரு, சின்னசாமி ...