Dinamalar

‘காற்றாக’ புனே...‘கனலாக’ மும்பை! * பைனலுக்கு முன்னேற மல்லுக்கட்டு ,  
 

‘காற்றாக’ புனே...‘கனலாக’ மும்பை! * பைனலுக்கு முன்னேற மல்லுக்கட்டு

மும்பை: ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கும் தகுதிச் சுற்று 1ல் மும்பை, புனே அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறும்.

பத்தாவது ஐ.பி.எல்., தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த மும்பை (20 புள்ளி), புனே (18), 'நடப்பு சாம்பியன்' ஐதராபாத் (17), கோல்கட்டா (16) அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.

மும்பை, வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் பைனலுக்கான தகுதிச் சுற்று 1ல் மும்பை, புனே அணிகள் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, வரும் 21ல் ஐதராபாத்தில் நடக்கவுள்ள பைனலுக்கு நேரடியாக தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு நாளை பெங்களூருவில் நடக்கவுள்ள 'எலிமினேட்டர்' போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்

கைகொடுப்பாரா ரோகித்:

லீக் சுற்றில் விளையாடிய 14 போட்டியில் 10 வெற்றி, 4 தோல்வி என 20 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த மும்பை அணி, சொந்த மண்ணில் களமிறங்குவது சாதகமான விஷயம். இம்முறை இங்கு விளையாடிய 7 போட்டியில் 5ல் வெற்றி பெற்றது. போலார்டு (362 ரன்), பார்த்திவ் படேல் (325), கேப்டன் ரோகித் சர்மா (282) நம்பிக்கை அளிக்கின்றனர். சமீபத்திய போட்டிகளில் சொதப்பிய நிதிஷ் ராணாவுக்கு (333 ரன்) பதில், அம்பதி ராயுடு களமிறக்கப்படலாம்.

'கனலாக' பந்துவீசும் மலிங்கா (9 விக்.,), மெக்லீனகன் (18 விக்.,), பும்ரா (15) மிரட்டுகின்றனர், குர்னால் பாண்ட்யா, (10), ஹர்பஜன் சிங் (8), ஹர்திக் பாண்ட்யா (6) எழுச்சி காண வேண்டும்.

ஸ்டோக்ஸ் இழப்பு:

லீக் சுற்றில் 14 போட்டியில் 9 வெற்றி, 5 தோல்வி என 18 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்த புனே அணிக்கு, பேட்டிங்கில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (420 ரன்), ராகுல் திரிபாதி (388) கைகொடுக்கின்றனர். 'காஸ்ட்லி' வீரர் பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து திரும்பியது பேரிழப்பு. சிறந்த 'ஆல்-ரவுண்டரான' இவரது இடத்தை பூர்த்தி செய்ய சரியான வீரர் இல்லாதது பின்னடைவு. பெரிய அளவில் சோபிக்காத ரகானே (282) ரன் மழை பொழிய வேண்டும். 'மிடில்-ஆர்டரில்' மனோஜ் திவாரி (252) உள்ளார். 'சூறாவளி காற்றாக' சுழன்று அடிக்கக்கூடிய அனுபவ தோனி (240) இருப்பது மிகப் பெரும் பலம்.

பவுலிங்கில் ஜெயதேவ் உனத்கத் (21 விக்.,) பலம் சேர்க்கிறார். இம்ரான் தாகிர் (18) இல்லாதது சுழற்பந்துவீச்சில் பாதிப்பை ஏற்படுத்தலாம். டேனியல் கிறிஸ்டியன் (9 விக்.,), ஷர்துல் தாகூர் (8) ஆறுதல் தருகின்றனர். 'பவர் பிளே' ஓவர்களில் திறமை காட்டும் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் நம்பிக்கை தருகிறார்.தொடருமா ஆதிக்கம்

இத்தொடரில் விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் புனே அணி, மும்பையை வென்றது. இன்றும் அசத்தினால், 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யலாம்.வார்னர் விளாசல்

பத்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான லீக் சுற்று முடிந்த நிலையில், அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான பட்டியலில் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், முன்னிலை வகிக்கிறார். இவர், 13 போட்டியில் ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 604 ரன்கள் குவித்துள்ளார்.

