Dinamalar

IPL2018

வெளியேறியது கோல்கட்டா அணி ,  
 

வெளியேறியது கோல்கட்டா அணி

கோல்கட்டா: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., தகுதிச் சுற்று-2ல், 14 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த கோல்கட்டா அணி, பைனல் வாய்ப்பை இழந்து வெளியேறியது. மும்பையில், வரும் 27ல் நடக்கவுள்ள பைனலில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்தியாவில், 11வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. நேற்று, கோல்கட்டாவில் நடந்த இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை உரிமையாளராக கொண்ட கோல்கட்டா அணி, ஐதராபாத்தை சந்தித்தது. 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

நல்ல துவக்கம்

ஐதராபாத் அணிக்கு விரிதிமன் சகா (35), ஷிகர் தவான் (34) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. குல்தீப் யாதவ் 'சுழலில்' கேப்டன் வில்லியம்சன் (3) சிக்கினார். சாகிப் அல் ஹசன் (28) 'ரன்-அவுட்' ஆனார். தீபக் ஹூடா (19) நிலைக்கவில்லை. கார்லஸ் பிராத்வைட் (8), யூசுப் பதான் (3) ஏமாற்றினர். அடுத்து வந்த ரஷித் கான், மாவி, பிரசித் வீசிய 19, 20வது ஓவரில் தலா 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். ஐதராபாத் அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 174 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் (34), புவனேஷ்வர் குமார் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

லின் ஆறுதல்

பின் களமிறங்கிய கோல்கட்டா அணிக்கு சுனில் நரைன் (26) அசத்தல் துவக்கம் தந்தார். நிதிஷ் ராணா (22) 'ரன்-அவுட்' ஆனார். ராபின் உத்தப்பா (2), கேப்டன் தினேஷ் கார்த்திக் (8) சொதப்பினர். பொறுப்பாக ஆடிய கிறிஸ் லின் (48) ஆறுதல் தந்தார். ஆன்ட்ரி ரசல் (3), பியுஸ் சாவ்லா (12) சோபிக்கவில்லை. கடைசி ஓவரில் கோல்கட்டாவின் வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்டது. பிராத்வைட் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த மாவி (6), 2வது பந்தில் அவுட்டானார். மூன்றாவது பந்தில் சுப்மன் கில் (30) வெளியேறினார். அடுத்த 3 பந்தில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. கோல்கட்டா அணி, 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 160 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. குல்தீப் (1), பிரசித் (0) அவுட்டாகாமல் இருந்தனர். ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

67

கோல்கட்டா அணி, 6 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 67 ரன் எடுத்திருந்தது. இதன்மூலம் இந்த சீசனில் ஐதராபாத்துக்கு எதிராக 'பவர் பிளே' ஓவரில் அதிக ரன் பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதற்கு முன், ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா அணி, 66 ரன் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது. மூன்றாவது இடத்தில் டில்லி அணி (60 ரன், இடம்: ஐதராபாத்) உள்ளது.

இரண்டாவது முறை

ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு ஐதராபாத் அணி, 2வது முறையாக முன்னேறியது. இதற்கு முன், 2016ல் பைனலுக்கு முன்னேறிய ஐதராபாத் அணி, 8 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி கோப்பை வென்றிருந்தது.

* ஐ.பி.எல்., பைனலில் சென்னை - ஐதராபாத் அணிகள் முதன்முறையாக மோத உள்ளன.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
சொல்லி அடித்த தோனி: சென்னை சாம்பியன் பின்னணி!

சொல்லி அடித்த தோனி: சென்னை சாம்பியன் பின்னணி!

மே 28,2018 சென்னை: தோனிக்கு, 'சென்னை இரண்டாவது தாய் வீடு' போன்றது. தன் மீது விஸ்வாசமாக உள்ள சென்னை ரசிகர்களுக்காக இம்முறை கோப்பை வென்று தர வேண்டுமென உறுதியாக எண்ணினார். ...
‘ஸ்டைல்’ வீரர் ரிஷாப்

‘ஸ்டைல்’ வீரர் ரிஷாப்

மே 28,2018 மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சிறந்த இளம் வீரர் மற்றும் 'ஸ்டைல்' வீரராக ரிஷாப் பன்ட் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., தொடர் நடந்தது. இதில் டில்லி ...
மூன்றாவது முறை

மூன்றாவது முறை

மே 28,2018 ஐ.பி.எல்., அரங்கில் 7வது முறையாக பைனலுக்கு முன்னேறிய சென்னை அணி, மூன்றாவது முறையாக (2010, 2011, 2018) கோப்பை வென்றது. இதன்மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் ...