Dinamalar

‘பிளே–ஆப்’ சுற்றில் புனே: பஞ்சாப் அணி ஏமாற்றம் ,  
 

‘பிளே–ஆப்’ சுற்றில் புனே: பஞ்சாப் அணி ஏமாற்றம்

புனே: ஐ.பி.எல்., முக்கிய லீக் போட்டியில் மிரட்டிய புனே அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து, 'பிளே-ஆப்' சுற்றுக்குள் ஜோராக நுழைந்தது. மோசமாக விளையாடிய பஞ்சாப் அணி, வௌியேறியது.

புனேயில் நேற்று நடந்த பத்தாவது ஐ.பி, எல்., தொடரி்ன் லீக் போட்டியில் பஞ்சாப், புனே மோதின. இதில், வென்றால் மட்டுமே 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இரு அணிகளும் களமிறங்கின.

கடந்த சில நாட்களாக இங்கு மழை பெய்ததால், ஆடுகளம் துவக்கத்தில் 'வேகங்களுக்கு' ஒத்துழைக்கும். இதனை உணர்ந்த புனே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 'டாஸ்' வென்றதும் சாமர்த்தியமாக 'பவுலிங்' தேர்வு செய்தார்.

உனத்கட் அபாரம்:

பஞ்சாப் அணி எடுத்த எடுப்பிலேயே ஆட்டம் கண்டது. உனத்கட் வீசிய முதல் பந்தில் கப்டில்(0) காலியானார். அடுத்து வந்தவர்களும் ஏனோ தானோ என விளையாட, ஏதோ 'ஹைலைட்ஸ்' பார்ப்பது போல விக்கெட் வீழ்ச்சி இருந்தது. ஷான் மார்ஷ்(10) விரைவில் வெளியேறினார். 'வேகத்தில்' மிரட்டிய உனத்கட் 'பீல்டிங்கிலும்' பட்டையை கிளப்பினார். இவரது துல்லிய 'த்ரோ'வில் மார்கன்(4) ரன் அவுட்டானார். முன்னதாக வந்த டிவாட்டியா(4), உனத்கட்டின் 'சூப்பர் கேட்ச்சில்'

வெளியேறினார். கேப்டன் மேக்ஸ்வெல்(0) அணியை கைவிட, முதல் 6 ஓவரில் பஞ்சாப் 32 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. சிறிது நேரம் போராடிய அக்சர் படேல் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். சகா(13), ஸ்வப்னில்(10) இஷாந்த்(1), மோகித்

சர்மா(6) ஏமாற்றினர். பஞ்சாப் அணி 15.5 ஓவரில் 73 ரன்களுக்கு சுருண்டது. புனே சார்பில் ஷர்துல் தாகூர் 3, உனத்கட் 2 விக்கெட் வீழ்த்தினர்.

சுலப வெற்றி:

போகிற போக்கில் எட்டக்கூடிய இலக்கை விரட்டிய புனே அணிக்கு ரகானே, திரிபாதி நல்ல துவக்கம் தந்தனர். சந்தீப் சர்மா, மோகித் சர்மா, இஷாந்த் சர்மா பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய திரிபாதி உள்ளூர் ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார். இவர், 28 ரன்களுக்கு அவுட்டானார். பின் மேக்ஸ்வெல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரகானே விரைவான வெற்றி தேடித் தந்தார். புனே அணி 12 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. ரகானே(34), ஸ்மித்(15) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்டநாயகன் விருதை உனத்கட் வென்றார்.

இது குறைவு

கடந்த போட்டியில் மும்பைக்கு எதிராக 230 ரன்கள் விளாசிய பஞ்சாப் அணி, நேற்று படுமோசமாக பேட்டிங் செய்தது. 73 ரன்களுக்கு சுருண்டு. ஐ.பி.எல்., அரங்கில் தனது குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் 2015ல் பெங்களூரு அணிக்கு எதிராக 88 ரன்கள் எடுத்திருந்தது. இது, ஒட்டுமொத்த ஐ.பி.எல்., அரங்கில் 7வது குறைந்த ஸ்கோர்.