இவ்வரிசையில் 'டாப்-7' பேட்ஸ்மேன்கள்:

வீரர் போட்டி ரன்

வார்னர் (ஐதராபாத்) 13 604

தவான் (ஐதராபாத்) 13 468

காம்பிர் (கோல்கட்டா) 14 454

ரெய்னா (குஜராத்) 14 442

ஆம்லா (பஞ்சாப்) 10 420

ஸ்மித் (புனே) 13 420

மணிஷ் (கோல்கட்டா) 14 396புவனேஷ்வர் ஆதிக்கம்

அதிக விக்கெட் கைப்பற்றியவர்களுக்கான வரிசையில் ஐதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், முதலிடத்தில் உள்ளார். இவர், 13 போட்டியில் 25 விக்கெட் சாய்த்துள்ளார்.

இவ்வரிசையில் 'டாப்-7' பவுலர்கள்:

வீரர் போட்டி விக்கெட்

புவனேஷ்வர் (ஐதராபாத்) 13 25

உனத்கத் (புனே) 10 21

இம்ரான் (புனே) 12 18

மெக்லீனகன் (மும்பை) 13 18

ரஷித் (ஐதராபாத்) 13 17

வோக்ஸ் (கோல்கட்டா) 13 17

சந்தீப் (பஞ்சாப்) 13 17'சிக்சர் மீட்டர்'

இதுவரை 671 சிக்சர் அடிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் அணி கேப்டன் மேக்ஸ்வெல், அதிகபட்சமாக 26 சிக்சர் விளாசினார். அடுத்த நான்கு இடங்களில் ஐதராபாத்தின் வார்னர் (24 சிக்சர்), டில்லியின் ரிஷாப் பன்ட் (24), கோல்கட்டாவின் உத்தப்பா (21), மும்பையின் போலார்டு (21) உள்ளனர்.சாதனை துளிகள்...

லீக் சுற்றில் மொத்தம் 17,820 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் 10, 198 ரன்கள், சிக்சர், பவுண்டரிகள் மூலம் கிடைத்தன.

* மும்பை அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 230 ரன்கள் எடுத்தது, இம்முறை ஒரு இன்னிங்சில் பதிவான அதிகபட்ச ஸ்கோர்.

* கோல்கட்டாவுக்கு எதிராக ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், 126 ரன்கள் எடுத்தது, ஒரு இன்னிங்சில் ஒரு வீரரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்.

* ஐந்து சதம் அடிக்கப்பட்டுள்ளது. இதில் பஞ்சாப் அணியின் ஆம்லா, 2 முறை சதமடித்தார். வார்னர் (ஐதராபாத்), ஸ்டோக்ஸ் (புனே), சாம்சன் (டில்லி) தலா ஒரு முறை சதமடித்தனர்.

* 91 அரைசதம் பதிவாகியுள்ளன.

* மொத்தம் 657 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.

* மூன்று 'ஹாட்ரிக்' விக்கெட் பதிவாகியுள்ளன. ஆன்ட்ரூ டை (குஜராத்), ஜெயதேவ் உனத்கத் (புனே), சாமுவேல் பத்ரீ (பெங்களூரு) ஆகியோர் இச்சாதனை படைத்துள்ளனர்.

* மும்பை - குஜராத் அணிகள் மோதிய ஒரே ஒரு போட்டி 'டை' ஆனது. பின், 'சூப்பர் ஓவரில்' மும்பை வென்றது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
கோல்கட்டாவை சமாளிக்குமா ராஜஸ்தான்

கோல்கட்டாவை சமாளிக்குமா ராஜஸ்தான்

மே 22,2018 கோல்கட்டா: ஐ.பி.எல்., தொடரின் 'எலிமினேட்டரில்' கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், தோல்வி அடையும் அணி வெளியேற நேரிடும். இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்., ...
சென்னை ‘சூப்பர் கிங்’ டுபிளசி: பைனலுக்கு அழைத்து சென்றார்

சென்னை ‘சூப்பர் கிங்’ டுபிளசி: பைனலுக்கு அழைத்து சென்றார்

மே 22,2018 மும்பை: ஐ.பி.எல்.,தொடரின் பைனலுக்கு ஜோராக முன்னேறியது சென்னை அணி. தகுதிச் சுற்று 1ல் தனிநபராக அசத்திய டுபிளசி அரைசதம் கடந்து வெற்றிக்கு கைகொடுத்தார். ஐதராபாத் அணி 2 ...
பைனலுக்கு முன்னேறுமா சென்னை கிங்ஸ்

பைனலுக்கு முன்னேறுமா சென்னை கிங்ஸ்

மே 21,2018 மும்பை: ஐ.பி.எல்., தொடரின் முதல் தகுதிச் சுற்றில் இன்று சென்னை, ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் மோதிய 2 போட்டிகளிலும் ஐதராபாத்தை வீழ்த்திய ...