Dinamalar

IPL2018

ரஷித் கானுக்கு சச்சின் புகழாரம் ,  
 

ரஷித் கானுக்கு சச்சின் புகழாரம்

புதுடில்லி: ''உலகின் தலைசிறந்த 'டுவென்டி-20' பவுலர் ரஷித் கான்,'' என, இந்திய ஜாம்பவான் சச்சின் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான், 19. ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் இவர், இந்த சீசனில், 16 போட்டியில் 21 விக்கெட் கைப்பற்றி உள்ளார். கோல்கட்டாவில் நடந்த இரண்டாவது தகுதிச் சுற்றில் 'ஆல்-ரவுண்டராக' அசத்திய இவர், 10 பந்தில் 34 ரன் மற்றும் 4 ஓவரில், 3 விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகனாக ஜொலித்தார். தவிர, 'பீல்டிங்கில்' மிரட்டிய இவர், 2 'கேட்ச்', ஒரு 'ரன்-அவுட்' செய்தார்.

ரஷித் கான் செயல்பாடு குறித்து இந்திய ஜாம்பவான் சச்சின், 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ''ரஷித் கான் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்று எப்போதும் நினைப்பேன். ஆனால் இப்போது இவரை, 'டுவென்டி-20' போட்டிகளில் உலகின் தலைசிறந்த 'சுழல்' வீரர் எனக் கூறுவதில் எவ்வித தயக்கமும் இல்லை. இவரிடம் 'பேட்டிங்' திறமையும் இருப்பது சிறப்பம்சம்,'' என தெரிவித்திருந்தார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
கோல்கட்டா தோல்வி ஏன்: தினேஷ் கார்த்திக் விளக்கம்

கோல்கட்டா தோல்வி ஏன்: தினேஷ் கார்த்திக் விளக்கம்

மே 26,2018 கோல்கட்டா: ''ஐதராபாத்துக்கு எதிரான 2வது தகுதிச் சுற்றில் நிதிஷ் ராணாவின் 'ரன்-அவுட்' தோல்விக்கு வித்திட்டது,'' என, கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் ...
காம்பிரை நீக்கியது யார்

காம்பிரை நீக்கியது யார்

மே 23,2018 புதுடில்லி: ''டில்லி அணி கேப்டன் பதவியிலிருந்து விலகிய பின் என்னை 'லெவன்' அணிக்கு தேர்வு செய்யவில்லை. மற்றபடி, நானாக எந்த இடத்திலும் ஒதுங்கி கொள்ளவில்லை,'' என, ...
மும்பை தோல்வி: பிரித்தி ஜிந்தா மகிழ்ச்சி

மும்பை தோல்வி: பிரித்தி ஜிந்தா மகிழ்ச்சி

மே 21,2018 புனே: 'மும்பை அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு செல்லாதது மகிழ்ச்சி,' என பிரித்தி ஜிந்தா தெரிவித்ததாக 'வீடியோ வெளியானது. ஐ.பி.எல்., 11வது சீசனில் நடப்பு சாம்பியன் மும்பை அணி ...