Dinamalar

எனது சிறந்த இன்னிங்ஸ்: மகிழ்ச்சியில் ஸ்ரேயாஸ் ,  
 

எனது சிறந்த இன்னிங்ஸ்: மகிழ்ச்சியில் ஸ்ரேயாஸ்

கான்பூர்: ''குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 96 ரன்கள் குவித்தது மகிழ்ச்சி. ஐ.பி.எல்., தொடரில் எனது சிறந்த இன்னிங்சாக இது அமைந்தது,'' என, டில்லி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.

இந்தியாவில் பத்தாவது ஐ.பி.எல்., 'சீசன்' நடக்கிறது. இதில், கான்பூரில் நடந்த லீக் போட்டியில் டில்லி, குஜராத் அணிகள் மோதின. முதலில் விளையாடிய குஜராத் அணி 195 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை துரத்திய டில்லி அணி 15 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின், தனி வீரராக அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 57 பந்தில் 96 ரன்கள் விளாசி வெற்றிக்கு கைகொடுத்தார்.

இது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கூறியது:

குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 96 ரன்கள் குவித்தது மகிழ்ச்சி. போட்டியை வெற்றிகரமாக 'பினிஷிங்' செய்திருந்தால் இன்னும் உற்சாகம் அடைந்திருப்பேன். ஐ.பி.எல்., தொடரில் எனது சிறந்த இன்னிங்சாக இது அமைந்தது.

கடந்த சில போட்டிகளில் எனது 'பேட்டிங்' வரிசையை மாற்றி நான்காவது இடத்தில் களமிறங்குகிறேன். இதனால், அணியின் வெற்றிக்கு உதவ வேண்டிய பொறுப்பில் உள்ளேன். இது சவாலானது என்றாலும், எந்த வரிசையில் விளையாடுவதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

ஐ.பி.எல்.,தொடரை பொறுத்தவரை முதலில் நிதானமாக செயல்பட வேண்டும். பின், களத்தில் நின்றுவிட்டால் ரன் குவிக்கலாம். எதிர் வரும் போட்டிகளில் இன்னும் அதிக ரன்கள் எடுப்பேன் என நம்புகிறேன்.

இவ்வாறு ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மும்பை தோல்வி: பிரித்தி ஜிந்தா மகிழ்ச்சி

மும்பை தோல்வி: பிரித்தி ஜிந்தா மகிழ்ச்சி

மே 21,2018 புனே: 'மும்பை அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு செல்லாதது மகிழ்ச்சி,' என பிரித்தி ஜிந்தா தெரிவித்ததாக 'வீடியோ வெளியானது. ஐ.பி.எல்., 11வது சீசனில் நடப்பு சாம்பியன் மும்பை அணி ...
வரம் தந்த வார்ன்: குல்தீப் பெருமிதம்

வரம் தந்த வார்ன்: குல்தீப் பெருமிதம்

மே 16,2018 கோல்கட்டா: ''ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் வார்னை, 'ரோல் மாடலாக' வைத்துள்ளேன். இவர் போட்டியை நேரடியாக பார்த்ததால் கிடைத்த ஊக்கம்தான் ராஜஸ்தானுக்கு ...
அசராத அம்பதி ராயுடு: கேப்டன் தோனி பாராட்டு

அசராத அம்பதி ராயுடு: கேப்டன் தோனி பாராட்டு

மே 14,2018 புனே: ''வேகம், சுழல் என எவ்வித பந்துவீச்சையும் கண்டு அசராமல் ரன் சேர்க்கும் தகுதி அம்பதி ராயுடுவுக்கு உள்ளது,'' என, சென்னை அணி கேப்டன் தோனி, புகழாரம் ...