Advertisement
குறள் அதிகாரம் : புல்லறிவாண்மை
எழுத்தின் அளவு:   A+  A-

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.

( குறள் எண் : 847 )

மு.வ : அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.

சாலமன் பாப்பையா : அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.

Share  
Bookmark and Share
Advertisement
Advertisement