Dinamalar

தோனி மாதிரி முடியுமா ,  
 

தோனி மாதிரி முடியுமா

ஐதராபாத்: 'தோனி விட சிறந்தவர் ஸ்மித்' என, பேசிய புனே அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

ஐ.பி.எல்., சென்னை அணி கேப்டனாக இருந்தவர் தோனி. ஆறு முறை பைனலுக்கு கொண்டு சென்ற இவர், 2010, 11ல் கோப்பை வென்று தந்தார். தவிர, 2010, 14ல் சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்றுள்ளார்.

சூதாட்ட சர்ச்சை காரணமாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இரு ஆண்டு தடை விதிக்கப்பட்டன. இதனால், கடந்த ஆண்டு புனே அணிக்கு கேப்டன் ஆனார் தோனி.

இதில் 7வது இடம் பிடிக்க, பத்தாவது ஐ.பி.எல்., தொடரில் தோனியை நீக்கி விட்டு, ஸ்மித்தை கேப்டனாக நியமித்தது புனே அணி நிர்வாகம். இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

தவிர, தோனியின் பேட்டிங்கையும் விமர்சித்தனர். இதற்கெல்லாம் 'ஹைலைட்டாக' பைனலுக்கு முதல் நாள், அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறுகையில்,'' தோனியை விட புத்திக்கூர்மையில் ஸ்மித் சிறந்தவர், எப்படியும் கோப்பை வென்று தருவார்,'' என்றார்.

மும்பை அணிக்கு எதிரான பைனலில், வெற்றிக்கு 4 பந்தில் 7 ரன் தேவை என்ற நிலையில் ஸ்மித் அவுட்டாக, அணியின் கோப்பை கனவும் கலைந்தது.

இந்நிலையில், தோனி குறித்த விமர்சனத்துக்கு, அவரது ரசிகர்கள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதன் விவரம்:

சர் ஜடேஜா என்ற ரசிகர் வௌியிட்ட 'டுவிட்டர்' செய்தியில்,' டியர் ஸ்மித், எல்லோரும் தோனியைப் போல இருக்க முடியாது, போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு செல்ல வேண்டும் என முடிவெடுத்த பின், அதை எப்படி வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதையும், அவரைப் போல நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளார்.

மிஸ்டர் டி என்ற ரசிகர் கூறுகையில்,'' நான் புனேயை சேர்ந்தவன் தான். ஆனால், இவர்களுக்கு என் ஆதரவு இல்லை. ஏனெனில், நமது 'ஜாம்பவான்' வீரரை அவர்கள் அவமதித்து விட்டனர். யார் கிங் என்பது இப்போது கோயங்காவுக்கு தெரிந்திருக்கும்,'' என்றார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வார்ன் ‘லெவன்’ அணி: கோஹ்லிக்கு இடம்

வார்ன் ‘லெவன்’ அணி: கோஹ்லிக்கு இடம்

மே 27,2018 புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் வார்னின் சிறந்த 'லெவன்' அணியில் கேப்டனாக தோனி மற்றும் கோஹ்லி, பும்ரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் ...
மும்பைக்கு பிரார்த்திக்கும் நீட்டா அம்பானி

மும்பைக்கு பிரார்த்திக்கும் நீட்டா அம்பானி

மே 14,2018 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யும் சக உரிமையாளர் நீட்டா அம்பானியின் 'வீடியோ' வைரலாகி வருகிறது. மும்பை அணி சக உரிமையாளர் ...
ஒரே ஒரு ‘செல்பி’ சார்...

ஒரே ஒரு ‘செல்பி’ சார்...

மே 12,2018 புதுடில்லி: பெங்களூரு அணி பேட்டிங்கின் போது, மைதானத்தில் புகுந்த ரசிகர் ஒருவர், கோஹ்லியுடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தார். ஐ.பி.எல்., தொடரின் 11வது சீசன் தற்போது ...