Advertisement
குறள் அதிகாரம் : வெருவந்த செய்யாமை
எழுத்தின் அளவு:   அ+  அ-

valluvar கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை.

( குறள் எண் : 570 )
குறள் விளக்கம் :

மு.வ : கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.

சாலமன் பாப்பையா : மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.

Share  
Bookmark and Share
 
மேலும் குறள்கள்
 

(அல்லது)

குறள் எண் வாயிலாக தேடுக :
  குறள் பால்
  குறள் இயல்
  அதிகாரம்
 
Advertisement
Advertisement