Advertisement
குறள் அதிகாரம் : பொழுது கண்டு இரங்கல்
எழுத்தின் அளவு:   A+  A-

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

( குறள் எண் : 1230 )

மு.வ : ( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.

சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.

Share  
Bookmark and Share
Advertisement
Advertisement