தோனி '100'

நேற்று உனத்கட் பந்துவீச்சில் சகா கொடுத்த 'கேட்ச்' வாய்ப்பை கோட்டைவிட்டு துவக்கத்தில் தடுமாறினார் புனே அணியின் தோனி. இதிலிருந்து மீண்ட இவர், அக்சர் படேல் அடித்த பந்தை துடிப்பாக பிடித்தார். இதன் மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் நுாறு விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான இரண்டாவது கீப்பர் என்ற பெருமை பெற்றார். 157 போட்டிகளில் மொத்தம் 101(71 கேட்ச், 30 ஸ்டம்பிங்) விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்டுள்ளார். முதலிடத்தில் குஜராத் அணியின் தினேஷ் கார்த்திக்(152 போட்டியில் 80 கேட்ச் 26 ஸ்டம்பிங்=106) உள்ளார்.

9வது முறை

ஐ.பி.எல்., அரங்கில் தோனி ராசி தொடர்கிறது. இவர் இடம் பெற்ற அணி, பத்து தொடரில், 9 முறை(சென்னை 8 புனே 1) 'பிளே-ஆப்' சுற்றை சந்தித்திருக்கிறது. இந்த இலக்கை எட்டிய இன்னொரு வீரர் ரெய்னா( சென்னை 8 கடந்த முறை குஜராத்).

பைனல் வாய்ப்பு எப்படி

ஐ.பி.எல்., தகுதிச்சுற்று- 1ல், புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த மும்பை,புனே அணிகள் மோதும். இதில் வெல்லும் அணி, நேரடியாக பைனலுக்கு செல்லும். தோற்ற அணிக்கு தகுதிச் சுற்று 2ல் விளையாட இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்.

* எலிமினேட்டர் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடம் பிடித்த ஐதராபாத், கோல்கட்டா அணிகள் மோதும். இதில் வெல்லும் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேற முடியாது. தகுதிச்சுற்று 2ல் விளையாட வேண்டும். தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

* தகுதிச் சுற்று-2ல், தகுதிச்சுற்று-1ல் தோற்ற அணி, எலிமினேட்டரில் வென்ற அணிகள் மோதும். இதில் வெல்லும் அணி பைனலுக்கு செல்லும். தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

* தகுதிச்சுற்று 1, 2ல் வென்ற அணிகள் பைனலில் மோதும்.

'பிளே-ஆப்' அட்டவணை

தகுதிச் சுற்று- 1

மே 16 மும்பை-புனே, மும்பை, இரவு 8:00

எலிமினேட்டர்

மே 17 ஐதராபாத்-கோல்கட்டா, பெங்களூரு, இரவு 8:00

தகுதிச்சுற்று -2

மே 19 -- --- இடம்: பெங்களூரு, இரவு 8:00

பைனல்

மே 21 --- -- இடம்: ஐதராபாத், இரவு 8:00Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
கோல்கட்டாவை சமாளிக்குமா ராஜஸ்தான்

கோல்கட்டாவை சமாளிக்குமா ராஜஸ்தான்

மே 22,2018 கோல்கட்டா: ஐ.பி.எல்., தொடரின் 'எலிமினேட்டரில்' கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், தோல்வி அடையும் அணி வெளியேற நேரிடும். இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்., ...
சென்னை ‘சூப்பர் கிங்’ டுபிளசி: பைனலுக்கு அழைத்து சென்றார்

சென்னை ‘சூப்பர் கிங்’ டுபிளசி: பைனலுக்கு அழைத்து சென்றார்

மே 22,2018 மும்பை: ஐ.பி.எல்.,தொடரின் பைனலுக்கு ஜோராக முன்னேறியது சென்னை அணி. தகுதிச் சுற்று 1ல் தனிநபராக அசத்திய டுபிளசி அரைசதம் கடந்து வெற்றிக்கு கைகொடுத்தார். ஐதராபாத் அணி 2 ...
பைனலுக்கு முன்னேறுமா சென்னை கிங்ஸ்

பைனலுக்கு முன்னேறுமா சென்னை கிங்ஸ்

மே 21,2018 மும்பை: ஐ.பி.எல்., தொடரின் முதல் தகுதிச் சுற்றில் இன்று சென்னை, ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் மோதிய 2 போட்டிகளிலும் ஐதராபாத்தை வீழ்த்திய ...