Dinamalar

IPL2018

கோல்கட்டா தோல்வி ஏன்: தினேஷ் கார்த்திக் விளக்கம் ,  
 

கோல்கட்டா தோல்வி ஏன்: தினேஷ் கார்த்திக் விளக்கம்

கோல்கட்டா: ''ஐதராபாத்துக்கு எதிரான 2வது தகுதிச் சுற்றில் நிதிஷ் ராணாவின் 'ரன்-அவுட்' தோல்விக்கு வித்திட்டது,'' என, கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கோல்கட்டாவில் நடந்த ஐ.பி.எல்., தொடருக்கான 2வது தகுதிச் சுற்றில் கோல்கட்டா அணி, 14 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் வீழ்ந்து, பைனல் வாய்ப்பை கோட்டைவிட்டது. கோல்கட்டா அணி ஒரு கட்டத்தில், 87/1 என வலுவான நிலையில் இருந்த போது நிதிஷ் ராணா, 'ரன்-அவுட்' ஆனார். அதன்பின் வந்த ராபின் உத்தப்பா, கேப்டன் கார்த்திக், ஆன்ட்ரி ரசல் சொற்ப ரன்னில் அவுட்டாகினர். இச்சரிவிலிருந்து மீள முடியாமல் தவித்த கோல்கட்டா அணி தோல்வியை தழுவியது.

இதுகுறித்து கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியது: ஐ.பி.எல்., பைனலுக்கு முன்னேற முடியாமல் போனது வருத்தம். இப்போட்டியில் முக்கியமான கட்டத்தில் நிதிஷ் ராணா 'ரன்-அவுட்' ஆனது திருப்பமாக அமைந்தது. ஒருவேளை இவர் அவுட்டாகாமல் இருந்திருந்தால் நெருக்கடியின்றி விளையாடி வெற்றி பெற்றிருப்போம். தவிர, ராபின் உத்தப்பாவின் 'பார்ம்' ஏமாற்றம் தந்தது.

இம்முறை லீக் சுற்றில் மோதிய இரண்டு போட்டியிலும் ரஷித் கானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருந்தோம். ஆனால் தகுதிச் சுற்றில் துல்லியமாக பந்துவீசிய இவர், 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி நெருக்கடி தந்தார்.

கோல்கட்டாவுக்காக ஒரு அணியாக இணைந்து விளையாடியதை என்றும் மறக்க முடியாது. சுப்மன் கில், பிரசித், நிதிஷ் ராணா போன்ற இளம் வீரர்களை கண்டறிய முடிந்தது. இவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
ரஷித் கானுக்கு சச்சின் புகழாரம்

ரஷித் கானுக்கு சச்சின் புகழாரம்

மே 26,2018 புதுடில்லி: ''உலகின் தலைசிறந்த 'டுவென்டி-20' பவுலர் ரஷித் கான்,'' என, இந்திய ஜாம்பவான் சச்சின் புகழாரம் சூட்டியுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான், ...
காம்பிரை நீக்கியது யார்

காம்பிரை நீக்கியது யார்

மே 23,2018 புதுடில்லி: ''டில்லி அணி கேப்டன் பதவியிலிருந்து விலகிய பின் என்னை 'லெவன்' அணிக்கு தேர்வு செய்யவில்லை. மற்றபடி, நானாக எந்த இடத்திலும் ஒதுங்கி கொள்ளவில்லை,'' என, ...
மும்பை தோல்வி: பிரித்தி ஜிந்தா மகிழ்ச்சி

மும்பை தோல்வி: பிரித்தி ஜிந்தா மகிழ்ச்சி

மே 21,2018 புனே: 'மும்பை அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு செல்லாதது மகிழ்ச்சி,' என பிரித்தி ஜிந்தா தெரிவித்ததாக 'வீடியோ வெளியானது. ஐ.பி.எல்., 11வது சீசனில் நடப்பு சாம்பியன் மும்பை அணி ...