Dinamalar

மும்பை அணி வெற்றி ,  
 

மும்பை அணி வெற்றி

கோல்கட்டா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி, கோல்கட்டாவை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.

பத்தாவது ஐ.பி.எல்., தொடர் லீக் போட்டியில் நேற்று மும்பை, கோல்கட்டா அணிகள் மோதின. மழை காரணமாக 30 நிமிடம் தாமதமாக ஆட்டம் துவங்கியது. 'டாஸ்' வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், பீல்டிங் தேர்வு செய்தார்.

மும்பை அணிக்கு சவுரப் திவாரி, சிம்மன்ஸ் (0) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. கேப்டன் ரோகித் (27) கைவிட, சவுரப் திவாரி 52 ரன் எடுத்தார். அம்பதி ராயுடு 63 ரன் விளாசினார். போலார்டு (13) ஏமாற்ற, மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன் எடுத்தது.

பின் களமிறங்கிய கோல்கட்டா அணிக்கு நரைன் (0), காம்பிர் (21), உத்தப்பா (2), லின் (26), யூசுப் பதான் (20) ஏமாற்றினர். கிராண்ட்ஹோம் (29), மணிஷ் பாண்டே (33) அணியை கைவிட்டனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன் தேவை என்ற நிலையில், 4 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. கோல்கட்டா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 164 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

இதையடுத்து, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை (20), ஐதராபாத் (17) அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. கோல்கட்டா தோற்ற போதும், 16 புள்ளியுடன், அதிக ரன் ரேட் ( 0.641) உள்ளதால், இந்த அணியின் 'பிளே ஆப்' வாய்ப்பு உறுதியானது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
 விடியவிடிய கொண்டாடிய மும்பை! * ஐ.பி.எல்., கோப்பை உற்சாகம்

விடியவிடிய கொண்டாடிய மும்பை! * ஐ.பி.எல்., கோப்பை உற்சாகம்

மே 22,2017 ஐதராபாத்: ஐ.பி.எல்., தொடரில் மூன்றாவது முறையாக கோப்பை வென்ற மும்பை அணியினர், விடியவிடிய கொண்டாடி மகிழ்ந்தனர். ஐதராபாத்தில் நேற்று முன் தினம் நடந்த 10வது ஐ.பி.எல்., ...
இரட்டை மகிழ்ச்சியில் ரோட்ஸ்

இரட்டை மகிழ்ச்சியில் ரோட்ஸ்

மே 22,2017 மும்பை: மும்பை அணி பீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ், மீண்டும் அப்பா ஆனார். இவருக்கு மகன் பிறந்துள்ளார். தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ், 47. ...
கோப்பை வென்றது மும்பை: கடைசி பந்தில் ‘திரில்’ வெற்றி

கோப்பை வென்றது மும்பை: கடைசி பந்தில் ‘திரில்’ வெற்றி

மே 22,2017 ஐதராபாத்: 'யானைக்கு தும்பிக்கை...மும்பைக்கு தன்னம்பிக்கை' என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஐ.பி.எல்., பைனலில் கடைசி பந்து வரை போராடி, ஒரு ரன் வித்தியாசத்தில் ...