Dinamalar

IPL2018

ஒரே ஒரு ‘செல்பி’ சார்... ,  
 

ஒரே ஒரு ‘செல்பி’ சார்...

புதுடில்லி: பெங்களூரு அணி பேட்டிங்கின் போது, மைதானத்தில் புகுந்த ரசிகர் ஒருவர், கோஹ்லியுடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தார்.

ஐ.பி.எல்., தொடரின் 11வது சீசன் தற்போது நடக்கிறது. இதில், போட்டிகள் நடக்கும் போது, மைதானத்துக்குள் ரசிகர்கள் புகுந்து, வீரர்களுக்கு 'அன்புத் தொல்லை' தருவது அதிகமாக உள்ளது. சென்னை அணியில் தோனி பேட்டிங் செய்த போது, ஒருமுறை திடீரென ரசிகர் ஒருவர் உள்ளே வந்து, தோனியின் காலில் விழுந்து வணங்கினார். மற்றொரு முறை இதேபோல, வேறொரு ரசிகர், தோனியின் காலில் விழுந்து மகிழ்ந்தார்.

இப்போ 'செல்பி'

நேற்று பெங்களூரு அணி பேட்டிங் செய்த போது (5வது ஓவர்), திடீரென ஒரு ரசிகர், அலைபேசியுடன் உள்ளே வந்தார். நேராக கோஹ்லிக்கு அருகில் சென்று, அப்படியே நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, காலை தொட்டு மகிழ்ந்தார். பின், 'ஒரே ஒரு 'செல்பி' எடுத்துக்கிறேன் சார்...' என கேட்டுக் கொண்டே, அனுமதிக்காக காத்திருக்காமல் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தார்.

பாதுகாப்பு சிக்கல்

சர்வதேச போட்டிகளின் போது, இது போன்று ரசிகர்கள் அவ்வளவு எளிதாக நுழைய முடியாது. ஒருவேளை ஐ.பி.எல்., என்பதால், ரசிகர்கள் எளிதாக உள்ளே வந்து விடுகின்றனர் போல.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வார்ன் ‘லெவன்’ அணி: கோஹ்லிக்கு இடம்

வார்ன் ‘லெவன்’ அணி: கோஹ்லிக்கு இடம்

மே 27,2018 புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் வார்னின் சிறந்த 'லெவன்' அணியில் கேப்டனாக தோனி மற்றும் கோஹ்லி, பும்ரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் ...
மும்பைக்கு பிரார்த்திக்கும் நீட்டா அம்பானி

மும்பைக்கு பிரார்த்திக்கும் நீட்டா அம்பானி

மே 14,2018 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யும் சக உரிமையாளர் நீட்டா அம்பானியின் 'வீடியோ' வைரலாகி வருகிறது. மும்பை அணி சக உரிமையாளர் ...
வருகிறது பெண்கள் ஐ.பி.எல்.,

வருகிறது பெண்கள் ஐ.பி.எல்.,

மே 12,2018 மும்பை: 'பிளே ஆப்' சுற்றுக்கு முன், ஐ.பி.எல்., லெவன், பி.சி.சி.ஐ., லெவன் அணிகள் பங்கேற்கும் பெண்கள் 'டுவென்டி-20' கண்காட்சி போட்டி நடக்கவுள்ளது. ஐ.பி.எல்., தொடரின் 11வது ...