Dinamalar

பெங்களூரு ஆறுதல் வெற்றி ,  
 

பெங்களூரு ஆறுதல் வெற்றி

புதுடில்லி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோஹ்லி அரைசதம் விளாச, பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. டில்லி அணியின் 'பேட்டிங்' எடுபடவில்லை.

டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த பத்தாவது ஐ.பி.எல்., தொடரின் கடைசி லீக் போட்டியில் டில்லி, பெங்களூரு மோதின. இரு அணிகளும் ஏற்கனவே 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்து விட்டதால், முக்கியத்துவம் இல்லாத போட்டியாக அமைந்தது. 'டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் கோஹ்லி, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

கோஹ்லி அரைசதம்:

பெங்களூரு அணிக்கு விஷ்ணு வினோத்(3) ஏமாற்றினார். பின் கோஹ்லி, கெய்ல் சேர்ந்து அசத்தினர். நதீம் 'சுழலில்' கெய்ல்(48) சிக்கினார். அரைசதம் கடந்த கோஹ்லி(58), ஜாகிர் பந்தில் வீழ்ந்தார். கடைசி கட்டத்தில் ஜாதவ்(12), சச்சின் பேபி(12) கைகொடுத்தனர். பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. வாட்சன்(4), .நேகி(13) அவுட்டாகாமல் இருந்தனர்.

ரிஷாப் ஆறுதல்:

சவாலான இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு சாம்சன்(0) அதிர்ச்சி அளித்தார்.கருண் (26), ஸ்ரேயாஸ்(32), ரிஷாப் பன்ட்(45) ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். அடுத்த வந்த சாமுவேல்ஸ்(0), ஆண்டர்சன்(3), கம்மின்ஸ்(7) விரைவில் வெளியேற, சிக்கல் ஏற்பட்டது.

கடைசி ஓவரில் டில்லி வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன. நேகியின் அபார பந்துவீச்சில் முகமது ஷமி(21), நதீம்(2) அவுட்டாக, டில்லி அணி 20 ஓவரில் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. கேப்டன் ஜாகிர்(1) அவுட்டாகாமல் இருந்தார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து (2)
Arunachalam Chockiah - Devakottai - 630302,இந்தியா
16 மே,2017 - 09:16 Report Abuse
Arunachalam Chockiah Date: 16 May 2017 Note: அரசுப் அலுவங்களிலும் அரசு நிறுவனங்களிலும் பணிபுரிவோர் மொத்த மக்கள் தொகையில் 10% இருப்பார்களா? இவர்கள் வாழ்க்கை மட்டும் நன்றாக அமைந்தால் போதுமா? மீதமுள்ள 90% மக்களில் அரசியல் வாதிகள், தொழில் அதிபர்கள், வணிகர்கள், சுயதொழில் செய்வோர் பெரும்பாலும் வசதியுடன் இருப்பார்கள். ஆனால் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், உழவு, நெசவு போன்ற பாவப்பட்ட தொழில்களை செய்பவர்கள் மற்றும் அன்றாடம் கூலி வேலை வீட்டு வேலை செய்யும் ஏழை எளியமக்கள் இன்னும் வேலையில்லா இளைஞர்கள் எல்லோரும் இளம் வயது முதலே வாழ்க்கையில் எவ்வளவு போராட வேண்டியுள்ளது. அவர்களெல்லாம் ஓய்வு காலத்தைப் பற்றி எண்ணக்கூட இயலாது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு ஓய்வூதியத்துக்கு ஒரு வரம்பு கொண்டுவரவேண்டும்.
0 0
Arunachalam Chockiah - Devakottai - 630302,இந்தியா
16 மே,2017 - 09:15 Report Abuse
Arunachalam Chockiah Date: 16 May 2017 Note: ஓய்வூதியத்திற்கு ஒரு வரம்பு வைக்கவேண்டும். மாவட்ட ஆட்சியராக இருந்தாலும், நீதிபதியாக இருந்தாலும் சரி அதிக பட்சம் மாதாமாதம் ரூபாய் 25 ஆயிரத்துக்கு மேல் கொடுக்கக் கூடாது. வேலையில் இருக்கும்போது பதவிக்கும் தகுதிக்கும் ஏற்றாற்போல் ஊதியம் வழங்கப்படுகிறதே. அவரவர் வாழ்க்கை தரத்திற்கு ஏற்றாற்போல் வருமானம் இருக்கவேண்டுமென்று அவர்கள் விரும்பினால் ஏதேனும் தொழிலோ வணிகமோ வேலையோ செய்து கூடுதலான வருமானம் ஈட்டிக்கொள்ள வேண்டுமே தவிர அரசையோ நிறுவனங்களையோ நிர்பந்திக்கக்கூடாது. அவர்கள் பணிக்காலத்திலேயே நிறைய சேமித்து வைத்துக் கொள்ளவேண்டும்.ஓய்வூதியம் வழங்கியே ரயில்வேபோன்ற அரசு நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படு கின்றன.
1 0
 பட்லர்...கொஞ்சம் ‘ஓவர்’

பட்லர்...கொஞ்சம் ‘ஓவர்’

மே 23,2017 லண்டன்: பத்தாவது ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணிக்காக விளையாடியவர் இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர், 26. இத்தொடரில் 10 போட்டியில் களமிறங்கி 272 ரன்கள் எடுத்தார். பின் இங்கிலாந்து ...
 விடியவிடிய கொண்டாடிய மும்பை! * ஐ.பி.எல்., கோப்பை உற்சாகம்

விடியவிடிய கொண்டாடிய மும்பை! * ஐ.பி.எல்., கோப்பை உற்சாகம்

மே 22,2017 ஐதராபாத்: ஐ.பி.எல்., தொடரில் மூன்றாவது முறையாக கோப்பை வென்ற மும்பை அணியினர், விடியவிடிய கொண்டாடி மகிழ்ந்தனர். ஐதராபாத்தில் நேற்று முன் தினம் நடந்த 10வது ஐ.பி.எல்., ...
இரட்டை மகிழ்ச்சியில் ரோட்ஸ்

இரட்டை மகிழ்ச்சியில் ரோட்ஸ்

மே 22,2017 மும்பை: மும்பை அணி பீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ், மீண்டும் அப்பா ஆனார். இவருக்கு மகன் பிறந்துள்ளார். தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ், 47. ...