Advertisement
குறள் அதிகாரம் : அவர் வயின் விதும்பல்
எழுத்தின் அளவு:   அ+  அ-

valluvar வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

( குறள் எண் : 1261 )
குறள் விளக்கம் :

மு.வ : என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.

சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன.

Share  
Bookmark and Share
 
மேலும் குறள்கள்
 

(அல்லது)

குறள் எண் வாயிலாக தேடுக :
  குறள் பால்
  குறள் இயல்
  அதிகாரம்
 
Advertisement
Advertisement